"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 10

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத்தமிழ் வானொலியில் பிரதி ஞாயிறு தோறும், ஐரோப்பிய நேரம் மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகும், " இணையத்தில் இன்பத்தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின் இன்றைய ஒலிபரப்பின் ஒலிப்பதிவு இது.

இன்றைய நிகழ்ச்சியில்,

தமிழ் இணையப் பரப்புத் தொடர்பான தொடர் உரையாடலில், தேடுபொறித் தன்மை மிக்கத் தமிழ்த்தளமாகிய லங்காசிறி. கொம் , பற்றிய சிறு குறிப்பு.

இலங்கை விமானப்படை தலைமையகம் மீதான, விடுதலைப்புலிகளிக் வரலாற்றுச் சிறப்புமிக்க வான் தாக்குதல் பின்னான உணர்வலைகளுடனான கவிதை.

சிலப்பதிகாரக் கானல்வரிப்பாடல்.

இவ்வார வலைப்பதிவர் அறிமுகத்தில் சிறப்பு அறிமுகமாக, எட்டுவயதில் புலத்தி (நோர்வே) லிருந்து வலைப்பதிவு செய்து வரும், குட்டிப்பெண் அஞ்சலியின் அறிமுகமும் செவ்வியும் என்பன வருகின்றன.

நிகழ்ச்சியில் அவரது கவிதையை இணைத்துக்கொள்ள அனுமதியளித்த, பதிவர் ரேகுப்தி அவர்களுக்கும். குட்டிப் பதிவர் அஞ்சலியின் செவ்வியைப் பெற ஒத்துழைப்பு நல்கிய அவரது பெற்றோர்களுக்கும், எனைய உதவிகள் புரிந்த நண்பர்களுக்கும், மிக்க நன்றிகள்.

நிகழ்ச்சியைக் கேட்டுச் சொல்லுங்கள்.

இணையத்தில் இன்பத்தமிழ். 10.mp...





இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at  

5 comments:

வி. ஜெ. சந்திரன் said...  

வணக்கம் மலைநாடான்
நீங்கள் புதிய பதிவுகள் அல்லது ஒரு வலைபதிவரின் பதிவுகள் பற்றிய விடயங்களை இணைக்கும் போது அந்த பதிவுகளுக்குரிய இணைப்பை ஹைப்பலிங் ஆக கொடுத்தால் அந்த பதிவுகளை பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் அந்த பதிவை இலகுவாக அடையமுடியுமல்லவா?

சின்னக்குட்டி said...  

வணக்கம் மலைநாடன்.. இவ்வார வானொலி நிகழ்ச்சி கேட்டேன்.சிறப்பாக இருந்தது நன்றிகள். இளைய பதிவர் அஞ்சலிக்கும் எனது வாழ்த்துக்கள்

மலைநாடான் said...  

வி.ஜெ. சந்திரன்!

நீங்கள் சொல்லிய இதே விடயத்தை இன்னும் ஒரு நண்பர், மின் மடலிலும் குறிப்பிட்டிருக்கிறார். இன்றுமாலைக்குள் நீங்கள் குறிபிட்டபடி அவற்றை இணைத்துவிடுகின்றேன். ஆலோசனைக்கு நன்றி

தமிழ்நதி said...  

அஞ்சலியின் மழலைக் குரலை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றியது. நல்ல ஆளுமையுள்ள பிள்ளையாக வருவா என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். பெரியாக்கள் மாதிரிக் கதைக்காமல் இயல்பாகக் கதைத்தது பிடித்தது. அவவின் கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

'திங்கள் மாலை வெண்குடையான்...'எவ்வளவு காலத்துக்குப் பிறகு கேட்டேன். அற்புதமான பாடல் அல்லவா அது. நன்றி மலைநாடான்

மலைநாடான் said...  

சின்னக்குட்டி!
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

தமிழ்நதி!
உங்கள் ஊகம் சரியென்றே எண்ணுகின்றேன். அஞ்சலி மிக ஆர்வமும் திறமையுமுள்ள பெண்ணாகவே எனக்கும் தெரிகிறாள்.

திங்கள் மாலை வெண்குடை.. பாடல் உஙகளுக்கும் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சி.
கருத்துக்களுக்கு நன்றி.

Post a Comment