"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 5

நண்பர்களே!

இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சிக்கு நீங்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. சென்றவாரத்தில்இந் நிகழ்ச்சி, ஐரோப்பிய தமிழ் வானொலி நிலையத்தின் கலையக மாற்றத்தினால் ஏற்பட்ட, இணையவழித் தடங்கல் காரணமாக, முந்தையவார நிகழ்ச்சியே மறு ஒலிபரப்பாக நிகழ்ந்தது. அதனாலேயே, வாராந்திர நிகழ்ச்சி இங்கே பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் சென்றவாரத்தில், தேன்கூடு சாகரன் அவர்களின் அஞ்சலி ஒலிப்பதிவு இடம்பெற்றிருந்தது. நண்பர்கள் பலரும் அவ்வொலிப்பதிவினைக்கேட்டு, அவசியமானதொரு, ஆவணப்பதிவு என அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள். அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி.

இனி இவ்வார ஒலிபரப்புக் குறித்து.

இவ்வார நிகழ்ச்சியில் சாகரன் கல்யான் குறித்த நினைவுக்குறிப்பு.

சென்னைச் சங்கமம் நிகழ்ச்சி பற்றிய அறிமுகக்குறிப்பு, அருமையான பாடல், ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை திரு. ஜெகத் கஸ்பார் அவர்களின் எண்ணப்பகிர்வு.

மூன்று தசாப்தங்களின் முன் ஈழத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலித்த, ஈழத்துக் கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் புகழ்பெற்ற
'அண்ணை றைற்' ஒலிப்பதிவு. ஆகிய நிகழ்ச்சிக்கள் உள்ளடங்கி வருகின்றன.

இவ்வார நிகழ்ச்சியின் உருவாக்கதில் எம்முடன் இணைந்து கொண்ட, நண்பர் கானா. பிரபா, பதிவர் பொன்ஸ், ஆகியோருக்கும், கலந்து சிறப்பித் பெரியோர்கள் அருட்தந்தை திரு.ஜெகத்கஸ்பார் அவர்களுக்கும், கலைஞர். கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கும், இனிய நன்றிகள்.

நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.


இணையத்தில் இன்பத்தமிழ் 5

இந்த ஒலிச்செயலி வேலை செய்யாதிருப்பின், பக்கப்பட்டியில் உள்ள ஒலிச்செயலியிலும் கேட்கலாம்.

'' சென்னைச் சங்கமம்'' நிகழ்ச்சிகள் குறித்து , இவ்வார தமிழ்மணம் பூங்காவில் வெளிவந்துள்ள சிறப்பு ஒலி, ஒளி, வடிவங்களைக் காண இங்கே அழுத்துங்கள்.

Posted byமலைநாடான் at  

10 comments:

சின்னக்குட்டி said...  

வணக்கம் ..மலை நாடன்... நிகழ்ச்சி மேலும் மேலும் மெருகேறி வருகிறது வாழ்த்துக்கள். குறிப்பாக ஒலிதரம் மிக அருமையாக இருக்கிறது... நன்றிகள்

மலைநாடான் said...  

சின்னக்குட்டி!

உங்களைப்போன்றவர்களின் ஊங்குவிப்புக்களே நிகழ்ச்சியின் உயர்வுக்கு அடிநாதம். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஞானவெட்டியான் said...  

நண்பர் சின்னக்குட்டி கூறியதுபோல் ஒலித்தரம் மிக அருமையாக உள்ளது. மெருகேறிவருகிறது. பாராட்டுக்கள் நண்பரே!

கானா பிரபா said...  

வணக்கம் மலைநாடான்

உங்களின் வானொலி நிகழ்ச்சிகளுக்கான நேயர்களின் கருத்துப்பகிர்வோ அல்லது பொதுவில் உங்கள் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி பற்றிய நேர்களின் கருத்தாடல் நிகழ்ச்சி ஏதாவது அங்கு இடம்பெறுகின்றதா? ஏனெனில் இணையவசதியற்ற நேயர்கள் (குறிப்பாக முதியோர்) தம் அபிப்பிராயங்களைச் சொல்ல வழி அல்லவா?

Sundar said...  

பூங்காவில் ஒலி/ஒளித் தொகுப்பைக் கண்டேன். மிக அருமையாகக் கொண்டுவந்திருக்கிறீர்கள். இதனைக் கேட்ட பிறகு சொல்கிறேன். நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...  

மலைநாடர்!
துல்லியமான ஒலிப்பதிவு; தெவிட்டாத "அண்ணறைற்"...நிகழ்ச்சி நல்லபடி அமைந்துள்ளது.
உங்கள் முகப்புக்கு ஒரு "அச்சா" போடலாம்.

மலைநாடான் said...  

ஞானவெட்டியான் ஐயா!

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

மலைநாடான் said...  

சுந்தர்!

உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.

மலைநாடான் said...  

பிரபா!

என்னை நேரடி நிகழ்ச்சியான்றில் கலந்து நேயர்களடன் உரையாடும்படி நிலையத்தினர் கேட்டுள்ளார்கள். நான்தான் சில நிகழ்ச்சிகள் சென்றபின் உரையாடுவதாகச் சொல்லியுள்ளேன்.
இணையப் பரப்புக்கு அப்பால் உள்ள நேயர்களின் அபிப்பிராயம் மிக முக்கியம். அதை அறிந்துகொள்ளும் ஆவலில்தான் நானும் உள்ளேன்.
ஆலோசனைக்கு நன்றி.

மலைநாடான் said...  

யோகன்!

அப்படியா? முகப்பு நன்றாக இருக்கிறதா? அப்படியென்றால் அதற்கு எங்கள் தாய்மண்தான் காரணம். இந்தக் காட்சி எங்கள் சொந்த கடலும் கரையும்.:) பாராட்டுக்கு நன்றி.

Post a Comment