"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 14

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

இணையப்பரப்பில் தமிழின் பயன்பாடென்னும் தொடர்சிந்தனைப் பகுதியில், முனைவர் நா. கண்ணன் அவர்கள் வழங்கிய இணையத்தமிழைக் கணனியில் எழுதும் முறைபற்றிய உரையாடலின் இறுதிப்பகுதி.


ஈழத்துக் கவிஞர் சேரன் அவர்களின் கவிவரிகளில் உருவான பாடல்.

இவ்வார அறிமுகத்தில், ஈழத்தில் பிறந்து, புலத்தில் தமிழால் கலைகளும், கவிதைகளும் படைக்கும் இளைஞி நித்தியா அவர்களும், அவரது சுடுவானம் வலைப்பதிவும் . கூடவே நித்தியாவின் அழகான குரலில் வரும் அருமையான அவரது கவிதைகளும். கவிதைகளை நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ள அனுமதி தந்த நித்தியாவிற்கு நன்றி.

இவ்வார நிகழ்ச்சியினை அலங்கரிக்கின்றன.

நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவிய நண்பர்கள் அனைவர்க்கும் , அதுபோல் நிகழ்ச்சி குறித்து கருத்துக்கள் தந்து நெறிப்படுத்தும் நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.


நிகழ்ச்சியைக் கேட்க :-

இணையத்தில் இன்பத்தமிழ் 14.mp...


இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையில் உள்ள செயலியும் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at  

5 comments:

சின்னக்குட்டி said...  

வணக்கம் மலைநாடர் நித்யாவின் கவிதைகளை யாழ் இணயத்திலையே கேட்டு பிரமித்திருக்கிறேன் வானொலியில் ஒலிபரப்பியதுக்கு நன்றிகள்..

வி. ஜெ. சந்திரன் said...  

நல்ல நிகழ்ச்சி தொகுப்பு.

நித்தியாவின் வலைப்பதிவு "சுடுவானம்"

சுடுவனம் இல்லையாக்கும்

மலைநாடான் said...  

சின்னக்குட்டி!

நித்தியாவின் கவிதைகள் எனக்கு அண்மையிலேயே அறிமுகமாகின. கேட்மாத்திரத்திலே பிடித்துப் போய்விட்டன. அவர் இன்னும் பிரகாசிக்கக் கூடிய கலைஞர் என்பது, அவர் படைப்புக்களில் தெரிகிறது. தங்கள் கருத்துக்கு நன்றி.

மலைநாடான் said...  

வி.ஜெ!

நிகழ்ச்சி ஒலிப்பதிவு செய்தபின் தான், தவறு எனக்கும் புரிந்தது. தவறுக்கு மன்னிக்கவும்.

கருத்துக்கு நன்றி.

Anonymous said...  

பாட்டு கொஞ்சம் கூடிற்றுதோ?

Post a Comment