"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 3

நண்பர்களே!

இவ்வார வானொலி நிகழ்ச்சியை இங்கே நீங்கள் கேட்கலாம்.

இவ்வார நிகழ்ச்சியில், இணையத்தமிழ் பற்றிய தொடரில், தேனி யூனிக்கோட் எழுத்துருவை, தமிழ் இணையப்பரப்பு வழங்கிய நல்லறிஞர்: தேனி உமர் பற்றிய சிறு நினைவுக்குறிப்பு..

தமிழின் முக்கியமான ஒரு மென்பொருள் எழுதுகருவியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரின், அழகிய குரலில், பாரதிபாடல்.

பதிவர், ஆழியூரானுடன் ஒரு இணைய உரையாடல். என்பன இடம்பெறுகிறது.

நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

நிகழ்சியில் இடம்பெற்றுள்ள இணைய உரையாடலில், ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்த நண்பர் ஆழியூரானுக்கும், பாடலை மின் மடல் மூலம் அனுப்பியுதவிய, நண்பர் சிந்தாநதி அவர்களுக்கும் மிக்க நன்றி.


நண்பர்களே!

இந்நிகழ்ச்சியை வானலையில் எடுத்து வரும் ஐரோப்பியத் தமிழ் வானொலி வரும் 11.02.07 தன் சேவையில் இரண்டு வருடங்களை நிறைவு செய்கிறது. அப்பணியினைப் பாராட்டு முகமாக, அடுத்தவார நிகழ்ச்சியில் சிறிய வாழ்த்து நிகழ்ச்சியைச் சேர்த்துக் கொள்ள எண்ணியுள்ளோம். இவ்வாழ்த்து நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து கொள்ள விரும்பின், இங்கே உங்கள் வாழ்த்துக் களையும், கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.



ஒலிபரப்பைக் கேட்க:

இணையத்தில் இன்பத்தமிழ் 3.
இச்செயலி இயங்காவிடத்து, மேலே பக்கப்பட்டிக்குள் உள்ள செயலியிலும்
கேட்கலாம்.
ஐரோப்பிய வானொலியில், ஞாயிறு மாலை ஐரோப்பியநேரம், 07.30 மணிக்கு நேரடியாகக் கேட்கலாம். இணையவழியில் கேட்பதற்குரிய சுட்டிகளுக்கு, அவர்களது இணையத்தள முகவரி.

Posted byமலைநாடான் at  

17 comments:

Unknown said...  

மலைநாடான், ஆழியூரான்
வலைப்பதிவு வானொலிக்கூட்டினை இன்னொரு படி மேலே எடுத்துப் போயிருக்கின்றீர்கள்.
சில்பா ஷெட்டி தொடர்பான உரையாடல், குமுதத்தின் கூத்துவாணலி ஒளிபரப்போடு வைத்துப்பார்க்கும்போது இன்னும் மதிப்புக்குரியதாகிறது. ஆனால், ஆழியூரானின் பார்வை முழுமையானதல்ல என்பது தனியான கருத்து (ஆழியூரான் சொன்னவற்றோடு மாறுபாடான கருத்தில்லை. ஆனால், நிறம் சம்பந்தப்பட்ட இன்னும் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒதுக்கித்தள்ளிவிட்டுப் போக முடியாது )

சோமி said...  

நல்ல முயற்சி மலை நாடன் அவர்களே.

தெளிவாக கேட்க்க முடிகிறது.ஆழியூரானின் குரலை இன்னும் தெளிவுபடுத்த முடிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

வடுவூர் குமார் said...  

தெளிவான குரல்
நன்றாக இருந்தது.
திரு.உமருக்கு அஞ்சலி செய்தது மிகவும் பொருத்தமாக இருந்தது.

பாரதி தம்பி said...  

