"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

தமிழ்மணத்தில் தொடரும், அநாகரிக பதிவுகள் இடுகைகள்.

படைப்புக்களின் அதிஉன்னதமெனப் போற்றப்படுகின்ற மனிதனின் செயற்பாடுகள் பலவும் பலவேளைகளில் மிகக் கேவலமாக அமைந்துவிடுகிறது. அதை நெறிப்படுத்திக்கொள்வதே, நாம் பெற்ற அறிவின் பயன்பாடு. தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சியும், பயன்பாடும் பெற்றுவரும் இவ்வேளையில், தமிழ்வலைப்பதிவுகளில் அன்மைக்காலமாக நடைபெற்றுவரும் புரிந்துணர்வற்ற உரையாடல்களும், எழுத்துக்களும், அயர்ச்சி தருபனவாக இருக்கின்றன. தமிழ்வலைப்பதிவுகள் அதிகம் திரட்டப்படும் தளமான தமிழ்மணத்தில் இதன் வெளிப்பாட்டினை நிறையவே தெரியக்கூடியதாகவிருக்கிறது. இது குறித்து தமிழ்மணநிர்வாகிகளுக்கு பலரும் தனிப்பட்ட முறையில் தமது அதிருப்தியைப் பதிவு செய்திருக்கக் கூடும். ஆயினும் பதிவர்களின் பொதுவான விருப்பதினைத் தெரிவிக்கும் ஒரு யோசனையாகவும், பொதுத்தளமாகவும், இவ்வாக்கெடுப்பினை இத்தளத்தில் முன் வைக்கின்றோம். பதிவர்கள் அனைவரும், பொதுநலம் சார்ந்தும், தமிழ்வலைப்பதிவுகளின் உயர்வு சார்ந்தும், நியாயபூர்வமான கருத்துக்களுக்கு அமைவான தங்கள் வாக்குக்களைச் சமர்ப்பிக்குமாறு பணிவோடு வேண்டுகின்றோம்.






இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் செலுத்தி வாக்களித்தபின் மறக்காது, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் உறுதிப்படுத்தல் இணைப்பில் மூலம் வாக்களிப்பினை உறுதிசெய்யுங்கள். வாக்களிப்பில் கலந்து கொண்ட உங்களுக்கும், வாக்களிப்புக்கு உதவும் தமிழர் வாக்கு நிறுவனத்துக்கும் நன்றிகள். வாக்களிப்புத் தொடர்பான உங்கள் தொடர்புகள் வெளியிடப்படமாட்டாது.

நண்பர்களே! யாரையும் காயப்படுத்தும் நோக்கின்றி பொது நோக்கில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சியில், எந்தவொரு பதிவரது செயலையும் முன்னிறுத்தி உரையாடாது பொதுவான தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பின் தெரிவிக்கலாம். தனிமனித தாக்குதல்களாக வரும் எந்தவொரு கருத்தும் பிரசுரிக்கப்படமாட்டாது. தமிழ்மணவாசகர்கள், பதிவர்களின், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை, விருப்பத்தை, தெரிவிக்க நாம் முன்னெடுக்கும் இம்முயற்சியில் உங்கள் அனைவரது மேலான பங்களிப்பினையும், தருவீர்கள் எனும் நம்பிக்கையுடனும், நட்புடனும்

- மலைநாடான்

வாக்கெடுப்பு முடிவுத்திகதி: 23.03.08

Posted byமலைநாடான் at  

16 comments:

- யெஸ்.பாலபாரதி said...  

நீங்க வேண்டும் என்று நான் வாக்கு போட்டு விட்டேன். :))))

துளசி கோபால் said...  

நாம் அநாகரீகம் என்பது சிலருக்கு நாகரீகமாக இருக்கே(-:

என்ன வரையறை வச்சுருக்கீங்க?

விளக்கமா எது எதுன்னு சொல்லுங்க.

ஆமாம்.......
தமிழ்மணம் ஒரு திரட்டி மட்டும்தான். பதிவர்கள்தான் தங்கள் பதிவு நாகரீகமாக உள்ளதா என முடிவு செய்யணும்

Thamizhan said...  

நாம் எழுதுவது மற்றவர்கள் படிப்பதற்காக.நாம் பேசுவதும் எழுதுவதும் நம்மை யார் என்று மற்றவர்களை எண்ண வைக்கும்.

