"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

குறும்படப்போட்டி - மீள் அறிவிப்பு

கு(றும்)றள் படப்போட்டி. (போட்டி முடிவுத் திகதி பிற்போடப்பட்டுள்ளது)

வணக்கம் நண்பர்களே!
போட்டிக்கான அறிவித்தல் ஏற்று, இதுவரையில் 14 பேர்கள் முறையாக விண்ணப்பித்திருக்கின்றார்கள். இருப்பினும் மேலும் சிலர் கால அவகாசமிருப்பின் மேலும் சிலர் கலந்துகொள்வார்கள் என்பதாலும், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், சிறப்பாக இப்போட்டியில் கலந்து கொள்ளும் வகையிலும், போட்டிக்கான முடிவுத் திகதியினை மேலும் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். இந்த அவகாசத்தை பயன்படுத்தி மேலும் பல நண்பர்கள் கலந்து கொள்வார்கள் என நம்புகின்றோம்.
இனிப்போட்டிக்காக நாம் ஏற்கனவே அறியத் தந்திருந்த விபரங்கள்.

ஊடகத்துறையும், தொலைத்தொடர்பும், வளர்ந்துள்ள இந்தக்காலப்பகுதியில், நாமும், நமது சமூகம் சாரந்து, அதைச் சரிவரப் பன்படுத்தி பலன்பெறலாமே எனும் நல்நோக்கோடு, இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சியைத் தயாரித்துவழங்கும் கானம் கலைக்கூடமும், இணையப்பரப்பிற்கு வெளியேயுள்ள சில நண்பர்களும் இணைந்து, இப்போட்டியை நடாத்துகின்றார்கள். போட்டியில் தெரிவாகும் முதல் மூன்று படங்களுக்கு, சிறப்புப் பரிசுகள் வழக்கபடும். இதற்குத் தொடர்பாளானாக நான் செயற்படுகின்றேன்.

எல்லோர்க்கும் எட்டாக்கனியாக இருந்த பல தொழில்நுட்பங்களும், விஞ்ஞானத்தின் அபரிமித வளர்ச்சியால், இலகுவாக எம் பாவனைக்கு வந்துள்ளது. இந்தவகையில், கருத்தைக்காட்சியாகத் தரும் ஒளிப்படத் துறைசார்ந்த பல்வேறு வடிவங்களில், குறும்படம் எனும் பகுப்பு எங்கள் ஆர்வங்களுக்கு வடிகாலாக வருகிறது. இரண்டுவரிகளில் இணையற்ற கருத்துக்களை வழங்கும் தமிழ்மறையாம் திருக்குறளினைப் போன்று, மிகக்குறைந்த நேரத்தில் கருத்தை வலியுறுத்தும் இவ்வடிவத்தில் நடாத்தப்படும் இப்போட்டியை குறள்படப்போட்டி என விழித்தோம்.
இதில் நீங்கள் கூடக்கலந்துகொள்ளலாம். உங்களிடம் எண்ணமும் விருப்பும் இருக்கிறது. ஆனால் ஒளிப்படக்கருவியெல்லாம் இல்லை என ஏங்குகின்றீர்களா? உங்களிடம் தெளிவுறப் படம்பிடிக்கக்கூடிய கருவியுள்ள செல்லிடத்தொலைபேசியிருந்தால், அதன் மூலம் கூடப் படமாக்கி, முயற்சிக்கலாமே. இதைப் படமாக்கவும், தொகுக்கவும், கொஞ்சம் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும். தேவையான சில மென்பொருட்கள் (உதாரணமாக: தொலைபேசியில் எடுக்கும் படங்களை கோப்புக்களாக மாற்றுவதற்குரிய மென்பொருட்கள்)இணையத்தில் இலவமாகவே தரவிறக்கம் செய்யமுடியும். இன்னும் என்ன தாமதம் உடனே உங்கள் பெயர்களை முலில் பதிவு செய்யுங்கள். பின் படைப்பினை அனுப்புங்கள். எல்லாம் ஒரு முயற்சிதானே..?
போட்டிக்கான விதிமுறைகள்.

