"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 22

வணக்கம் நண்பர்களே!

இன்று மாலை ஐரோப்பியத் தமிழ் வானொலி யில் ஒலிபரப்பாகிய,
" இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

இன்றைய நிகழ்ச்சியில் குறளிசை.

ஆகஸ்ட் மாதம் 5ந்திகதி சென்னையில் நடைபெறும் வலைப்பதிவர் பட்டறை குறித்த பதிவர் பொன்ஸ் அவர்களுடனான உரையாடல்.

இவ்வார அறிமுகத்தில், ஓசை செல்லாவின் "நச்" ன்னு ஒரு வலைப்பூ

மீளிசைப்பாடலாக வந்த திரையிசைப்பாடல்

ஆகியவை இவ்வார நிகழ்ச்சியினை அணிசேர்க்கின்றன.

ஒலிபதிவு சிறக்க உதவிய அனைவர்க்கும் நன்றி.

ஒலிப்பதிவினைக்கேட்க :-

Get this widget Share Track detailsகுறும்படப்போட்டியில் வெற்றிபெற்ற படைப்புக்களைக்காண இங்கே வாருங்கள்.

Posted byமலைநாடான் at 10 comments  

குறும்படப்போட்டி முடிவுகள்


நண்பர்களே!
கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அறிவித்தல் தந்து, மே மாத இறுதியில் நிறைவு செய்யப்பட்ட குறும்படப் போட்டி முடிவுகள், கானம் கலைக்கூடம் இணையப்பக்கத்தில் தற்போது வெளியாகியுள்ளது. நமது இயல்புக்கு அப்பாற்பட்ட சில காரணங்களினால், இம்முடிவுகள் வெளிவரத் தாமதமாகியிருந்தது. அதற்காக அனைவரிடமும் பணிவான மனவருத்தத்தினையும், இப்போட்டியை நடத்துவதற்கு பல்வேறு உதவிகளைப்புரிந்த நண்பர்களுக்கு நன்றிகளையும், தெரிவித்துக் கொள்கின்றோம். குறும்பட ஆர்வலர்களுக்கு, மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியொன்று உள்ளது, வாருங்கள் அங்கே...


- நட்புடன் மலைநாடான்

Posted byமலைநாடான் at 6 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 20

வணக்கம் நண்பர்களே!

01.07.07 ஞாயிறு மாலை ஐரோப்பியத்தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய,

"இணையத்தில் இன்பத்தமிழ்" நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

குறளிசை,

வாரம் ஒரு தகவல்

சுகமான ஒரு பாடல்

இவ்வார அறிமுகத்தில் பதிவர் சயந்தனும், அவரது சாரல் வலைப்பதிவும்.

சிநேகிதியின் குரலில் சஞ்சய்காந்தின் கவிதை ஆகியன, இவ்வார நிகழ்ச்சியை அலங்கரிகின்றன.

நிகழ்ச்சியின் சிறப்புக்குக் காரணமாய அன்புள்ளங்கள் அனைவர்க்கும் நன்றி.

நிகழ்ச்சியைக் கேட்க:-


Get this widget Share Track details


சென்றவாரமும், இவ்வாரமும், நிகழ்ச்சியில், நெடுமாறன் ஐயாவின் செவ்வி இடம்பெற்றது. செவ்வி ஏற்கனவே பதிவலிட்டுள்ளபடியால் அவை இங்கு பதிவு செய்யப்படவில்லை.

Posted byமலைநாடான் at 0 comments  

பழ. நெடுமாறன் ஐயாவோடு பயணிக்கையில்..


11.06.2007 ல் சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில், ஐ.நா சபையை நோக்கி நடைபெற்ற "வெல்கதமிழ்" எழுச்சிப்பேரணிக்காக, தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த, தமிழ்த்தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் ஐயா அவர்களை தமிழ்மணம் பூங்கா விற்காக செவ்வி காணச் சென்றிருந்தேன்.

முன்னரும் அவரை நேரில் பாரத்திருந்த போதும், ஐயா நோய்வாய்ப்பாட்டு குணமடைந்தபின்னர் இப்போதுதான் சந்தித்திருந்தேன். பேரணிநாளின்போது, எந்தவித அயர்சியும் அற்றவராக, பேரணியின் தொடங்கியதிலிருந்து, இறுதிவரை, நடந்து வந்த அன்றே ஆச்சரியத்திலாழ்த்திய அவர், செவ்விகாணச் சென்றபோதும், அசத்தினார் என்றே சொல்ல வேண்டும்.

இலண்டன் நோக்கிப் பயணமாகும் இறுதித்தருணங்களிலேயே அவரைச் சந்திக்க முடிந்தது. ஒளிப்பதிவு நேர்காணலுக்காக ஆயத்தங்களுடன் நான் சென்றிருந்த போதும், இறுதிநேரத்தில் அது இயலாமல் போனது. நேரப்பற்றாக்குறை காரணமாக, விமான நிலையம் செல்லும் வழியில், ஓடும் வாகனத்துக்குள்ளேயே செவ்விகாணத் தீர்மானித்து, எண்ணத்தைச் சொன்னபோது, என்றும் மாறாத அதே மென்னகையோடு, அதிவேகவீதியில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்துக்குள் ஏற்படக்கூடிய இடையூறுகள், வசதியீனங்கள் எதையுமே பொருட்படுத்தாது, மிக இயல்பாக, நிதானமாக, தன் கருத்துக்களைச் சொன்னார்.

அரசியல் ஆர்பாட்டங்களற்ற கருத்துக்களைத் தருவதில், ஐயா அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் எனைக்கவர்ந்தவர்கள். அன்றும் ஐயா அவர்களின் தெளிவான கருத்துக்கள் விரிவாகவந்தன. கேட்கப்படும் கேள்விக்கு எவ்வளவு விரிவாகப் பதில் தரமுடியுமோ, அவ்வளவு விரிவாகப் பதில்தரும் அவர் வழமை அன்றும் தொடர்ந்தது.

தமிழினத் தனித்துவம் பேணியவண்ணம், இந்தியக்குடிமகனாக இருப்பது எப்படி என்பதை நிச்சயம் ஐயாவிடம் கற்றுக்கொள்ளலாம். உண்மையில் அவர் உடைமட்டுமல்ல, உள்ளமும் வெள்ளையானதே. இனி அந்த உத்தமனாரோடான செவ்வி. தமிழ்மணம்பூங்காவில் இடம்பெற்றுள்ள இச்செவ்வியும், முன்னோட்டமும், பூங்காவிற்கான நன்றியறிதலுடன், இங்கே மறுபிரசுரமாகிறது.


ஒளிப்பதிவில் ஒரு முன்னோட்டம்:-


ஒலிப்பதிவில் முழுமையாக :-
Get this widget Share Track details-: நண்பர்களே!
சில தவிர்க்க முடியாத காரணங்களினால், கடந்தசிலவாரங்களுக்கான இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சி ஒலிப்பதிவு வலையேற்றம் செய்ய முடியவில்லை. எதிர்வரும் வாரம் முதல், மீளவும் இணையத்தில் கேட்கக் கூடியதாகவிருக்கும். ஆர்வமுடன் இருந்தவர்க்கும், ஆர்வத்துடன் மின்மடலில் தொடர்புகொண்டு விசாரித்தவர்க்கும், மிக்க நன்றிகள்.

Posted byமலைநாடான் at 17 comments