"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 11

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத்தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகிய " இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

இவ்வார நிகழ்ச்சியில், தமிழில் தட்டெழுத்துவது எப்படி எனும் முனைவர் நா.கண்ணன் அவர்களின் விளக்கவுரையின் முதற்பகுதி.

குரல் நடிப்பும், தென்அமெரிக்க இசைக்கோப்பும் கலந்த, இனிமையான ஒரு தமிழ் சினிமாப்பாடல்.

இவ்வார அறிமுகத்தில் லிவிங்ஸ்மைல் வித்யாவும், அவரது ஸ்மைல் பக்கமும்.

ஆகிய சிறப்பம்சங்களுடன் ஒலிக்கிறது.

நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

இணையத்தில் இன்பத்தமிழ் 11.mp...


இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.குறும்படப்போட்டி,

நண்பர்களே! நீங்கள் ஒரு குறும்பட ஆர்வலரா? . உங்களிடம் ஒளிப்படப் பதிவுக்கருவியுடன் கூடிய செல்லிடத்தொலைபேசி இருக்கிறதா? அப்படியானல் நீங்களும் கூட, இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். அறிய, இங்கே வாருங்கள்.

Posted byமலைநாடான் at  

3 comments:

Anonymous said...  

நிகழ்ச்சி நல்லா இருந்தது. குறும்படப்போட்டி பற்றி விபரமா இல்லையே

மலைநாடான் said...  

அனானி!

குறும்படப் போட்டி விபரமான அறிவிப்புக்கள் இவ்வாரத்தில் அறியத்தரப்படும்.

வருகைக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...  

மலைநாடர்!
கண்ணன் அண்ணா கூறியவை ஏற்கனவெ கேள்விப்பட்டவையே;இதற்கு முடிவு இல்லை; இன்னும் என்ன? வகையிலெல்லாம் இதன் ஆளுமை வரவுள்ளதோ பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

வாழும் புன்னகை வித்யா ..வித்யாசமானவர்; சாதிக்கப் பிறந்தவர். பாராட்டப்பட வேண்டியவர்.
அவர் பக்கங்களைப் படித்துள்ளேன். சமீபத்திலும் "சாரு நிவேதிகா" வுக்கு சாத்தியுள்ளார்.
இந்தத் துணிவுக்காகவே அவரைப் பாராட்டலாம்.

Post a Comment