//ஆனால், ஆழியூரானின் பார்வை முழுமையானதல்ல என்பது தனியான கருத்து (ஆழியூரான் சொன்னவற்றோடு மாறுபாடான கருத்தில்லை. ஆனால், நிறம் சம்பந்தப்பட்ட இன்னும் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒதுக்கித்தள்ளிவிட்டுப் போக முடியாது )//

பெயரிலி,,,
நிறவெறியை அனுபவத்தில் உணராத ஒரு தேசத்தில் வாழ்பனென்ற அடிப்படையில் என் கருத்து குறைபாடு உடையதாக இருக்கலாம்.ஆனால்,நிறம்,சாதி...ஆகிய இரு வெறிகளுமே பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது.அதனால் ஒன்றை சுட்டும் கருத்துக்கள்,மற்றதற்கும் கிட்டத்தட்ட பொருந்தி போகுமென்றே நினைக்கிறேன்.வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நிறவெறி,சாதிவெறி இரண்டிற்கும் அதிகம் வேறுபாடில்லை என்பது என் கருத்து.இதில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும்.

ஆனால் இந்த உரையாடலிலும்,என் பதிவிலும் நான் பிரதானப்படுத்தியிருப்பது இந்திய ஊடகங்கள், இந்த ஷில்பா விவகாரத்தை அனுகும் விதத்தைதான் என்பதையும் தங்களுக்கு சுட்டிக்காட்டுக்கிறேன்.(இதே கருத்தை என் பதிவிலும் தங்களுக்கான பதிலாக சொல்லியிருக்கிறேன்.)

-/பெயரிலி. said...  

மலைநாடான்,
இரண்டாவது -/பெயரிலி. நானில்லை. புளொக்கர்-கடைசி வடிவத்திலே "other" இனைப் பயன்படுத்தினால், பெயரையும் அப்பெயருக்குரியவரின் பதிவு முகவரியையும் இணைத்துவிட வசதி வந்ததா, மக்களுக்கு மகிழ்ச்சிதான். ஈழபாரதியின் பதிவிலே வசந்தன், தீவென்று விளையாடினார்கள். இப்பொது இங்கே என் பெயரிலே ஆட்டம். குறிவைக்கும் பதிவுகளை வைத்து நோக்கத்தினைப் பிடித்துவிடலாம். இதே ஆட்டம் நானும் ஆடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் ;-) இதற்குப் புத்தியான வேலை, தமிழ்மணத்திலே பின்னூட்டங்களை மட்டுறுத்துவதுபோல, புளொக்கர் பின்னூட்டங்களை 1. புளொக்கர் கணக்கோடு வந்தால், ஆளைக் கேட்டு ஆட்டம் அல்லது 2. அநாமதேயம் எனக் கணக்கிலாமல் வந்தால், மட்டுறுத்தி அனுமதிக்க விதி கொண்டு வரவேண்டும். இந்நிலையிலே 'other' இலே மற்றையவர் கணக்கிலே புளொக்காட்டம் ஆட முடியாது. அதே நேரத்திலே கணிமுகவரி கண்டுகொள்ள வசதி பதிவிலேயே செய்துகொள்ள வேண்டும்.

இங்கேகூட டோண்டு (சொந்தமாக எழுதும்போது போட்டுக்கொள்வதுபோல ;-)) புளொக்கர் கணக்கினைப் பார்த்துக்கொள்வது நல்லது; எனது http://www2.blogger.com/profile/06784891490930921279; கீழே -/பெயரிலி. ஆனவர் இணைப்பிலே http://www2.blogger.com/profile/06784891490930921279 என்று other தேர்விலே கொடுத்திருந்தாலுங்கூட, அவரின் பின்னூட்டத்தின்மேலே தடவும்போது, http://www.blogger.com/profile/1490050 என்பதுதான் வருகிறது.

ஆழியூரான், நிச்சயமாக நீங்கள் சொல்வதிலே எதுவிதமான மறுப்புமில்லை. கூடவே இந்த 'reality show' பற்றி மலைநாடான் சொல்வதிலுங்கூட. நான் சொன்னது, நாங்கள் பேசும்போது, ஒன்று உலகம் சார நிறவாதம் பற்றிப் பேசுகிறோம், அல்லது ஊர் சார முழுக்கவே ஷில்பா ஷெட்டி விவகாரம் குறித்துத் தவிர்த்துப் பேச விரும்புகிறோம். ஆனால், இரண்டினையும் ஒருங்கே சேரப்பேசவில்லையே என்பதுதான்.

சின்னக்குட்டி said...  

