"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

தமிழ்மணத்தில் தொடரும், அநாகரிக பதிவுகள் இடுகைகள்.

படைப்புக்களின் அதிஉன்னதமெனப் போற்றப்படுகின்ற மனிதனின் செயற்பாடுகள் பலவும் பலவேளைகளில் மிகக் கேவலமாக அமைந்துவிடுகிறது. அதை நெறிப்படுத்திக்கொள்வதே, நாம் பெற்ற அறிவின் பயன்பாடு. தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சியும், பயன்பாடும் பெற்றுவரும் இவ்வேளையில், தமிழ்வலைப்பதிவுகளில் அன்மைக்காலமாக நடைபெற்றுவரும் புரிந்துணர்வற்ற உரையாடல்களும், எழுத்துக்களும், அயர்ச்சி தருபனவாக இருக்கின்றன. தமிழ்வலைப்பதிவுகள் அதிகம் திரட்டப்படும் தளமான தமிழ்மணத்தில் இதன் வெளிப்பாட்டினை நிறையவே தெரியக்கூடியதாகவிருக்கிறது. இது குறித்து தமிழ்மணநிர்வாகிகளுக்கு பலரும் தனிப்பட்ட முறையில் தமது அதிருப்தியைப் பதிவு செய்திருக்கக் கூடும். ஆயினும் பதிவர்களின் பொதுவான விருப்பதினைத் தெரிவிக்கும் ஒரு யோசனையாகவும், பொதுத்தளமாகவும், இவ்வாக்கெடுப்பினை இத்தளத்தில் முன் வைக்கின்றோம். பதிவர்கள் அனைவரும், பொதுநலம் சார்ந்தும், தமிழ்வலைப்பதிவுகளின் உயர்வு சார்ந்தும், நியாயபூர்வமான கருத்துக்களுக்கு அமைவான தங்கள் வாக்குக்களைச் சமர்ப்பிக்குமாறு பணிவோடு வேண்டுகின்றோம்.






இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் செலுத்தி வாக்களித்தபின் மறக்காது, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் உறுதிப்படுத்தல் இணைப்பில் மூலம் வாக்களிப்பினை உறுதிசெய்யுங்கள். வாக்களிப்பில் கலந்து கொண்ட உங்களுக்கும், வாக்களிப்புக்கு உதவும் தமிழர் வாக்கு நிறுவனத்துக்கும் நன்றிகள். வாக்களிப்புத் தொடர்பான உங்கள் தொடர்புகள் வெளியிடப்படமாட்டாது.

நண்பர்களே! யாரையும் காயப்படுத்தும் நோக்கின்றி பொது நோக்கில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சியில், எந்தவொரு பதிவரது செயலையும் முன்னிறுத்தி உரையாடாது பொதுவான தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பின் தெரிவிக்கலாம். தனிமனித தாக்குதல்களாக வரும் எந்தவொரு கருத்தும் பிரசுரிக்கப்படமாட்டாது. தமிழ்மணவாசகர்கள், பதிவர்களின், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை, விருப்பத்தை, தெரிவிக்க நாம் முன்னெடுக்கும் இம்முயற்சியில் உங்கள் அனைவரது மேலான பங்களிப்பினையும், தருவீர்கள் எனும் நம்பிக்கையுடனும், நட்புடனும்

- மலைநாடான்

வாக்கெடுப்பு முடிவுத்திகதி: 23.03.08

Posted byமலைநாடான் at 16 comments