தலைப்பு: வானமே எல்லை. உங்களுக்கு விருப்பமான எந்தவொரு
விடயத்தைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால் அவை எமது
சமூக முன்னேற்றங் குறித்ததாகவிருப்பது விரும்பத்தக்கது.
அரசியல், பாலியல்உறவு, சம்பந்தமான கருப்பொருட்கள்
உள்ளடக்கிய படைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

நேரம்: 1 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.

கோப்பு: MPEG கோப்புக்களாகவும் 5 MB மேற்படாதவகையிலும்
இருக்கவேண்டும்.

போட்டி முடிவுத் திகதி: 30.05.2007 க்கு முன் படைப்புக்கள் அனுப்பி
வைக்கப்படவேண்டும்.

போட்டி முடிவுகள்: 14.06.007 அறிவிக்கப்டும்.

படைப்புக்கள் யாவும், முடிவுத்திகதிக்கு முன்னதாக மின்மடல் மூலம் அனுப்பி வைக்கவேண்டும். ஒருவர் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். படைப்புக்கள் முன்னர் எங்காவது வெளியிடப்பட்டதாக இருக்கக் கூடாது. போட்டியில் கலந்துகொள்ளத் தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும், கானம் கலைக்கூடத்தினரால் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும். அதற்கான ஒப்புதலுடனேயே, படைப்பாளர் தமது படைப்புக்களை அனுப்ப வேண்டும். போட்டி குறித்த எந்தவொரு நேர்முகத்தொடர்புகளும் மேற்கொள்ளப்படமாட்டாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

நீங்களும் பதிவு செய்யலாமே...
பதிவு செய்ய: ganam.team@gmail.com
போட்டியில் கலந்து கொள்வதற்கு வேண்டிய சில வழிமுறை உதவிகளை அறிந்துகொள்ள இங்கே வாருங்கள்.
இதுவரையில் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருப்பவர்கள்:-
..
peter selvaraj

ruban thanam

SABESAN THANGATHURAI

kathiravetpillai mohanadas

Sharveswara Rahulnath

arunasalam chandaramohan

Sundar rajan

sriekantharaja yogaraj

saravana veluswamy

blog biththan

Trichy-Ao

Chandra sekaran

panchaligam sajeerthan

Keerthi
ஆர்வத்துடன் பதிவு செய்து கொண்ட நண்பர்களே! இவ் அறிவிப்பு நிச்சயம் உங்களுக்கும் மகிழ்ச்சி தரும் என்று நம்புகின்றோம். உங்கள் ஆர்வத்துக்கும், தொடர்புக்கும் நன்றி.

Posted byமலைநாடான் at  

4 comments:

Anonymous said...  

மீள அறிவித்தலுக்காக!

Anonymous said...  

vanakkam!!

naan paarthu rasittha miha elilmika inimaiyaana thalam!!
mihavum suvaiyudan paruhaththarum paanam pola irunthathu.
thamilai maranthu pohum ilainyarku mikka selvaakkai undu pannakudiyathu. vaalthukkaludan thodarnthum unkal pani onka kadavul arul vendi...

anpudan kiruba ramanathan.
ennidam thamil eluthukkaana software illaathathaal ippadi eluthavendi vanthathukku varunthuhiren :-)
kiruba05@hotmail.de

மலைநாடான் said...  

கிருபா!

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

சோமி said...  

நல்ல முயற்சி. இத்தகைய முயற்சிகள் தமிழ் காட்சி ஊடகப் பரப்பில் மிக அவசியமானது.ஆர்வத்துடன் குறும்படம் எடுக்கும் படைப்பளிகளுக்கான கள்லம் இன்னும் அதிகம் அவசியமாகிறது.அவர்களின் போராட்டம் எத்தகையது எபது நான் அனுபவிப்பது.

வாழ்த்துக்கள்.

Post a Comment