"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 2

நண்பர்களே!

ஐரோப்பாவிலிருந்து 24 மணிநேர தமிழ்ஒலிபரப்புச் சேவையினை வழங்கிவரும், ஐரோப்பியத் தமிழ் வானொலி யில், கானம் கலைக்கூடத்தின் தயாரிப்பில், '' இணையத்தில் இன்பத்தமிழ் '' எனும் வாரந்தர நிகழ்ச்சியொன்றை சென்ற வாரத்திலிருந்து, தயாரித்து வழங்கத் தொடங்கியுள்ளதை சென்றவாரத்தில் உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.

இந்த வார நிகழ்ச்சியில், இணையத்தில் இன்பத்தமிழ் பற்றிய மேலதிக குறிப்புக்களுடன்,
இணையத்தில் நல்ல பல பதிவுகளையும், இணையத் தொழில் நுட்பம் குறித்த நல்ல பல தகவல்களை, அழகு தமிழில் எளிமையுறப் பதிவு செய்து வரும், தமிழ்மணத்தின் இவ்வார நட்சத்திரமாகிய சிந்தா நதி அவர்களுடைய தொழில்நுட்பம் குறித்த சிறு செவ்வி, பதிவர் மதி-கந்தசாமி அவர்கள் குரற்பதிவாகப் பதிவு செய்த, ஈழத்துக் கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவிதைப்பாடல் என்பன உள்ளடங்கி வருகின்றது. செவ்வியளித்த சிந்தாநதி அவர்களுக்கும், பதிவர் மதி-கந்தசாமி அவர்களுக்கும், மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்களே! கேட்டுச் சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை.

இந்நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்குரிய ஒலிப்பதிவினை இங்கே கேட்கலாம்.



இணையத்தில் இன்பத்தமிழ் 2


நண்பர்களே! இந்த ஒலிச்செயலி இயங்காவிட்டால், மேலேயுள்ள செயலியில் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at  

7 comments:

மலைநாடான் said...  

test

சோமி said...  

மலை நாடன் அவர்களே நிகழ்ச்சியை தொடர்ச்சியாக கேட்கமுடியாதபடி இடையிடையே தடங்கல் ஏற்பட்டுகொண்டே இருகிறது. இடை நிறுத்தி இடை நிறுத்தி கேட்கிறது. சரி செய்தால் சந்தோசமாகக் கேட்கலாம்.

மலைநாடான் said...  

சோமி!

வெற்றியும் இடையில் தடைப்படுவதாகச் சொன்னார். ஆனால் வசந்தன் கேட்டதாகச் சொன்னார். ஆகவெ வழங்கியில்தான் தடங்கல் ஏற்படுகிறதென நினைக்கின்றேன். மாற்றுவழி உண்டாவெனப் பார்க்கின்றேன்.

✪சிந்தாநதி said...  

பதிவிறக்கிக் கொள்வதற்கென இன்னொரு தளத்திலும் பதிவேற்றம் செய்து சுட்டி தந்தால் நன்று

மலைநாடான் said...  

சோமி!சிந்தாநதி!

விரைவில் மற்றுமொரு இணைப்பையும் தரமுயற்சிக்கின்றேன்.

தவறை அறியத்தந்தமைக்கு நன்றி

Anonymous said...  

நீங்கள் தொகுத்து வழங்கியிருந்த
வானொலி நிகழ்ச்சியைக் கேட்டேன்.
நன்றாக வந்திருந்தது. தமிழ் இணையத்துடன் அறிமுகம் இல்லாதவர்களையும் அதன் பக்கம் இழுத்து வரும் ஆற்றல் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு உண்டு
என்று நினைக்கிறேன்.

மலைநாடான் said...  

நண்பரே!

உங்கள் நல்லபிப்பிராயங்களுக்கு நன்றி.

Post a Comment