"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 7

வணக்கம் நண்பர்களே!

''இணையத்தில் இன்பத்தமிழ்'' இவ்வார நிகழ்ச்சியி பதிவில் சந்திக்கின்றோம்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டு, உற்சாகப்படுத்தி வரும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

இவ்வார நிகழ்ச்சியில், ரேகே இசைப்பாடகன் பொப் மார்லி பற்றிய சிறுகுறிப்பும், பாடலும்,

வலைப்பதிவு அறிமுகம் பகுதியில் கணிமை வலைப்பதிவும், அதனைப் பதிவு செய்கின்ற வலைப்பதிவர், ரவிசங்கர் பற்றிய சிறு அறிமுகமும், கனிமை வலைப்பதிவிற்கான இணையமுகவரி

கேரளக்கரையோரக் கிராமிய மணம் கமழும் மலையாளப் பாடல் என்பனவும், இடம்பெறுகிறது.

அடுத்தவாரம் தமிழீழத்தின் நெய்தற்கரை நினைவுகளோடு சந்திப்போம்.

இவ்வார நிகழ்ச்சிக்கு உதவி புரிந்த அனைவர்க்கும் நன்றி.

நிகழ்ச்சியைக்கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி


இணையத்தில் இன்பத்தமிழ் 7 .mp.3


நண்பர்களே இச்செயலி இயங்காதவிடத்து, பக்கப்பட்டியிலுள்ள செயலியில் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at  

10 comments:

ரவிசங்கர் said...  

மலைநாடான்,

என்றும் போல் உங்கள் ஒலிபரப்பை இன்று கேட்கையில் வலைப்பதிவு குறித்த அறிமுகம் நல்ல பகுதி என்று நினைத்துக் கொண்டு கேட்கத் தொடங்கினேன். ஒரு வேடிக்கைக்கு நம்ம பதிவு எல்லாம் இதுல என்னைக்கு வர, என்ன பதிவு அறிமுகப்படுத்தப் போறீங்க என்ற ஆர்வத்துடன் கேட்கத் தொடங்கினேன். ஆனால், உண்மையில் முதற்பதிவாக நீங்கள் என்னை அறிமுகப்படுத்தியதில் திக்குமுக்காடிப் போய் விட்டேன். நான் பங்கு கொள்ளும் தமிழ்க் களங்களில் நான் செலவிடும் நேரம் என் சக்திக்கு மீறியது. இது குறித்த அயர்ச்சியும், வேலைப்பளுவும் அழுத்த தமிழ்ப்பணிகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்த வேலையில் உங்கள் ஒலிபரப்பு மிகுந்த ஊக்கத்தை அளித்திருக்கிறது. கவனித்து அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. என் தனி வலைப்பதிவுக்கு வந்து விவரங்களை அறிந்து கொண்டதற்கு நன்றி.

என் படிப்பு குறித்த சில பிழையான தகவல்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்றாலும் அவை பொருட்படுத்தத் தக்கவை அல்ல.

மீண்டும் என் நன்றிகள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...  

மலைநாடர்!
பொப் மாலி கேள்விப்பட்டவர். நான் தேடிக் கேட்பவரல்ல!
ரவிசங்கர்,பயனுள்ள பதிவுகள் படிப்பேன். மலையாளப் பாடல் மிக இனிமை!!
துள்ளல் கூட;
இதைப் பாடியவர்;இசையமைத்தவர் பெயர்களைக் கூறியிருக்கலாம்.
இன்றைய நிகழ்ச்சி சிறியது போல் ;ஒரு தோற்றம் தந்தது.

சின்னக்குட்டி said...  

நல்லதொரு மலையாள பாட்டு போட்டீங்கள் சூப்பர்

வி. ஜெ. சந்திரன் said...  

மலைநாடான் இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சிகள் அருமை. நன்றாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் தொடருங்கள்

ஞானவெட்டியான் said...  

ஒலிப்பதிவு மிகத் துல்லியமாக வந்துள்ளது. பாராட்டுக்கள்.
அன்பு இரவி,
தமிழ்ப்பணி தொடரவேண்டும்.
இது என்றும் நிலை நிற்கும்.

மலைநாடான் said...  

இரவி!

பாராட்டுதல்கள் நிறைவைத்தரும். நிச்சயம் முன் நகர்த்தும்.

தவறுக்கு மன்னிக்கவும்.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், நன்றி

மலைநாடான் said...  

யோகன்!

பாடல்கள் இரண்டும் சற்று நீளமானவை. ஆனாலும் அவற்றின் சுவை கருதி, இடையில் பேசவில்லை, இடையில் நிறுத்தவில்லை. அதன் காரணமாகப் பகிரப்பட்ட விடயங்கள் குறைவு. அதுவே நிகழ்ச்சி சிறிதாகத் தோன்றக் காரணம். மற்றும்படி நிகழ்ச்சியின் அளவில் மாற்றமில்லை.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.

மலைநாடான் said...  

சின்னக்குட்டி!

தங்கள் தொடர்ச்சியான பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

வி.ஜெ.சந்திரன்!

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

மலைநாடான் said...  

ஞானவெட்டியான் ஐயா!

உங்கள் உற்சாகப்படுத்தலுக்கு மிக்க நன்றி.

ரவிசங்கர் said...  

மலைநாடான் - உற்சாகமூட்டியதற்கு நன்றி. உண்மையில் அது சரியான நேரத்தில் கிடைத்திருக்கிறது. மற்றபடி, மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை.

Post a Comment