இணையத்தில் இன்பத்தமிழ் 4
நண்பர்களே!
இணையத்தில் இன்பத்தமிழ் இவ்வார நிகழ்ச்சியில்,
இந்நிகழ்ச்சியினை வானலைக்கு ஏந்திவரும் ஐரோப்பியத் தமிழ்வானொலி க்கு இன்று மூன்றாவது அகவை. அதுகுறித்த வாழ்த்து நிகழ்ச்சி.
இணையத்தமிழ் தொடரில், தமிழ் யூனிக்கோட் எழுத்துருக்களில் பாமினி எழுத்துருவை, பொங்குதமிழ் செயலியை, சுரதா தமிழ் எழுத்துரு மாற்றி, என பல்வேறு தமிழ் இணையச்செயலிகளை வடிவமைத்து, இலவசமாகவே வழங்கியுள்ள நமது நல்லறிஞர் சுரதா குறித்த ஒரு சிறு குறிப்பு.
வலைப்பதிவுலகிலிருந்து, பதிவர், ஒலிபரப்பாளர், இலக்கிய ஆர்வலர், என பன்முகப் பரிச்சயம் கொண்ட நண்பர் கானா.பிரபா வின், மாட்டுவண்டில் எனும் வலைப்பதிவின், ஒலிப்பதிவு. அதனோடிணைந்து வரும் ஈழக்கவிஞர் நீலாவணனின் கவிவரிகளில், ஈழத்து இசை இரட்டையர் கண்ணன்-நேசம் அவர்களின் இசையமைப்பில், ஈழத்துக் கலைஞர் மா.சத்தியமூர்த்தி அவர்களின் இனிமையான குரலில், ' ஓ வண்டிக்காரா..' பாடல் என்பனவும் வருகிறது.
நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.
இணையத்தில் இன்பத்தமிழ் 4.mp3 |
இச்செயலியில் நிகழ்ச்சியைக் கேட்கமுடியாவிடின், தயவு செய்து பக்கபட்டியில் மேலேயுள்ள செயலியில் கேட்கலாம்.
Labels: ஒலிபரப்பு
வணக்கம் மலைநாடான்
முதலில் என்னுடைய பதிவையும் ஒரு பொருட்டாக எடுத்து (கஷ்டப்பட்டு) வானொலி வடிவாக்கியமைக்கு நன்றிகள். ஒலிப்பதிவைப் பின்னர் கேட்டுவிட்டுக் கருத்தளிக்கின்றேன்.
பிரபா!
நன்றி. கேட்டுச் சொல்லுங்கள்.
வணக்கம்...மலைநாடன் கேட்டேன்... நன்றாக இருந்தது நன்றிகள்.
கேட்டேன்.
நல்லாயிருக்கு.
சின்னக்குட்டி. நன்றி
மலைநாடர்!
நல்லாயிருந்தது.தகவல்கள் பதிவைப் படிக்காமல் கேட்போருக்கு மேலும் சுவையூட்டும்.
கேட்டேன்.
மிகவும் நன்றாக இருக்கிறது மலைநாடான்.
வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.
வசந்தன்!
வருகைக்கு நன்றி. அவ்வளவுதானா?:)
யோகன்!
நீங்கள் சொல்வது சரிதான்:)
நன்றி
வணக்கம் மலைநாடான்
இன்றுதான் முழுமையாகக் கேட்டேன், சிறப்பாகச் செய்திருந்தீர்கள், தொடரட்டும் உங்கள் பணி
நல்ல தேர்வுப் பாடல்களுடன் நன்றாக இருக்கின்றது. நடுநடுவே பாடல்கள் ஒலிக் கேட்கும் ஒலிச் சித்திரங்களில் எனக்கு தீராத காதல் உண்டு. தொடர்க
முழுவதும் கேட்டு மகிழ்ந்தேன்!
அரிய சேவையைப் பாராட்டுகிறேன்.
அடுத்த பதிவு வரும் போது மறக்காமல் எனக்கும் சொல்லவும்.
நன்றி.
துளசிம்மா!
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
பிரபா!
முழுவதுமாகக் கேட்டுவிட்டீர்களா? உங்கட பதிவை ஒன்டும் கெடுக்கேல்லத்தானே?
இல்லவே இல்லை, இன்னும் மெருகூட்டியிருக்கின்றீர்கள்
மலைநாடான் அருமையாய் இருக்கிறது.
ஓ வண்டிக்காரா நான் சிறுபிள்ளையாய் இருக்கும்போது இலங்கை வானொலியில் கேட்டப் பாடல்.
அப்போது எங்கள் ஊரில் இலங்கை வானொலிதான் சரியாய் கேட்கும்.
மீண்டும் கேட்கத் தந்ததற்கு நன்றி.
ஏதோ இணையச் சிக்கல் போலும். என்னால் கேட்க முடியவில்லை. இருந்தாலும் நிகழ்ச்சி அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.
சயந்தன்!
இலங்கை வானொலியின் ஒலிச்சித்திரங்கள் எனக்கும் நிரம்பப் பிடிக்கும். வருகைக்கு நன்றி.
SK
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. உங்கள் மின் மடல் முகவரி தந்தால் நிச்சயம் அறிவிக்க முடியும். எனது மின்னஞ்சல் முகவரி பக்கப்பட்டிக்குள் உள்ளது.
நன்றி
சிறில் அலெக்ஸ்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஓ..வண்டிக்காரா முதல் வெளியீட்டில் இன்னும் தெளிவாக இருக்கும். இதில் கொஞ்சம் வாத்திய இசை மேலேநிற்கின்றது.
'இலங்கை சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம்' என்ற வார்த்தைகளை சின்ன வயதில் வானொலியில் கேட்டக்கொண்டே தையல் மெஷினில் வேலைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.பாடசாலை,அம்மம்மா,அப்பப்பா போன்ற ஒரு சில ஈழத்து வார்த்தைகளை கேட்கும்போது வித்தியாசமாக இருக்கும். ஒலிபரப்பப்படும் பாடல்களின் கண்ணியமும்,தரமும் பார்க்கும் வேலையின் சிரமத்தைக் குறைத்துவிடும்.ராஜேஸ்வரி சண்முகத்தின் குரலையும்,பின்னாளில் தொலைகாட்சி மூலம் பிரபலாமான பி.ஹெச்.அப்துல் ஹமீதுவின் குரலையும் இன்றும் மறக்கமுடியாது.அந்த நினைவுகளை மூட்டியது இந்த வார நிகழ்ச்சி.அதிலும் இடையிடையில் பாடல்களோடு நிகழ்ச்சி நகர்வது மேலும் நிறப்பு..கானா பிரபா சொன்னது மாதிரி நான் கட்டுரையை படீக்காதவன் என்பதால் கேட்கும்போது நன்றாகவே இருந்தது.
வணக்கம் மலைநாடான்.
இன்று தான் உங்கள் நிகழ்ச்சியை கேட்டேன். நன்றாக உள்ளது.
ஆழியூரான்!
வருகைக்கும், தங்கள் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
சந்திரன்!
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி