"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

குறும்படப்போட்டி - அறிவிப்பு

கு(றும்)றள் படப்போட்டி. போட்டி முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
விபரங்களுக்கு இங்கே வாருங்கள்

வணக்கம் நண்பர்களே!
ஊடகத்துறையும், தொலைத்தொடர்பும், வளர்ந்துள்ள இந்தக்காலப்பகுதியில், நாமும், நமது சமூகம் சாரந்து, அதைச் சரிவரப் பன்படுத்தி பலன்பெறலாமே எனும் நல்நோக்கோடு, இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சியைத் தயாரித்துவழங்கும் கானம் கலைக்கூடமும், இணையப்பரப்பிற்கு வெளியேயுள்ள சில நண்பர்களும் இணைந்து, இப்போட்டியை நடாத்துகின்றார்கள். போட்டியில் தெரிவாகும் முதல் மூன்று படங்களுக்கு, சிறப்புப் பரிசுகள் வழக்கபடும். இதற்குத் தொடர்பாளானாக நான் செயற்படுகின்றேன்.

எல்லோர்க்கும் எட்டாக்கனியாக இருந்த பல தொழில்நுட்பங்களும், விஞ்ஞானத்தின் அபரிமித வளர்ச்சியால், இலகுவாக எம் பாவனைக்கு வந்துள்ளது. இந்தவகையில், கருத்தைக்காட்சியாகத் தரும் ஒளிப்படத் துறைசார்ந்த பல்வேறு வடிவங்களில், குறும்படம் எனும் பகுப்பு எங்கள் ஆர்வங்களுக்கு வடிகாலாக வருகிறது. இரண்டுவரிகளில் இணையற்ற கருத்துக்களை வழங்கும் தமிழ்மறையாம் திருக்குறளினைப் போன்று, மிகக்குறைந்த நேரத்தில் கருத்தை வலியுறுத்தும் இவ்வடிவத்தில் நடாத்தப்படும் இப்போட்டியை குறள்படப்போட்டி என விழித்தோம்.
இதில் நீங்கள் கூடக்கலந்துகொள்ளலாம். உங்களிடம் எண்ணமும் விருப்பும் இருக்கிறது. ஆனால் ஒளிப்படக்கருவியெல்லாம் இல்லை என ஏங்குகின்றீர்களா? உங்களிடம் தெளிவுறப் படம்பிடிக்கக்கூடிய கருவியுள்ள செல்லிடத்தொலைபேசியிருந்தால், அதன் மூலம் கூடப் படமாக்கி, முயற்சிக்கலாமே. இதைப் படமாக்கவும், தொகுக்கவும், கொஞ்சம் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும். தேவையான சில மென்பொருட்கள் (உதாரணமாக: தொலைபேசியில் எடுக்கும் படங்களை கோப்புக்களாக மாற்றுவதற்குரிய மென்பொருட்கள்)இணையத்தில் இலவமாகவே தரவிறக்கம் செய்யமுடியும். இன்னும் என்ன தாமதம் உடனே உங்கள் பெயர்களை முலில் பதிவு செய்யுங்கள். பின் படைப்பினை அனுப்புங்கள். எல்லாம் ஒரு முயற்சிதானே..?
போட்டிக்கான விதிமுறைகள்.

தலைப்பு: வானமே எல்லை. உங்களுக்கு விருப்பமான எந்தவொரு
விடயத்தைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால் அவை எமது
சமூக முன்னேற்றங் குறித்ததாகவிருப்பது விரும்பத்தக்கது.
அரசியல், பாலியல்உறவு, சம்பந்தமான கருப்பொருட்கள்
உள்ளடக்கிய படைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

நேரம்: 1 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

கோப்பு: MPEG கோப்புக்களாகவும் 5 MB மேற்படாதவகையிலும்
இருக்கவேண்டும்.

போட்டி முடிவுத் திகதி: 30.04.2007 க்கு முன் படைப்புக்கள் அனுப்பி
வைக்கப்படவேண்டும்.

போட்டி முடிவுகள்: 14.05.007 அறிவிக்கப்டும்.

படைப்புக்கள் யாவும், முடிவுத்திகதிக்கு முன்னதாக மின்மடல் மூலம் அனுப்பி வைக்கவேண்டும். ஒருவர் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். படைப்புக்கள் முன்னர் எங்காவது வெளியிடப்பட்டதாக இருக்கக் கூடாது. போட்டியில் கலந்துகொள்ளத் தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும், கானம் கலைக்கூடத்தினரால் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும். அதற்கான ஒப்புதலுடனேயே, படைப்பாளர் தமது படைப்புக்களை அனுப்ப வேண்டும். போட்டி குறித்த எந்தவொரு நேர்முகத்தொடர்புகளும் மேற்கொள்ளப்படமாட்டாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

இந்நிகழ்ச்சி குறித்த அறிவித்தல் சென்றவாரமே, எனது இணையத்தளத்தில் வெளியாயிற்று. நண்பர்கள் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்த் தொடங்கிவிட்டார்கள். நீங்களும் பதிவு செய்யலாமே...
பதிவு செய்ய: ganam.team@gmail.com

Posted byமலைநாடான் at  

13 comments:

Anonymous said...  

செல்போனில குறும் படமோ? உருப்பட்டமாதிரித்தான்.

மாசிலா said...  

நல்ல முயற்சி மலைநாடான். கட்டாயம் உங்களது முயற்சிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கும்.

மேலே உளறிவிட்டு போயிருக்கும் அனானிக்கு எனது கண்டனங்கள்.

மலைநாடான் said...  

மாசிலா!

பாராட்டுக்கு நன்றி. வரவேற்கப்படும் என்றே நம்புகின்றேன். பார்ப்போம்.

மலைநாடான் said...  

அனானி!

உங்கள் எண்ணம் தவறானது. நேரம்கிடைக்கும் போது விரிவாக எழுதுகின்றேன். நன்றி

செல்லி said...  

மலைநாடான்
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடன்
செல்லி

மலைநாடான் said...  

அனானி!
உங்கள் கேள்ளிவிக்கு அன்றே பதில் சொல்லவிரும்பியபோதும், நேரம் கிடைக்காத காரணத்தால், விட்டுவிட்டேன். உங்கள் கேள்வியைப் பார்த்தபோது சிரிப்பே வந்தது.

சென்ற வருடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், "ஏழாவதுமனிதன்" இயக்குனர் ஹரிகரன் எதிர்காலத்தில், இத்தகைய செல்லிடத் தொலைப்பேசியில் எடுக்கப்படக் கூடிய குறும்படங்கள் பற்றிக்க குறிப்பிட்டபோது, நானும் ஆச்சரியம் அடைந்தேன். ஆனால் சொனி, நொக்கியா ஆகிய நிறுவனங்கள் இத்தகைய போட்டிகளை அறிவித்ததை அறிந்தபோதும், சதாமின் இறுதிக்கணங்களின் உண்மைகளை உலகெங்கும் காட்சிப்படுத்திய தொலைபேசி ஒளிப்பதிவும், அவரது கூற்றின் உண்மையை புரிந்து கொள்ள முடிந்தது.

அண்மையில் நடந்த சென்னைச்சங்கமம் நிகழ்ச்சி வீடியோத்துணுக்குகளை, தமிழ்மணம் பூங்காவிற்காகத் தொகுத்த போது அதன் சாத்தியங்கள் புரிந்தது.

இதன் சாத்திய அடிப்படையில் உருவாகியதே இப்போட்டிக்கான கட்டமைப்பு.

நன்றி.

தமிழ்பித்தன் said...  

மூன்று மணித்தியாலத்தில் சொல்லுற கருத்தே எங்கட சனத்துக்க விளங்குதில்ல இந்த நேரத்துக்க என்னத்தை சொல்லி என்னத்தை புரிய வைச்சு என்றாலும் என்றாலும் முயற்சிக்கிறன் ஆமாம் யாருக்கும்
கொசுறு:- யாருக்கும் அசினக்காவோட போன் நம்பர் தெரிந்தால் சொல்லுங்கோ ஏனென்றால் அவாதான் ஹீரோயினி ஹீரொ பற்றி பிச்சினை இல்லை பாருங்கொ
உண்மையில் நல்ல முயற்சி தொடர்ந்து செய்யுங்கள் சில வேளை எனக்கு இம் முறை நேரம் வரா விட்டாலும் அடுத்த முறை கட்டாயம் பங்கு பெறுவேன்
போட்டிக்கு அனுப்புவதை நாம் எமது வலைப்பூவில் பிரசுரிக்கலாமா?
ஆமாம் என்ன பரிசு மலைநாட்டான்

மலைநாடான் said...  

தமிழ்பித்தன்!

உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள். போட்டி முடிவுகள் வெளியான பின் உங்கள் வலைப்பூவில் வெளிப்படுத்தலாம்.

கொசுறு: மன்னிக்கவும். அசினக்காவின் தொலைபேசியிலக்கம் எம்மிடம் இல்லை:)

தமிழ்பித்தன் said...  

மலைநாட்டான் அவர்களே நான் விபரம் ஏதும் அனுப்பலாமே அல்லது கட்டாயம் கதைதான் வேண்டுமோ

மலைநாடான் said...  

தமிழ்பித்தன்!

நீங்கள் விபரம் என்று எதைக்குறிப்பிடுகின்றீர்கள் என்று விளங்கவில்லை. ஆனால் போட்டிக்கு அதன் கால அளவுக்குட்பட்ட முழுமையான தயாரிப்புக்களை மட்டுமே அனுப்பி வைக்க முடியும். உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுக்கள்.

நிலா said...  

மிக நல்ல முயற்சி
வாய்ப்பினை தவறவிட்டதற்காய் வருந்துகிறேன் :-(

Anonymous said...  

நிலா!

பதிவின் முகப்பில் போட்டி முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது என அறியத் தரப்பட்டுள்ளதே.

SurveySan said...  

Very good initiative.

இம்முறை முடியாது. அடுத்த முறை கண்டிப்பாக கலந்து கொள்கிறேன்.

Post a Comment