"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 12

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய, "இணையத்தில் இன்பத்தமிழ்" நிகழச்சியின் ஒலிப்பதிவிது.

இணையத்தமிழ் குறித்த தொடர் சிந்தனைப் பகுதியில், கணனியில் தமிழில் தட்டெழுத்துவது பற்றிய நா.கண்ணன் அவர்களின் உரைத்தொடரின் இரண்டாம் பகுதி.

வி.ஜே. சந்திரனின் பதிவிலிருந்து மகாகவியின் பாடல்.

இவ்வார அறிமுகத்தில் மூத்த வலைப்பதிவர் ஐயா இராம.கி அவர்களைப்பபற்றியும், அவரது வளவு வலைப்பதிவு பற்றிய சிறுகுறிப்பு.

சயந்தனின் சாரல் வலைப்பதிவிலிருந்து, ஈழத்தமிழ் அகதிகள் குறித்த இந்திய அரசு, மற்றும் ஊடகங்களின் போக்குக் குறித்த ஒரு விமர்சன நோக்கிலான உரையாடல்.

ஆகியன, இவ்வார நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

தங்கள் பதிவுகளிலிருந்த விடயங்களை நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ள அனுமதி தந்த வலைப்பதிவு நண்பர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்புற அமைய உதவிய மற்றைய நண்பர்களுக்கும் நன்றி.

நிகழ்ச்சியைக் கேட்க

இணையத்தில் இன்பத்தமிழ் 12.


இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at  

6 comments:

Anonymous said...  

good & nice

நம்மவன் said...  

புதிய தொடக்க இசை நன்றாக இரக்கிறது.

சின்னக்குட்டி said...  

நம்மவன் சொன்னமாதிரி தொடக்க இசை நல்லாய் உள்ளது. ஆனால் நிகழ்ச்சியில் பின்னுக்கு ஒலிக்கும் ஒலி கூடிட்டுது

மலைநாடான் said...  

அனானி! நம்மவன்!

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.


சின்னக்குட்டி!
நீங்கள் சொல்லியுள்ள தவறை நானும் உணர்ந்தேன். ஆனால் வலையேற்றிய பின்னரே அதைப்புரிய முடிந்தது.அதனால் திருத்தம் செய்யமுடியவில்லை. இனிமேல் கவனித்துச் செய்கின்றேன். தங்கள் அவதானிப்புக்கும், பகிர்வுக்கும் நன்றி.

சயந்தன் said...  

நான் வரவனையானோடு சீரியசா கதைச்சு கொண்டிருக்கிறன். பின்னாலே ஆரோ சவுண்டை கூட்டிவிட்டு.. வயலின் வாசிக்கினம்.. நிலைமை புரியாத ஆக்களாயிருப்பினம் போல..

மதி-கந்தசாமி said...  

மலைநாடான்,

புதிய தொடக்க இசையும் குரல்களும் நன்றாகவிருக்கின்றன. 'வெய்யிலோடு' பாடலிசையையும் 'பருத்திவீரன்' படத்தொடக்க இசையையும் பயன்படுத்தியது நல்ல யோசனை! குரல்களும் உங்களுடைய குரல் பின்புறத்திலிருந்து வந்தது பெண்குரல் அருகே ஒலித்ததும் பிடித்திருந்தது.

பின்னணி இசையை இன்னமும் கொஞ்சம் குறைக்கலாமென்று நினைக்கிறேன்.

இராம.கி.ஐயாவை செவ்வி காணும் நாளை எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன். ஐயா 2003இலிருந்து வலைபதிந்து வருகிறார் என்றாலும் அவரது இணைய அனுபவம் அதைவிட நீண்டது. தமிழ் யாகூ குழுமங்களில் பல வருடங்களாகப் பங்கெடுத்து வருகிறார்.-மதி

Post a Comment