வணக்கம் மலைநாடன் நிகழ்ச்சி கேட்டேன்..கலந்துரையாடல் போவதால் முன்னைய நிகழ்ச்சிகளிலும் நல்லாயிருக்கிறது.

ஷில்பா ஷெட்டி நிகழ்ச்சி மூலம் நிறவெறிக்கான எதிரான ஆதரவை பிரிட்டன் மக்கள் விரும்பியோ விரும்பாமாலோ கொடுத்திருக்கிறார்கள் உண்மை தான். இனவெறியை கக்கிய jade பல்லாயிர கணக்கான வருமானத்தை இழந்திருக்கிறார். இதை முற்றிலும் நாடகமாக எண்ணுவது நகைப்பானது... இதில் ஸில்பா ஸெட்டியோ சன் 4 ஓ பணம் சம்பாதித்துருக்காலாம்.. ஆனால் இதை பார்க்கும் போது பிரிட்டன் பன்முக கலாச்சார நாடு ஆகவே போயே தீரவேண்டும் அதன் தடத்தை மீறி போக முடியாது என்பதை எடுத்து காட்டுகிறது

கொழுவி said...  

மலைநாடான்,
பதிவு பற்றிப் பிறகு.
முதலில் இந்தப் பின்னூட்டப் பிரச்சினை.

பெயரிலி தன் தரப்பைச் சொல்லிவிட்டார்.
ஆனால் இது இப்பதிவுடன் மட்டும் தொடர்புடையதன்று.

அண்மை நாட்களில் வேறும் சிலபதிவுகளில் இந்த ஆட்டம் நடந்துவருகிறது.
பாதிக்கப்படுபவர்கள் என்று பார்த்தால் சிலர் தான்.
வசந்தன், சயந்தன், கானா.பிரபா, தீவு, பெயரிலி, கொழுவி...

இதில் வேடிக்கை என்னவென்றால் சில இடங்களில் இது அப்பதிவரின் பின்னூட்டமன்று எனக் கணிக்கக்கூடியதாக இருந்தும் அதை வெளியி்ட்டுவிட்டு இருப்பதுதான். யோகன் பாரீசும் அதைத்தான் செய்தார்.
குறைந்தபட்சம் ஒரு சந்தேகத்துடனாவது அதுபற்றி உறுதிப்படுத்திவிட்டு வெளியிடலாம்.
இப்பிரச்சினையை எதிர்கொள்வது தற்போது மிகச்சிலர் மட்டுமே.
எனவே தொடர்புகொள்வதுகூட சிக்கலாக இராது.
தாமதித்து பின்னூட்டத்தை வெளியிடுவதால் பிரயளம் வந்திடாது.

சயந்தன் said...  

//பாதிக்கப்படுபவர்கள் என்று பார்த்தால் சிலர் தான்.
வசந்தன், சயந்தன், கானா.பிரபா, தீவு, பெயரிலி, கொழுவி...//

ஏனப்பா.. சிவனே எண்டு இருக்கிறன்.. என்ரை பேரையும் எடுத்துக் குடுக்கிறீரோ.. உதைப் பாத்திட்டு என்ரை பேரிலையும் இனிப் போடுவாங்களோ தெரியேல்லை..

எண்டாலும்.. அந்தப் பிரச்சனைக்குள்ளை நான் தலையிடவில்லையெண்ட அளவில தலை தப்பும்.. இல்லாட்டி போட்டது தான் போட்டம் இந்தாளின்ர பேரிலையும் ஒண்டைப் போடுவம் எண்டு போடுறாங்களோ தெரியாது..
:( அழுகையா வருது..

Anonymous said...  

மலைநாடர்!
இரவே! கேட்டுவிட்டேன். தரமாக இருந்தது. திரு. உமர் அவர்களை நினைவு கூர்ந்தது மிக நன்று. உந்த பிள்ளையின் விவகாரம் எனக்கு என்னமோ? நீ அடிக்குமாப்போல அடி;நான் அழுகுமாப் போல அழுகிறன் கதை போல் தான் உள்ளது. எனினும் பிள்ளை போன நோக்கம் நிறைவேறி விட்டது. இனி நாம் என்னத்தைப் பேசுவது.இந்த வெறிகள் முற்றாக நீங்குமென எதிர் பார்க்க முடியாது.
ஆழியூரான் அவர்களுடன் கலந்துரையாடலில்; உந்தப் பிள்ளையின் விவகாரத்தை விட; அந்த நாய்ச் சமாச்சாரம் நன்றாக இருந்தது. இன்னும் எத்தனை காந்தி பிறக்க வேண்டுமோ??
ஆழியூரான் குரலில் ஆரம்பத்தில் தெளிவின்மை இருந்தது.
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...  

