"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க..?

"காக்கா கூட்டத்தைப் பாருங்க அதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க..?" என்ற பாடல் வரிகள் நன்கு பிரபலம். நேயத்தை வலியுறுத்தும் வரிகளவை. பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, மீன்களுக்கு உணவூட்டும் இந்த வாத்துக்குஞ்சுக்கு, அந்த நேயத்தைக் கற்றுக் கொடுத்தது யாருங்க?சிந்தனைத் திறன் அற்ற ஒரு பறவையாக மனிதர்களால் அடையாளப்படுத்தப்பட்ட வாத்து நேசமோடிருக்க, சிந்திக்கத் தெரிந்த மனிதன் செல்லும் வழி..?

Posted byமலைநாடான் at 2 comments