கற்பகவல்லியும் கவிமாமணி வீரமணிஐயரும்.
சனி, மார்ச் 24, 2007
ஒலிப்பதிவுகள் செய்யத் தொடங்கிய பின் எழுத்துப்பதிவுகள் செய்வதைக் குறைத்துக்கொண்டுள்ளேன் என கானா.பிரபாவும். பாரிஸ் யோகனும் குறைப்பட்டிருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு குரல் பதிவின் மூலமே சந்திக்கின்றேன். எழுதுவதிலும் பார்க்க, வாசிப்பதில் இருக்கும் ஆர்வமே எழுதுவது குறைந்ததிற்க் காரணமேயொழிய வேறில்லை. ஏற்கனவே இப்பதிவை இட வேண்டும் எனவும், இப்பதிவினை குரற்பதிவாக இடுவதே பொருத்தமாக இருக்குமெனவும் எண்ணிருந்ததன் அடிப்படையிலேயே இது அமைகிறது. இதைப்பதிவு செய்யப் பலநாட்களுக்கு முன்னதாக எண்ணியிருந்த போதும், இன்று யோகன் சீர்காழி கோவிந்தராஜனைப் பற்றி யோகன் நினைவு கூர்ந்திருப்பதனூடு இந்தப்பதிவின் நாயகரும் எண்ணபட்டுள்ளார். இனி......
கவிமாமணி வீரமணிஐயர் " கற்பகவல்லி.." பாடல் உருவாக்க நினைவினைப் பகிர்ந்து கொள்கிறார். பார்க்க, கேட்க:
Posted byமலைநாடான் at மாலை 4:01
21 comments:
Subscribe to:
Post Comments (Atom)
எனது ஊரில் உள்ள கற்பக விநாயகர் ஆலயம் ஒன்றிற்காக ஊஞ்சல் பாட்டு எழுதியவர்.. தவிர புலிகளின் குரல் வானொலியில் தினமும் செய்தியறிக்கைக்கு முன்பாக ஒலிக்கும் அந்த இசைக்கு சொந்தக் காரர்.
மலைநாடான்... வீரமணி ஐயர் எனும் பெயரையும், கவிஞர், பல்கலைகழக விரிவுரையாளர் என்ற அறிமுகத்துக்கப்பால் வேறு மேலதிகமாக அறிய முயற்சித்தில்லை.
உங்கள் தகவல்களுக்கு ஒலிப்பதிவு அனைத்தும் பல தகவல்களை தந்தது நன்றி.
மலைநாடான். உங்கள் குரலை இன்று தான் முதன்முதலில் கேட்டேன். மிக அருமை. மிக அருமை. வரதராஜப் பெருமாள் மேலும் மற்ற கடவுளர் மேலும் பாடப்பட்ட பாடல்களை மிக அருமையாகப் பாடினீர்கள்.
பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போது 'கற்பக வல்லி நின்' பாடலைப் பாட முயன்று கொண்டே இருப்பேன். அப்போது இது டி.எம்.எஸ். பாடல் என்ற வகையில் மட்டுமே தெரியும். உங்கள் பதிவிலும் யோகன் ஐயா பதிவிலும் மற்ற ஈழத்தவர் பதிவுகளிலும் ஐயா வீரமணி ஐயர் அவர்கள் எழுதிய பாடல் என்பதை அண்மையில் அறிந்து கொண்டேன். பாடலில் ஒவ்வொரு சொல்லும் அருமையாக இருக்கின்றன.
'எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்...' என்று வரும் வரிகள் மனத்தை உருக்குபவை.
மலை,
மிகவும் அருமையான பதிவு மட்டுமல்ல, அவசியமன பதிவும் கூட.
மிக்க நன்றிகள்.
வீரமணி ஐயர் பற்றி அவர் இறந்த பின்னர் தான் எனக்குத் தெரிய வந்தது.
வீரமணி ஐயர் அவர்கள் பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றிலிருந்து கன தகவல்களை அறிந்து கொண்டேன்.
இப்போ உங்களின் இப் பதிவின் மூலம் அந்த மேதை பற்றிய இன்னும் பல தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.
இவர் எழுதிய கற்பக வல்லியின் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.
