"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 8

நண்பர்களே!

இன்று மாலை ஐரோப்பியத் தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய
"இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு.

இவ்வார நிகழ்ச்சியில், இணையப்பரப்பில் தமிழ்வலைப்பதிவுத் திரட்டிகள் குறித்த சிறுகுறிப்பு,
வலைப்பதிவர் பொன்ஸ் வழங்கும் தந்தை குறித்த கவிதை,
ஜானகி விஸ்வநாதனின் இயக்கத்தில் வெளிவந்த கனவு மெய்ப்பட வேண்டும் திரைப்படத்தில், இடம்பெற்ற ரம்யாகிருஷ்ணனின் பாடல் என்பனவும்,
இவ்வார வலைப்பதிவு அறிமுகம் பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வலைப்பதிவு எழுதிவரும் பகீ யின், " ஊரோடி" யின் அலட்டல்களும், ஒப்பாரிகளும் வலைப்பதிவு குறித்த சிறு குறிப்பு அறிமுகம்,

உரைச்சித்திரம் பகுதியில் சின்னக்குட்டியின் " ஊர்உளவாரம்" வலைப்பதிவிலிருந்து, நீச்சலடிப்பது குறித்த நினைவுப்பகிர்வு ஆகியன இடம் பெறுகின்றன.

இவ்வார நிகழ்ச்சியில் தங்கள் ஆக்கங்களை இணைத்துக்கொள்ள அனுமதியளித்த நண்பர்கள், பொன்ஸ், சின்னக்குட்டி, ஆகியோருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவிய நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள் நண்பர்களே!

இணையத்தில் இன்பத்தமிழ் 8.mp3
இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டியில் உள்ள செயலியிலும் கேட்கலாம்.

நண்பர்களே!
கீழேயுள்ள நிரலை உங்கள் அடைப்பலகையில் பொருத்தமான இடத்தில் சேர்ப்பதன் மூலம், இந்நிகழ்ச்சியை உங்கள் நண்பர்களும் கேட்க, நீங்களும் உதவலாம். அப்படி நீங்கள் இணைத்திருந்தால் எனக்கு மின் மடல் மூலம் அறியத் தாருங்கள்.நன்றி!

Posted byமலைநாடான் at  

6 comments:

வெற்றி said...  

மலை,
இவ் வார நிகழ்ச்சிகள் யாவும் அருமை.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

சின்னக்குட்டி said...  

வணக்கம் மலைநாடன்... இவ்வார நிகழ்ச்சிகள் யாவும் அருமை.. எனது நீச்சலடிக்க வாறீங்களா என்ற பதிவை அழகாக ஒலி வடிவத்தில் அமைத்து ஓலிபரப்பியதுக்கு மிக்க நன்றிகள். அக்காலத்தில் கேட்ட இசை கதையும் போன்ற தோரணையில் அமைந்திருந்தது. வானொலி நடிகனுக்குரிய பக்கத்தையும் காட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். மற்றும் பொன்சின் கவிதை அவரது குரலோடு சேர்ந்து ஒலித்து சிறப்பு சேர்த்தது இன்னும் நிகழ்ச்சியை மிளிர வைத்தது.

ரம்யா கிருஸ்ணன் பாடலை இசைமைத்த மகேஸ் இசையமைப்பாளர் கான்சரில் இறந்த கமலின் நண்பரா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...  

மலைநாடர்!
பொன்ஸ்சின் கருப் பொருள் நன்று; ரம்யாவின் பாடலில்; ஜமுனாராணியின் சாயல் அத்துடன் அந்த இசையும் மிகப்பழைய சாயல் நல்ல தேர்வு.
பகீயைப் பாராட்டத் தகும்;அவர் யாழ்பாணத்தில் இருந்து மிகப் பெரியசாதனை செய்கிறார்.சேவை மனம் கொண்டவர். அத்துடன் அவர் பழந்தமிழ் இலக்கிய ஆர்வம் போற்றுதற்குரியது. இன்றைய இளைஞர்கள்;
பின் பற்ற வேண்டியது.
சின்னக்குட்டியரின் நீச்சலை நல்ல ஒலிச்சித்திரமாக்கியுள்ளீர்கள்.அருமை பாராட்டுக்கள்.
மொத்தம் நல்ல தயாரிப்பு;

கானா பிரபா said...  

ஓவ்வொரு வாரமும் நம் சக வலைப்பதிவர்களின் சிறப்பான படையல்களைக் கேட்டு வருகின்றேன். சின்னக்குட்டியரின் குரலில் ஒரு பதிவையும் கொடுக்கவேண்டும் ;-)

ரம்யா பாடிய பாடலினை இசையமைத்தவர் அதே மகேஷ் தான்

மலைநாடான் said...  

வெற்றி!

உங்கள் வருகைக்குக்கு, பாராட்டுக்கு நன்றி.

சின்னகுட்டி!
நம்மவர் மகேஸ் என நான்குறிப்பிடுவதும் அவரைத்தான். குருதிப்புனல் படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால் படத்தில் பின்னணி இசையில் தன் திறமையைக் காட்டியிருப்பார்.

பொன்ஸ் கவிதை அவரது குரலில் அழகாகவே இருந்தது. ஆனாலும் அவரது ஒலிப்பதிவில் சற்று ஒலியளவு அதிகமாயிருந்திருந்தால் இன்னமும் நன்றாக வந்திருக்கும்.

மற்றும்படி, உங்கள் பதிவிலே நீச்சலடிக்கவாறீங்களா? ஒரு ஒலிச்சித்திரத்துக்கு இசைவான உரைநடையில் இருந்ததும் அது அழகாக வரக்காரணம்.

தங்கள் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி.

மலைநாடான் said...  

யோகன்!

அந்தப்பாடல் இடம்பெறும் திரைப்படத்தின் கதை நிகழும் காலத்துக்குரிய இசையில் அந்தப்பாடல் தரப்படிருக்கிறது. குரல் பாடலுக்கு நிரம்ப ஒத்துப்போகின்றது.

பகி உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். அவரது முயற்சியும் திறனும் முன்மாதிரியாகக் கொள்ளப்படத் தகுந்தது.

தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.

Post a Comment