இணையத்தில் இன்பத்தமிழ் 6
நண்பர்களே!
இணையத்தில் இன்பத்தமிழ் வாராந்திர நிகழ்ச்சியின் இன்றையஒலிபரப்பில்,
இசைக்கலைஞர் பிரசன்னா பற்றிய சிறுகுறிப்பும், அவரது இசைக்கோலத்தின் ஒரு பகுதியும், அறுபத்தியாறு அகவையிலும் இளைஞருக்கேயுரிய சுறுசுறுப்போடு, தமிழ்ப்பணியும், சமுகப்பணியும் ஆற்றிவருகின்ற, பதிவர் ஞானவெட்டியான் ஐயாவுடனான செவ்வி, என்பன உள்ளடங்கி வருகின்றது.
நிகழ்ச்சியில் பிரசன்னாவின் இசைக்கோலத்தை இணைத்துக்கொள்ளவும், பிரசன்னா குறித்த தகவல்களைத் தந்துதவியும், சிறப்புச்சேர்ந்த நண்பர், பதிவர், அற்புதனுக்கும், எம் வேண்டுகோளுக்கினங்க தன் அனுபவங்ளை, செவ்வியூடாகப் பகிர்ந்து கொண்ட மூத்த பதிவர் ஞான வெட்டியான் ஐயா அவர்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள்.
நிகழ்ச்சி குறித்த தங்கள் மேலான கருத்துக்களைத் தாருங்கள் நண்பர்களே!
இணையத்தில் இன்பத் தமிழ் 6 |
இச்செயலியில் கேட்க முடியாவிடின், தயவுசெய்து பக்கப்பட்டியில் இருக்கும் செயலியிலும் கேட்க முடியும்.
வேகம் குறைவான, இணையத்தொடர்புவழி உள்ள நண்பர்கள் கீழேயுள்ள செயலியில் கேட்பது இலகுவாக இருக்கும்.
Labels: ஒலிபரப்பு
11 comments:
Subscribe to:
Post Comments (Atom)
வணக்கம் மலை நாடன்...நிகழ்ச்சியை கேட்டேன் ..ஞானவெட்டியான் ஜயாவின் உடைய பேட்டி பிரமாதம்... நன்றிகள்
சின்னக்குட்டி!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உண்மைதான் ஞான வெட்டியான் ஐயாவினுடைய வாழ்வியல் குறித்த விபரங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய உண்டு.
நன்றி!
சின்னக்குட்டி!
நான் இப்போதுதான் அவதானித்தேன். நீங்கள் நிகழ்ச்சியை நேரடியாக வானலைகளில் கேட்டிருக்கின்றீர்கள் போல் தெரிகிறது. அப்படியாயின், வானலைகளில் ஒலித்தரம் எப்படியிருந்தது எனச் சொல்ல முடியுமா?
வணக்கம் மலைநாடன்.. நீங்கள் எதிர்ப்பார்தது போல் நேரடியாகாத்தான் கேட்டேன்.நீங்கள் வானொலி நிகழ்ச்சியில் கூறியது மாதிரி இணையத்திலும் பார்க்க வானலைகளில் ஒலித்தரம் மிகவும் கூடியது என்பது உண்மையே
மலைநாடர்!
முத்துஸ்வாமி தீட்சிதரின் அகிலாண்டேஸ்வரியுடன் இந்த நிகழ்ச்சி களைகட்டியுள்ளது.வயலின்;கிளாரினட்;மென்டலின்;சக்கசபோன்;
கீபோட் அத்துடன் இந்த கிட்டாரும் நம்மிசை இசைக்கிறது.
பிரசன்னாவின் நிகழ்ச்சியை பாரிசில் நேரே பார்த்துள்ளேன்.
அவர் வித்துவம் பிரமிக்க வைப்பவை!!!!
அடுத்து , ஞானவெட்டியான் ஐயாவின் செவ்வி..;அவர்
அறுத்துறுத்த தமிழை நான் பல தடவை தொலை பேசியில்
கேட்டுள்ளேன். பல தடவை பல பாடல்களுக்கு உரை
தேவைப்பட்ட போது, இரவு 12 மணிக்குக் கூட எனக்கு எழுதி
மின்னஞ்சல் செய்தவர்.
அவர் வற்றாத ஊக்கம் என்னை, ஆச்சரியப்படவைக்கும்
"ஐயோ வயது தடை அல்ல" என அவர் அடிக்கடி கூறுவார்;
இணையத்தில் எழுதிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.
செவ்விமூலம் அவர் ஏனைய சேவைகளையும் கேட்கும் போது
மகிழ்வாக இருக்கிறது.
மிக உயர்ந்த சேவை உள்ளம் படைத்த சக மனிதனை அறிமுகப்
படுத்தி உங்கள் வானொலி சிறப்புப் பெறுகிறது.
மிகத் தரமான நிகழ்ச்சி; நான் இணையத்திலேதான் கேட்டேன்.
"மெச்சத் தகுந்த தொனி"
பாராட்டுக்கள்.
சின்னக்குட்டி!
மிக்க நன்றி.
யோகன்!
பிரசன்னா பெருமைக்குரிய கலைஞர். அவரது இசைத்திறன் வியப்பிற்குரியது. நம்மவர் என்பதில் நமக்குப் பெருமை.
ஞானவெட்டியான் ஐயாவின் அனுபவப் பகிர்வு குறித்து பலரும் பாராட்டுகிறார்கள். பலருக்கும் இது பயன்தரும்.
நன்றி!
ஞான வெட்டியான் ஐயாவின் நாட்கடமைகளைப் போல நானும் சிலகாலமாகத் திட்டமிட்டு வருகிறேன். ஆனால் முடியவில்லை.
சிலகாலம் என்பது எனது சட்டத்தில் ஏறக்குறைய 15 வருசம்..
சயந்தன்!
உமக்கு மட்டுமில்ல, இந்த நேரக்கட்டுப்பாடு கனக்கப்பேருக்கு சரிவாறதில்லை.:(
அந்த ஒழுங்கமைப்பு அவரிடம் உள்ளதால்தான் நிறைய விடயங்களைச் சாதிக்கின்றார்.
நன்றி!
அன்பு மலைநாடரே!
என்னையும் இணைய உலகில் ஒரு பதிவர் என நினத்து, செவ்வி எடுத்து வலையேற்றியமைக்கு மிக்க நன்றி.
மலை நாடான் இன்று தான் உங்கள் இரண்டு நிகழ்ச்சிகளை கேட்டேன்.
பிரசன்னாவின் இசை, ஞான வெட்டியான் ஐயாவின் கருத்துக்கள் நல்ல நிகழ்ச்சி தொகுப்பு.
நேர முகாமைத்துவம் அது நடைமுறையில கொண்டுவர நினைத்தாலும் முடியாத முயற்கொம்பாய் இருக்கிறது :)
ஞானவெட்டியான் ஐயா!
உங்களைப்போன்ற பெரியோர்களது அனுபவங்கள் பலருக்கும் நன்மை தரும் என்பது என் எதிர்பார்ப்பு. அது வீணாகவில்லை என்பது, வந்திருக்கும் பின்னூட்டங்கள் உணர்த்துகின்றன.
உங்கள் பூரணமான ஒத்துழைப்புக்கு
நன்றி!