இணுவில், அளவெட்டி, கோண்டாவில் போன்ற பகுதிகள் ஈழத்தின் தலைசிறந்த பல கலைஞர்களை எமக்குத் தந்தன.
அக் கலைஞர்கள் பற்றி நீங்கள், யோகன் அண்ணை, கானா பிரபா போன்றோர் எழுத வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மலை,
என்ரை போன பின்னூட்டத்திலை சொல்ல நினைச்சு மறந்து போன விசயம்: மேதை வீரமணி ஐயரின் புகைப்படத்தையும் இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். Tamilnet.com ல் அவரின் படங்கள் இருக்கின்றன.
நன்றி.
வணக்கம் மலைநாடன்...நிகழ்ச்சி கேட்டேன். நன்றாக இருந்தது. வீரமணி அய்யர் எங்கள் பாடசாலைக்கு வந்து உரையாற்றியபோது கண்டிருக்கிறேன். வீரமணி அய்யர் இயற்றி சுட்டிபுர அம்மனை பற்றி பாடிய பாடலை சீர்காழி பாடியதை நேரில் பார்த்திரு்கிறேன்.
மலை நாடன் நல்ல சாரிரம் குரல் வளம் இருக்கிறது நல்லாயும் பாடுகிறீர்கள்.
மலைநாடர்!
அருமையாக இருந்தது. வீரமணி ஐயர் யாழ்ப்பாணத்தின் பெருமை!!
"நீயிந்த வேளைதன்னில் ஏழையெனை மறந்தால்
நானிந்த நாநிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌனம் அம்மா!! ஏழை எனக்கருள....
ஆனந்த பைரவியே ..ஆதரித்தாளும் அம்மா!
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் ;நான்..
அழகான சரணாகதி வரிகள்...கண்கள் பனித்தன!!
இன்றைய கவிஞர்கள்; பஞ்சியைப் பார்க்காது; இதைப் போல்
எழுத முயலலாம்...
ஐயரின் படமிருந்தால் போடவும்.
ஒலிப்பதிவு கேட்க முன்பு பின்னூட்டங்களை வாசித்தேன். குமரன் உங்கள் பாட்டுத்திறமை பற்றிச் சொன்னபோது, ஒலிப்பதிவிலுள்ள பாடல் பாடிய யாரோ ஒருவரின் குரலைத்தான் உங்கள் குரலென்று சொல்கிறார் என்றுதான் நினைத்துச் சிரித்தேன்.
கேட்டபோதுதான் தெரிந்தது நீங்கள் பாடியிருக்கிறீர்கள்.
நன்றாக இருக்கிறது.
மலைநாடான், அருமையான ஒலிப்பதிவு. வீரமணி ஐயர் பற்றி முழுமையாக அறிந்து கொண்டேன். விக்கியில் ஐயரைப் பற்றிய ஒரு சிறு கட்டுரை உள்ளது. மீண்டும் நன்றி.
மீண்டும் ஒரு முறை கேட்டேன் மலைநாடான்.
சயந்தன்!
பதிவில் சேர்க்க மறந்த ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள்.ஈழத்திலுள்ள பல ஆலயயங்களுக்கும் திருப்பொன்னூஞ்சல் பாடல்களை யாத்த பெருமை இவருக்குண்டு. அதிலே அந்தந்த ஊர்களின் தனித்துவங்களை அழகான கவிவரிகளாகச் சேர்த்துவிடுவார்.
புலிகளின் கொடிப்பாடலும், இசையும் அவரது என்று கேள்விப்பட்டேன். உண்மையா என்பது தெரியவில்லை.
வி.ஜெ. சந்திரன்!
மிகத்திறமை வாய்ந்த நம் தாயகக் கலைஞர் அவர். நிச்சயம் அறிந்து வைத்திருக்க வேண்டியவர்.
நன்றி!
குமரன்!
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், ரசிப்புக்கும் மிக்க நன்றிகள்.
கற்பகவல்லி பாடலின் நாயகி யார் தெரியுமா? மயிலை கபாலீஸ்வரி. வீரமணிஐயர் இந்தியாவில் படிக்கும் போது ஏற்பட்ட இந்த ஈடுபாடு, அவர் இறக்கும் வரை அவரிடமிருந்தது.