கருத்துக்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,அதைச் சொல்லும் முறை
வார்த்தைகள் பொது அரங்கில் பேசக்கூடிய வண்ணம் (பார்லியமெண்டேரியன்) இருப்பது நல்லது.

சினிமாவையும்,மற்ற பத்திரிக்கைகளையும் குறை கூறுவோர்
பலர் உள்ளோம்.நாம் முதலில்
தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.

TBCD said...  

மொட்டை தாசன் குட்டையில் விழுந்தான் என்பதுப் போல் இருக்கு நீங்க கொடுத்திருக்கின்ற தேர்வுகள்.. :P

அட, பார்ப்பனீயத்தை எதிர்த்து எழுதினால் கூட அநாகரீகமான பதிவு என்ற விமர்சனம் வருது.

எனவே, வாக்கிற்கான (ஓட்டு என்றுச் சொல்லாதீங்கய்யா...தமிழிலே அழகா வாக்கு என்று இருக்கே ) தேர்வுகளை இன்னும், கொஞ்சம், பிரச்சனைகளைச் சுட்டும் வண்ணம் வைக்க மறுபரிசீலனை செய்யுங்க..

இல்லாங்காட்டி, நான் வாக்கு வேட்டை நடத்திடுவேன்.. :P

Radha Sriram said...  

துளசி சொல்ர மாதிரி பதிவர்கள்தான் தீர்மானம் பண்ணவேண்டும் அவங்க பதிவு நாகரீகமாக இருக்கான்னு...:):)

வெற்றி said...  

மலைநாடார் அண்னை,
கண்டு கனகாலம்.
கன காலத்துக்குப் பிறகு உங்களை பதிவு மூலம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

அண்ணை, யான் இது குறிச்சு ஒரு காரியம் பறைய இஸ்ரப்பட்டு.:-))

நாங்கள் தெருவிலை நடந்து போகேக்கை ஊத்தையோ அல்லாட்டி குப்பையோ இருந்தால் அதிலை உழக்காமல் விலத்திப் போறது போல இப்படியான பதிவுகளைக் கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்.

எனக்குப் படிப்பிச்ச ஒர் பேராசிரியர் சொன்னதுதான் ஞாபகம் வருது.

இணையத்தளம் எண்டுறது கத்தியைப் போல எண்டு அவர் சொன்னார்.

காரணம், கத்தியை மரக்கறி இன்ன பிற வெட்டுற நல்ல தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

அதே கத்தியை ஒருவரைக் கொல்வதற்கும் பயன்படுத்தலாம். ஆக, கத்தியை வைச்சிருக்கிறவற்றை மன நிலையை, பக்குவத்தைப் பொறுத்தது எண்டு அவர் சொல்லியிருந்தார்.

அதுபோலைதான் இணையமும். கண்டதுகளும் வந்து போற இடம். கண்டமாதிரியான பதிவுகளும் வரும்.

'துஷ்டனைக் கண்டால் தூர விலகு' எண்டிற மாதிரி நாங்கள் தான் விலத்திப் போகவேணும் எண்டு நான் நினைக்கிறேன்.

இது என்ரை அபிப்பிராயம். ஏதோ பறையணும் எண்டு இஸ்ரப்பட்டதால இங்கின பறைஞ்சு.

அடுத்தது துளசி ரீச்சர் சொன்னது போல, எது நாகரீகம், எது நாகரிகம் இல்லை எண்டிறதை எப்பிடி வரையறுக்கிறது.

போன சனிக்கிழமை நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லுறேன். நானும் கூட்டாளியளும் பழைய பல சம்பவங்களைக் கதைச்சுக் கொண்டு இருந்தோம். அப்ப ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலை, நான் முலை, முலைப்பால் எண்டு சொல்ல என்ரை கூட்டாளியள் என்னைப் பட்டிக்காட்டான், நாகரீகம் இல்லாமல் , பெம்பிளைப் பிள்ளையளும் இருக்கிற இடத்திலை முலை கிலை எண்டு சொல்லுறேன் எண்டு சொல்லிச்சினம்.

உண்மையா, சிவசத்தியமா, எங்கடை ஊரிலை பெண்களின் மார்பகத்தை முலை எண்டுதான் நாங்கள் சொல்லுறனாங்கள்.

