"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 13

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய, "இணையத்தில் இன்பத்தமிழ்"வாரந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

இணையத்தமிழ் தொடர்பான சிந்தனைத் தொடரில், கணினியில் தமிழில் எழுதுவது பற்றிய முனைவர் நா.கண்ணன் அவர்களின் ஒலிப்பத்தியின் மூன்றாம் பகுதி,

தமிழ்நதியின் கடவுளும் நானும் கவிதை,

இவ்வார அறிமுகத்தில், அவுஸ்திரேலியாவிலிருந்து வலைப்பதிவு செய்யும், பதிவர்: கனக. சிறிதரன் அவர்களும், அவரது தமிழ்வலையின் மினி நூலகம் வலைப்பதிவும், பற்றிய அறிமுகக் குறிப்பு,

சிஞ்சாமனுசி கலையகத்தின் ஒலிக்கோப்பில், கனடாவிலிருந்து வலைப்பதிவுலகில் நன்கறியப்பட்ட பெண்பதிவராகிய, சிநேகிதியின் ஒலிப்பதிவில் வந்த இசையும் கதையும் , ஆகியன இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் தங்கள் ஆக்கங்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்த அத்தனை நட்புள்ளங்களுக்கும் நன்றி.

நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நிகழ்ச்சியைக் கேட்க:

இணையத்தில் இன்பத்தமிழ் 13.mp...



இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலிருக்கும் செயலியிலும் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at மாலை 7:18   

6 comments:

Anonymous said... ஏப்ரல் 22, 2007 at இரவு 10:42   

அது சிஞ்சா மணி கலையகம் அல்ல. சிஞ்சாமனுசி கலையகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குனர்
சிஞ்சா மனுசி கலையம்

கானா பிரபா said... ஏப்ரல் 23, 2007 at இரவு 1:29   

//அது சிஞ்சா மணி கலையகம் அல்ல//

பெயருகளை மாத்தாதேங்கோ, பிறகு ஆபாசம் தொனிக்கும் சொல்லாக மாறிவிடும் ;-)

சினேகிதி said... ஏப்ரல் 23, 2007 at மாலை 4:42   

Na.Kannan last yr Tamil conference ku ingu vanthirunthaar..inta yr m varuvar endu ninakiren.

apo kanamum kathaum vera aakalum kekkinam pola :-))) nanri malainaadan.

மலைநாடான் said... ஏப்ரல் 23, 2007 at மாலை 5:35   

பிரபா!
சிஞ்சா மனுசி கலையக இயக்குனர்!

தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. இனிவரும் காலத்தில் கவனத்தில் கொள்கின்றோம்.

சினேகிதி said... ஏப்ரல் 23, 2007 at இரவு 9:40   

\\அது சிஞ்சா மணி கலையகம் அல்ல. சிஞ்சாமனுசி கலையகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குனர்
சிஞ்சா மனுசி கலையம் \\

உது இயக்குநர் எழுதேல்ல...கலையகம் என்றதை "கலையம்" என்று எழுதியிருக்கிறார்...கலையம் என்றால் பாத்திரம் தானே.

மலைநாடான் said... ஏப்ரல் 24, 2007 at காலை 5:30   

//உது இயக்குநர் எழுதேல்ல...கலையகம் என்றதை "கலையம்" என்று எழுதியிருக்கிறார்...கலையம் என்றால் பாத்திரம் தானே//

நீங்கள் சொன்னாச் சரியாத்தானிருக்கும்.:))
ஆனால் தவறு என்னவோ உண்மைதானே.

Post a Comment