வெற்றி!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. விரைவில் படம் இணைக்க முயற்சிக்கின்றேன்.
நன்றி
சின்னக்குட்டி!
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
யோகன்!
ஈழத்துக்கவிஞர்களில் மரபார்ந்த சந்தக்கவிதைகள் எழுதுவதில், நான் நேரே பார்த்து வியந்தவர்கள் மூவர். முதலாமவர் என் குரு கவிஞர் சோ.ப, அடுத்தது வீரமணிஐயர், இன்னுமொருவர் கவிஞர் வ.ச.ஐ. ஜெயபாலன். இவர்கள் பாடல்கள் எழுதும் வேகமும் பிரமிப்புத்தரும்.
இவர்களைவிட இன்னுமொருவரையும் எல்லோரும் குறிப்பிடுவார்கள், ஆனால் அவர் பாடல் எழுதுவதை நேரில் பார்த்ததில்லை. அவர்தான் புதுவை இரத்தினத்துரை.
நன்றி
வீரமணி ஐயர் வாழ்ந்த ஊரில் சமகாலத்தில் அவர் சிறப்பைக் கண்கூடாகக் கண்ட பெருமை எனக்கு.
இந்த அழகான குரலிசைப் பதிவைக் கில்லி தளத்தில் இணைத்துள்ளேன்.
மலைநாடான் ஐயா
நிகழ்ச்சியைத் தாமதமாகத் தான் கேட்டேன். மிகவும் நன்றாக வந்துள்ளது! குழைவான குரல் இதமானதாகவும் உள்ளது.
யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் பற்றிச் சிறிதளவே அறிந்திருந்தேன். அவர் குருநாதரான பாபநாசம் சிவன் பல பாக்களை அன்னை கற்பகாம்பிகை மேல் இயற்றியுள்ளார். மயிலை விழாக்களைப் பற்றி எல்லாம் பாடியுள்ளார். அவருடன் கூடவே மயிலை வீதிகளில் வலம் வந்த வீரமணி ஐயரைக் கற்பகாம்பாள் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.
தன் குருநாதரின் அடியொற்றி, தானும் அன்னை மேல் பாடல் செய்ய விரும்பி, வந்த பாடல் "கற்பகவல்லி"!
குருவை விஞ்சும் சிஷ்யராக, ஐயரின் இந்தப் பாடல், அன்னைக்கு நிரந்தர, நித்ய அணிகலனாய் அமைந்து விட்டது!
மலைநாடான் ஐயா,
வீரமணி ஐயரின் நாட்டிய நாடகங்கள் பற்றிய தகவல்கள் எங்கு கிடைக்கும்?
எங்கள் ஊருக்கு ஒருமுறை வந்த ராஜ்குமார் பாரதி, ஐயரின் கதிர்காமக் குறவஞ்சி பாடல்களைப் பாடினார். அப்போது தான் ஐயரைப் பற்றி மேலும் சிறிது சிறிதாக அறிந்து கொண்டேன்!
பிரபா!
உங்கள் அன்புக்கு நன்றி.
ரவிசங்கர்!
மகிழ்வாக இருக்கிறது. ஒரு ஈழத்துக்கலைஞர்பற்றி சற்று அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். உங்களைப்போலவே பல நண்பர்களும் கேட்டமையினால், தற்போது வீரமணிஐயர், மேற்படி பாடல் உருவாக்கம் குறித்துப் பேசும் ஒரு அசைபடத் துணுக்கை இணைத்துள்ளேன். பார்த்து மகிழுங்கள்.
தங்கள் ஆர்வத்திற்கும், அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.
ஈழநாட்டுக் கலைஞர்களைப் பற்றிய தெரிதல் மற்ற தமிழர்களிடையே மிகக் குறைவு. அவர்களைப் பற்றிய தகவல்களையும் படைப்புகளையும் எங்களோடு பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் பல படைப்புகளை இது போல ஒலி-ஒளிப் பதிவுகளாகத் தரமுடிந்தால் நாங்கள் தெரிந்து கொள்வோம்.
எனக்கு அவரது 'கற்பகவல்லி நின் பொற்பதம்” பாட்டு யாரவது அதன் வரிகளை தந்து உதவுவார்களா?