"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

சாகரசங்கமம்






தேன்கூடு தமிழ்வலைப்பதிவுத் திரட்டியினை உருவாக்கியவரும், கணனித் தொழில்நுட்ப வல்லுனரும், தமிழார்வலருமாகிய சாகரன் எனும் கல்யாணின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் ஒலிப்பதிவு இது.

இவ் அஞசலிப்பதிவில் பங்குகொண்ட நட்புள்ளங்கள்:-
பாலராஜன் கீதா, துளசி கோபால், மா.சிவகுமார், நாக.இளங்கோவன், விக்னேஷ்(விக்கி), பரஞ்சோதி, சிந்தாநதி, சிறில்அலெக்ஸ், மதிகந்தசாமி, ஆகியோர்

படங்கள் உதவி:- சிந்தாநதி

இசைக்கோப்பிலும், பிரதியாக்கதிலும் உதவி:- ஈழத்து நண்பரகள்.

நண்பரகளே!

இவ் ஒலிப்பதிவினை பிரதிசெய்து, சாகரன் குடும்பத்தினரிடம், கொடுக்கவுள்ளதாக, பாலராஜன்கீதா சொல்லியுள்ளார். ஆகவே இப்பதிவில் கருத்துச் சொல்லும் பகுதியில் சாகரனுக்கான அஞ்சலிகளை மட்டுமே பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ் அஞ்சலி நிகழ்ச்சி குறித்து கருத்துச் சொல்லவிரும்பும் நண்பர்கள் தயவு செய்து இங்கே உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நட்புடன்
மலைநாடான்.

சாகர சங்கமம்



சாகர சங்கமம்








Posted byமலைநாடான் at  

6 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...  

சாகரனுக்கு மரியாதை செலுத்தும் முக்கியமான பதிவை மிக நேர்த்தியாக தயாரித்து இருக்கிறீர்கள். நன்றி. உமர் தம்பி அவர்களுக்கு இப்பொழுது அஞ்சலி செலுத்த காலங்கடந்து விட்டாலும் அவரது நினைவலைகளை தொகுத்து தற்போது வெளியிடுவது அவரைப் போன்று தொண்டாற்ற பலரை உறுதி கொள்ள வைக்கும்.

Unknown said...  

சாகரன் அவர்களோடு எவ்வித அறிமுகமுமில்லாத என்னைப் போன்றவரையும் கூட அவரின் இழப்பு பாதிக்க செய்கிறது எனும்போது அவரின் குடும்பம்?

அவர்களுக்கு இந்த பேரிழப்பை எதிர்கொள்ளும் மனவலிமை வேண்டிக்கொள்கிறேன்...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...  

மிக நேர்த்தியான தயாரிப்பு!
அன்னார் ஆத்மா சாந்தியடையட்டும்

மன்னைகோசை said...  

no words to express for the vacancy created by mr. sagaran in his contributions to tamil. let tamil mother console each and every one.

மலைநாடான் said...  

நண்பர்களே!

உங்கள் உணர்விற்கும், பகிர்வுக்கும் , நன்றிகள்.

செல்வநாயகி said...  

சாகரனுக்கு ஒரு நல்ல நினைவஞ்சலி இவ்வடிவம். நன்றி மலைநாடான்.

Post a Comment