அப்ப நான் அப்பிடிச் சொன்னது அவைக்கு அநாகரிகமாக இருந்திது. ஆனால் எனக்கு அப்பிடித் தெரியேல்லை. காரணம் எங்கடை ஊரிலை நாங்கள் அப்பிடித்தான் கதைக்கிறது.

அடுத்தது, இஞ்சை [தமிழ்மணத்திலை] தங்கடை பதிவை பலரும் எட்டிப் பாக்கவேணும் எண்ட ஒரு ஆசேலை, அப்பிடி இப்பிடி ஏடா கூடமாயத் தலைப்பு வைக்கினம்.

ஆனால், எங்கடை சனமும் பின்னூட்டம்/கின்னூட்டம் போடாட்டிலும், களவாய், பின்னாலை கொல்லைப் புறத்தாலை ஒளிச்சுப் போய் அவேன்ரை பதிவுகளைப் பாக்க, பதிவு சூடான இடுகைக்கு வர, பதிவு போட்டவைக்கு பேய்ச் சந்தோசம். தங்கடை பதிவுக்கு இவ்வளவு சனம் வருகுதெண்டு.

அப்ப நான் என்ன சொல்லுறேன் எண்டால், ஆராவது ஆபாசமாய்த் தலைப்பு வைச்சால், அதை ஒருத்தரும் கொல்லைப்புறமாய்ப் போய் எட்டிப் பாக்காட்டில், அவேன்ரை பதிவுகள் சூடான இடுகைலே வராது. பிறகு, அப்பிடிப் பதிவு போடுறவையும் தங்கடை பாட்டிலை அடங்குவினம்.

ஆக, பின்பக்கமாய்ப் போய் அந்தப் பதிவுகளை எட்டிப் பாக்கிறவை அவடம் போகாமல் நிப்பாட்டினால் எல்லாம் சரிவரும்.

இது விபச்சாரத்தை ஒழிக்கிற மாதிரித்தான். விபச்சாரத்துக்கு போற ஆம்பிளையள் அந்தப் பக்கம் போகாட்டில் விபச்சாரம் ஒழியாட்டிலும் குறைஞ்சு போம்.

அது போலைதான், ஆபாசமாயத் தலைப்பு வைச்சவுடனை அங்கின போறவை நிப்பாட்டினால், இப்படி ஆபாசமாய் எழுதறதுகளும் ஒருத்தரும் வருகினம் இல்லையெண்டு நிப்பாட்டுங்கள்.

நன்னி.

RATHNESH said...  

எனது வாக்கு வெற்றி அவர்களுக்கே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...  

வாக்கு போட்டாச்சுங்க ஐயா!

//அண்ணை, யான் இது குறிச்சு ஒரு காரியம் பறைய இஸ்ரப்பட்டு.:-))//

யானும் அவ்வண்ணமே இஸ்ரப்பட்டு! :-))

பல சமயங்களில் நாமே நம்மை அறியாமல் அநாகரீக இடுகைகளைச் சூடாக்கி விடுகிறோம்!
Ignoring is the best insult என்றும் சொல்லுவார்கள்!
இது போன்ற பிரச்சனைகளைப் பன்முறைத் தாக்குதல் நடத்தித் தான் ஒழிக்க முடியும்! :-(

தமிழ்நதி said...  

"நாங்கள் தெருவிலை நடந்து போகேக்கை ஊத்தையோ அல்லாட்டி குப்பையோ இருந்தால் அதிலை உழக்காமல் விலத்திப் போறது போல இப்படியான பதிவுகளைக் கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்."

என்பதே என் கருத்தும். தாங்கள் எப்படி எழுதவேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்கட்டும். அது சரி!வெற்றி என்ன மலையாளம் படிக்கப் போய்க்கொண்டிருக்கிறீங்களா:)

ILA (a) இளா said...  

//நாங்கள் தெருவிலை நடந்து போகேக்கை ஊத்தையோ அல்லாட்டி குப்பையோ இருந்தால் அதிலை உழக்காமல் விலத்திப் போறது போல இப்படியான பதிவுகளைக் கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்."//
இதுக்குமேலே ஒரு அர்த்தம்/விவரம் வேணுமா? தேவையே இல்லை.

வவ்வால் said...  

இன்றைக்கு வெற்றி அவர்கள் சொன்னதை தான் நானும் ஆரம்பத்திலே பல பின்னூட்டங்களில் சொல்றேன் கண்டுக்காமல் விட்டால் காணாமல் போகும் கூட்டம் அதுனு,, அப்போ யாரும் இதை கேட்கவே இல்லை, இப்போது நாளு பேர் கேட்டால் நன்மையே!

