இராமன் நிகர் இராவணன்
வெகு நாட்களின் முன் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான இந்த ஒளிப்பதிவு, கொழும்பு கம்பன் விழாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. பேச்சும், பேசுபவரும் பிடித்தமையால் இங்கு பதிவு செய்கின்றேன்.
நன்றி: தீபம் தொலைக்காட்சி
Posted byமலைநாடான் at 1 comments
Labels: ஈழத்துக்கலைஞன். ஈழத்துப்பாடல், ஒளிப்பதிவு
கறுப்பு ஜுலை - ஒரு வாக்கு மூலம்
ஈழத்துத் தமிழர்கள் வாழ்வில், ஜுலை மாதமென்பது கனத்த நினைவுகளைத் தரும் மாதம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த இனக்கலவரம் என்பது, ஈழத்தமிழனின் வாழ்வினை திருப்பிப்போட்ட ஒரு பயங்கரம். அந்த நாட்களின் நினைவாகவும், அதற்கு முந்தைய துயர்களின் பதிவாகவும் அமையும் இந்த நாட்களில், அந்தத்துயர் குறித்த, ஒரு (ஒலிப்பதிவு) வாக்கு மூலத்தை இங்கே கேட்கலாம்.
Posted byமலைநாடான் at 1 comments
Fedna தமிழ்விழா மண்டபத்திலிருந்து..
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமை பெட்னா. இவ்வமைப்பு நடாத்தும் 21வது தமிழ்விழா , ஜுலை மாதம் 4ந்திகதி வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமமாகி, தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாளை மூன்றாம் நாளள் நிகழ்வுகளுடன் இனிதே நிறைவு பெறவுள்ள இந்நிகழ்வுகளள் குறித்து, விழா மண்டடபத்தில்லிருந்து ஒலிவடிவில், ஒரு நேரடி ரிப்போட் Fedna 2008 .
Posted byமலைநாடான் at 1 comments
பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப் பாடல்
20.05.08 அன்று மாரடைப்பில் காலமாகிய, போராளியும், களம்பல கண்ட விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளில் ஒருவருமாகிய பிரிடிகேயர் பால்ராஜ் அவர்களின் நினைவாக வெளிவந்திருக்கும் பாடல். " தானைத் தளபதியே, தமிழீழத்தின் காப்பரனே பால்ராஜ் அண்ணா.."
பாடல் வரிகள், இசை, பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்.
வெளியீடு: கலைப்பண்பாட்டுக்கழகம் . கனடா
சென்று வா வீரனே !
Posted byமலைநாடான் at 2 comments
Labels: அஞ்சலி, ஈழத்துக்கலைஞன். ஈழத்துப்பாடல்
"தண்ணீர்" தலைப்பில் பத்துக் குறும்படங்கள்.
மின்னஞ்சலில் வந்த இணைப்பில் சென்று பார்த்தால், மலேசியாவில் BMW நிறுவனம் நடாத்திய குறும்படப்போட்டியில் பத்துப் படங்கள் இறுதித் தெரிவில் தெரிவாகி, வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கிறது. அதிலே இரண்டு தமிழ்மொழியிலான படங்கள். Broken Bangles, Sing in the Rain என்ற அந்த இரண்டு படங்களிலும், முதலவாது சுகமான கமெராக்கவிதை. இதில் பங்காற்றியவர்களைப் பாராட்டலாம். நீங்களும் படங்களைப் பார்க்க விரும்பின், இங்கே செல்லுங்கள். பார்த்தபின் மறக்காது வாக்களியுங்கள்.
Posted byமலைநாடான் at 3 comments
Labels: அறிவிப்பு, ஒளிப்பதிவு