"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 9

வணக்கம் நண்பர்களே!

"இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார ஒலிபரப்பில் வழமைபோல் பல சுவையான நிகழ்ச்சிகள்.

தமிழ் இணையப்பரப்பில், தமிழ்வலைப்பதிவுகள், வலைப்பதிவுத் திரட்டிகள், என்பனவற்றைப்போல் முக்கியத்துவம் மிக்க, தேடுபொறித்தன்மைகள் கொண்ட முக்கிய இணையத் தளங்களில் குறிப்பிடத்தக்க இரு இணையத்தளங்கள் பற்றிய சிறு குறிப்பு,

தமிழ் ராப் இசைக்கலைஞர் சுஜித் குறித்த சிறு அறிமுகமும், அவரது புதியபாடல் ஒன்றும்,

வாரந்தர அறிமுக வரிசையில் மலேசியாவிலிருந்து வலைப்பதிவு செய்து வரும், மை ப்ரெண்ட் ( என்தோழி) டும் அவரது வலைப்பதிவும் ,

உரைச்சித்திர வரிசையில், அவுஸ்திரேலியாவில் அண்மையில் தனித்தீவில் சிறைவைக்கபட்ட ஈழத்து அகதிகள் குறித்து எழுந்த எதிர்கருத்துக்களின் மீதான சிந்தனையோட்டத்தைக் கொண்ட, பதிவர் பொட் டீக் கடை யின் வலைப்பதிவிலிருந்து பெறப்பட்ட பொருளாதார அகதிகள் சிந்தனைக்கட்டுரை.

ஆகிய நிகழ்ச்சிகள் இவ்வார நிகழ்ச்சியை அணிசேர்க்கின்றன.

நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நண்பர்களே.

நிகழ்ச்சி சிறப்புற அமைய உதவிய அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

நிகழ்ச்சியின் ஒலிப்பதிவைக் கேட்க:-


இணையத்தில் இன்பத்தமிழ் 9.mp3




இச்செயலி இயங்காவிடத்து பக்கப் பட்டையிலுள்ள ஒலிச் செயலியிலும் கேட்கலாம்.



நண்பர்களே! இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சி ஒலிப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய, கீழேயுள்ள நிரலை, உங்கள் வார்புருக்களில் நிறுவி இணைப்புத் தரலாமே?

Posted byமலைநாடான் at 1 comments  

கற்பகவல்லியும் கவிமாமணி வீரமணிஐயரும்.

ஒலிப்பதிவுகள் செய்யத் தொடங்கிய பின் எழுத்துப்பதிவுகள் செய்வதைக் குறைத்துக்கொண்டுள்ளேன் என கானா.பிரபாவும். பாரிஸ் யோகனும் குறைப்பட்டிருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு குரல் பதிவின் மூலமே சந்திக்கின்றேன். எழுதுவதிலும் பார்க்க, வாசிப்பதில் இருக்கும் ஆர்வமே எழுதுவது குறைந்ததிற்க் காரணமேயொழிய வேறில்லை. ஏற்கனவே இப்பதிவை இட வேண்டும் எனவும், இப்பதிவினை குரற்பதிவாக இடுவதே பொருத்தமாக இருக்குமெனவும் எண்ணிருந்ததன் அடிப்படையிலேயே இது அமைகிறது. இதைப்பதிவு செய்யப் பலநாட்களுக்கு முன்னதாக எண்ணியிருந்த போதும், இன்று யோகன் சீர்காழி கோவிந்தராஜனைப் பற்றி யோகன் நினைவு கூர்ந்திருப்பதனூடு இந்தப்பதிவின் நாயகரும் எண்ணபட்டுள்ளார். இனி......




கவிமாமணி வீரமணிஐயர் " கற்பகவல்லி.." பாடல் உருவாக்க நினைவினைப் பகிர்ந்து கொள்கிறார். பார்க்க, கேட்க:

Posted byமலைநாடான் at 21 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 8

நண்பர்களே!

இன்று மாலை ஐரோப்பியத் தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய
"இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு.

இவ்வார நிகழ்ச்சியில், இணையப்பரப்பில் தமிழ்வலைப்பதிவுத் திரட்டிகள் குறித்த சிறுகுறிப்பு,
வலைப்பதிவர் பொன்ஸ் வழங்கும் தந்தை குறித்த கவிதை,
ஜானகி விஸ்வநாதனின் இயக்கத்தில் வெளிவந்த கனவு மெய்ப்பட வேண்டும் திரைப்படத்தில், இடம்பெற்ற ரம்யாகிருஷ்ணனின் பாடல் என்பனவும்,
இவ்வார வலைப்பதிவு அறிமுகம் பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வலைப்பதிவு எழுதிவரும் பகீ யின், " ஊரோடி" யின் அலட்டல்களும், ஒப்பாரிகளும் வலைப்பதிவு குறித்த சிறு குறிப்பு அறிமுகம்,

உரைச்சித்திரம் பகுதியில் சின்னக்குட்டியின் " ஊர்உளவாரம்" வலைப்பதிவிலிருந்து, நீச்சலடிப்பது குறித்த நினைவுப்பகிர்வு ஆகியன இடம் பெறுகின்றன.

இவ்வார நிகழ்ச்சியில் தங்கள் ஆக்கங்களை இணைத்துக்கொள்ள அனுமதியளித்த நண்பர்கள், பொன்ஸ், சின்னக்குட்டி, ஆகியோருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவிய நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள் நண்பர்களே!