எல்லாம் மழைக்கால தவளைகள் , கொஞ்ச காலம் கத்திட்டு அடங்கிடும்!

ILA (a) இளா said...  

//எல்லாம் மழைக்கால தவளைகள் , கொஞ்ச காலம் கத்திட்டு அடங்கிடும்!//
எப்போ இந்த மழைக்காலம் அடங்குறது?
திரட்டி என்பது திரட்டும் அவ்வளவுதான். அதுக்காக விலக்கனும்னு சொல்றது சரி இல்லை, நீங்க சொடுக்குனாதானே சூடாவுது? சூடாக்காதீங்க. அட அப்படியும் பார்க்கனுமா இன்னொரு சூட்சுமம், தமிழ்மணத்துல இருந்து சொடுக்காம தனியா பதிவின் முகவரிய தட்டிப்பாருங்க. சூடாக வழியே இல்லை.மக்களுக்கு சோம்பேறித்தனம் அதிகம், அதனால சூடாகித்தான் ஆவும். இதனால பல நல்ல பதிவுகள் சூடாகாம போவும்..

வவ்வால் said...  

இளா,

//எப்போ இந்த மழைக்காலம் அடங்குறது? //

எப்போதுமே மழைக்காலமாக இருக்காது கோடையும் வரும்!

//திரட்டி என்பது திரட்டும் அவ்வளவுதான். அதுக்காக விலக்கனும்னு சொல்றது சரி இல்லை, //

விலக்கனும்னு சொன்னப்பதிவுகளிலேயே போய் கண்டுக்காம விடூங்க ஓய்ந்து விடும்னு சொன்னவன்!

நீங்க சொன்னது போல எல்லாம் போய் அதை படித்தே ஆகணுமா என்ன? கெரகம் மக்களா தேடிப்போய் எதுனா கிசு கிசு போல சிற்றின்பமா படிக்கலாம்னு போறாங்க அதை வைத்துக்கொண்டு அலப்பரை செய்துகள்.

நான் எல்லாம் இதனாலே அவற்றைப்படிப்பதே இல்லை. என்றாவது மற்ற இடுகைகளில் வரும் பின்னூட்டம் வாயிலாகவே மேட்டரை தெரிந்துக்கொள்வதுண்டு!(பதிவிலே மொத்தமே 4 வரி ஒன்றன் கீழ் ஒன்றாக அதில் ஒரு நாளு வார்த்தை யோ** தான்) இதைப்படிக்க பதிவுக்கு வேற போகனுமா)

சும்மா கண்டுக்காம லூஸ்ல விட்டாலே ஓய்ந்துவிடும் இந்த சல சலப்பு!

இதுல ஒரு காமெடி என்ன என்றால் மக்கள் பொதுவாக விருப்பப்படும் விஷயங்கள்/ பிரச்சினைகள் குறித்து அங்கே எதுவும் கருத்தே வராது,

உ.ம்:

1)தமிழ் கட்டாயமாக்கல்,
2)தமிழ் புத்தாண்டு,
3)தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு ரத்து,
4)நாடாளுமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு அதன் விளைவு ,
5)தமிழகத்தில் சாயப்பட்டரைகள், சுற்று சூழல் சீர் கேடு
இது போல எதுக்குமே ஒரு கருத்தோ ஆக்கப்பூர்வமான பேச்சோ அங்கே இருக்காது,
ஆனால் ஆறின கஞ்சி போல எதையாவது காபி பேஸ்ட் செய்வது,, யோ** என்று எதாவாது எழுதி பேசுவாங்க அதுக்கே நாளு அல்லக்கைகள் ஆஹா சொல்லும்!கேட்டா இவங்க தான் புதுமையாம் :-))

உண்மைத்தமிழன் said...  

நானும் நேத்தைக்கே 'நீக்கியே ஆகணும்'னு ஓட்டுப் போட்டுட்டேனாக்கும்..

குழவி said...  

நானும் எனது வாக்கை அளித்துவிட்டென்

Anonymous said...  

ஆபாச தலைப்பிருந்தால் அங்கே செல்வதில்லை எனமுடிவு செய்யுங்க போதும்

Post a Comment