"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 9

வணக்கம் நண்பர்களே!

"இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார ஒலிபரப்பில் வழமைபோல் பல சுவையான நிகழ்ச்சிகள்.

தமிழ் இணையப்பரப்பில், தமிழ்வலைப்பதிவுகள், வலைப்பதிவுத் திரட்டிகள், என்பனவற்றைப்போல் முக்கியத்துவம் மிக்க, தேடுபொறித்தன்மைகள் கொண்ட முக்கிய இணையத் தளங்களில் குறிப்பிடத்தக்க இரு இணையத்தளங்கள் பற்றிய சிறு குறிப்பு,

தமிழ் ராப் இசைக்கலைஞர் சுஜித் குறித்த சிறு அறிமுகமும், அவரது புதியபாடல் ஒன்றும்,

வாரந்தர அறிமுக வரிசையில் மலேசியாவிலிருந்து வலைப்பதிவு செய்து வரும், மை ப்ரெண்ட் ( என்தோழி) டும் அவரது வலைப்பதிவும் ,

உரைச்சித்திர வரிசையில், அவுஸ்திரேலியாவில் அண்மையில் தனித்தீவில் சிறைவைக்கபட்ட ஈழத்து அகதிகள் குறித்து எழுந்த எதிர்கருத்துக்களின் மீதான சிந்தனையோட்டத்தைக் கொண்ட, பதிவர் பொட் டீக் கடை யின் வலைப்பதிவிலிருந்து பெறப்பட்ட பொருளாதார அகதிகள் சிந்தனைக்கட்டுரை.

ஆகிய நிகழ்ச்சிகள் இவ்வார நிகழ்ச்சியை அணிசேர்க்கின்றன.

நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நண்பர்களே.

நிகழ்ச்சி சிறப்புற அமைய உதவிய அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

நிகழ்ச்சியின் ஒலிப்பதிவைக் கேட்க:-


இணையத்தில் இன்பத்தமிழ் 9.mp3
இச்செயலி இயங்காவிடத்து பக்கப் பட்டையிலுள்ள ஒலிச் செயலியிலும் கேட்கலாம்.நண்பர்களே! இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சி ஒலிப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய, கீழேயுள்ள நிரலை, உங்கள் வார்புருக்களில் நிறுவி இணைப்புத் தரலாமே?

Posted byமலைநாடான் at  

1 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...  

மலைநாடர்!
எந்த மொழியில் இருந்தாலும் இந்த "ராப்" மொழி எனக்குப் புரிவதே இல்லை.
மை பிரண்ட்; பாராட்டப்பட வேண்டிய பெண்; அவர் தமிழ் ஆர்வம்;அதில் அவர் பெற்ற தேர்ச்சி; இப்போ அவர் எழுத்தில் உள்ள முதிர்ச்சி...யாவும் பாராட்டுக்குரியவை; அவர் பதிவுக்கும் போகும் வாசகர்களில் நானும் ஒருவன்.
நல்ல துள்ளலான;இளமையான எழுத்தின் சொந்தக்காரி...சினிமாவை ஆக்கு வேறு ஆணி வேறாக அலசுவார். சில சமயம் அவர் வேகத்துக்கு என் வயது ஈடுகொடுப்பதில்லை.(இன்றைய திரைப்படங்கள்)
பொட்டீக் கடையின் பதிவு படிக்காததால்...படிக்கவுள்ளேன்.

Post a Comment