//குறைந்தபட்சம் ஒரு சந்தேகத்துடனாவது அதுபற்றி உறுதிப்படுத்திவிட்டு வெளியிடலாம்.
இப்பிரச்சினையை எதிர்கொள்வது தற்போது மிகச்சிலர் மட்டுமே.
எனவே தொடர்புகொள்வதுகூட சிக்கலாக இராது.
தாமதித்து பின்னூட்டத்தை வெளியிடுவதால் பிரயளம் வந்திடாது. //


பெயரிலி, கொழுவி,சயந்தன்!

நான் நேற்று வலைப்பதிவுகள் பக்கம் வராதபடியால், இந்த போலிப்பின்னூட்ட ஆட்டம் தெரியாது. ஆனால் பெயரிலி பெயரில் எனக்கு இன்று காலை இடப்பட்ட பின்னூட்டம் போலி என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் வேறு சில காரணங்களுக்காகவே பிரசுரித்தேன். இப்போ அப்பின்னூட்டம் நீக்கப்பட்டுவிட்டது.புரிந்துகொள்வீர்களென நம்புகின்றேன்.

மலைநாடான் said...  

பெயரிலி!

முதலில், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

ஷில்பாஷெட்டி தொடர்பான உரையாடலை நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ள எண்ணியதே, ஆழியூரானின் நேர்மையான கோபங்கொண்ட அவரது பதிவே. ஆனால் ஒலிப்பதிவுக்கு முன் பின்னான உரையாடலில் அவர் காட்டிய கண்ணியம், அவர் பண்பினை புடம்போட்டுக் காட்டியது. அதைவிட ஒலிப்பதிவில் அவரதுசரளமான மொழிநடை என்னை அசத்தியது. ஒரு இந்தியக்குடிமகனின் பார்வையில் மட்டுமே அவரது கருத்துக்கள் இருந்தபடியால்தான், இந்த உரையாடலில் இந்திய ஊடகம் மீதான விமர்சனமாக உரையாடலை அமைத்தோம். நிறவெறி தொடர்பாக இலேசகத் தொட மட்டுமே முடிந்தது. மேலைத்தேய நிறவெறி பற்றி இன்னுமொரு தடவை பேசுவோமே:))

மலைநாடான் said...  

சோமி!

ஊடகத்துறைசார்ந்த உங்களுடைய பாராட்டுக்கள் ஊக்கம் தருவதாக உள்ளது. நன்றி.

இணைய உரையாடலை ஒலிப்பதிவு செய்யும் போது, ஏற்பட்ட தவறுதான் ஆழியூரான் குரலின் தெளிவின்மை. இனிவரும்காலங்களில் இன்னும் முயற்சிப்போம்.

மலைநாடான் said...  

வடுவவூர் குமார்!

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

உமர் தம்பியை மறந்துவிடமுடியுமா?

மலைநாடான் said...  

ஆழியூரான்!

உங்கள் கருத்து எங்களுக்குப் புரிகிறது. பதிவில் சொன்னது போலவே நேர்மைத்திறன் மிக்க உங்களிடமிருந்து இன்னமும் எதிர்பார்க்கின்றேன்.:)))

மலைநாடான் said...  

பெயரிலி!

எங்களிடம் குழப்பம் இல்லை. எல்லாம் குழப்படிகளின் குழப்பம்தான்:)

வெற்றி said...  

மலை,
பதிவுக்கு நன்றி.
இன்று இரவு நிகழ்ச்சிகளைக் கேட்டுவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.

மிக்க நன்றி.

மலைநாடான் said...  

சின்னக்குட்டி!

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

நீங்கள் சொல்வதிலும் நியாயம் உண்டு. இவைபற்றி இன்னமும் விரிவாகக் கதைக்வேணும். கதைப்பம்.

Post a Comment