இணையத்தில் இன்பத்தமிழ் 8.mp3




இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டியில் உள்ள செயலியிலும் கேட்கலாம்.

நண்பர்களே!
கீழேயுள்ள நிரலை உங்கள் அடைப்பலகையில் பொருத்தமான இடத்தில் சேர்ப்பதன் மூலம், இந்நிகழ்ச்சியை உங்கள் நண்பர்களும் கேட்க, நீங்களும் உதவலாம். அப்படி நீங்கள் இணைத்திருந்தால் எனக்கு மின் மடல் மூலம் அறியத் தாருங்கள்.







நன்றி!

Posted byமலைநாடான் at 6 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 7

வணக்கம் நண்பர்களே!

''இணையத்தில் இன்பத்தமிழ்'' இவ்வார நிகழ்ச்சியி பதிவில் சந்திக்கின்றோம்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டு, உற்சாகப்படுத்தி வரும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

இவ்வார நிகழ்ச்சியில், ரேகே இசைப்பாடகன் பொப் மார்லி பற்றிய சிறுகுறிப்பும், பாடலும்,

வலைப்பதிவு அறிமுகம் பகுதியில் கணிமை வலைப்பதிவும், அதனைப் பதிவு செய்கின்ற வலைப்பதிவர், ரவிசங்கர் பற்றிய சிறு அறிமுகமும், கனிமை வலைப்பதிவிற்கான இணையமுகவரி

கேரளக்கரையோரக் கிராமிய மணம் கமழும் மலையாளப் பாடல் என்பனவும், இடம்பெறுகிறது.

அடுத்தவாரம் தமிழீழத்தின் நெய்தற்கரை நினைவுகளோடு சந்திப்போம்.

இவ்வார நிகழ்ச்சிக்கு உதவி புரிந்த அனைவர்க்கும் நன்றி.

நிகழ்ச்சியைக்கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி


இணையத்தில் இன்பத்தமிழ் 7 .mp.3


நண்பர்களே இச்செயலி இயங்காதவிடத்து, பக்கப்பட்டியிலுள்ள செயலியில் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at 10 comments  

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

மார்ச். 8ந் திகதி.

சர்வதேச பெண்கள் தினம்.

இதனைமுன்னிட்டு ஐரோப்பியத்தமிழ் வானொலியில், இன்று மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிய மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை இங்கே பதிவு செய்கின்றேன்.

ஒரு பெண் அறிவிப்பாளரின் குரலில் தொகுக்க வேண்டுமெனும் என் எண்ணப்பாடு, இறுதித் தருணங்களில், இயலாது போயிற்று. அதனால் நிகழ்ச்சியைச் சரியாக ஒருங்கமைக்க முடியாது போய்விட்டது.

நிகழ்ச்சியில் இனைத்துக்கொள்ள கேட்டமாத்திரத்தில், எண்ணங்களை எழுத்தில் வடித்து அருமையான ஒரு கவிதையை தந்தார் தமிழ்நதி.
அதை மட்டும் ஒரு தோழியின் குரலில் இணைக்க முடிந்தது. தமிழ்நதி மிக்க நன்றி.

அக் கவிதையின் எழுத்து வடிவத்தை இங்கே காணலாம்.

நிகழ்சித் தயாரிப்புக்கு உதவி அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்

ஒலிப்பதிவைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சி.mp3

Posted byமலைநாடான் at 6 comments  

இணையத்தில் இன்பத்தமிழ் 6

நண்பர்களே!

இணையத்தில் இன்பத்தமிழ் வாராந்திர நிகழ்ச்சியின் இன்றையஒலிபரப்பில்,

இசைக்கலைஞர் பிரசன்னா பற்றிய சிறுகுறிப்பும், அவரது இசைக்கோலத்தின் ஒரு பகுதியும், அறுபத்தியாறு அகவையிலும் இளைஞருக்கேயுரிய சுறுசுறுப்போடு, தமிழ்ப்பணியும், சமுகப்பணியும் ஆற்றிவருகின்ற, பதிவர் ஞானவெட்டியான் ஐயாவுடனான செவ்வி, என்பன உள்ளடங்கி வருகின்றது.

நிகழ்ச்சியில் பிரசன்னாவின் இசைக்கோலத்தை இணைத்துக்கொள்ளவும், பிரசன்னா குறித்த தகவல்களைத் தந்துதவியும், சிறப்புச்சேர்ந்த நண்பர், பதிவர், அற்புதனுக்கும், எம் வேண்டுகோளுக்கினங்க தன் அனுபவங்ளை, செவ்வியூடாகப் பகிர்ந்து கொண்ட மூத்த பதிவர் ஞான வெட்டியான் ஐயா அவர்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள்.

நிகழ்ச்சி குறித்த தங்கள் மேலான கருத்துக்களைத் தாருங்கள் நண்பர்களே!


இணையத்தில் இன்பத் தமிழ் 6


இச்செயலியில் கேட்க முடியாவிடின், தயவுசெய்து பக்கப்பட்டியில் இருக்கும் செயலியிலும் கேட்க முடியும்.

வேகம் குறைவான, இணையத்தொடர்புவழி உள்ள நண்பர்கள் கீழேயுள்ள செயலியில் கேட்பது இலகுவாக இருக்கும்.



Posted byமலைநாடான் at 11 comments