என்ன பண்ணலாம்? எப்படிச் செய்யலாம்?
குறும்படப் போட்டி பற்றி அறிவித்தல் வெளியாகி பின்னரும், தமிழ்மணத்தில் வலம் வரும் நண்பர்களில் இருவரைத் தவிர, வேறு யாரும் பெயர் தரவில்லையே? நமக்குத் தெரிந்த ஆர்வமான நண்பர்கள் சிலர் கூட மெளனமாக இருக்கின்றார்களே..என்னவாக இருக்கும் என்று எண்ணியபோது நண்பர் சிந்தாநதி அழைத்து, ஏன் MPEG கோப்பாக கேட்கின்றீர்கள். செல்போனிலோ, சாதாரண வீடியோ கமெராவினாலோ படம்பிடிப்பவர்கள் அதை எப்படி MPEG கோப்பாக மாற்றுவது ? எப்படி எடிட் பண்ணுவது?
எப்படி இசை சேர்ப்பது? என நிறைய எப்படிகளை உள்ளடக்கிய அந்தப் பெரும் கேள்வியைக் கேட்டார். அடடே இது ஒரு பிரச்சினையாக இருக்கிறதா? நம்மவர்கள் எல்லோரும் ஆழ்கடலோடி முத்துக்குளிப்பவர்களாச்சே அவர்களுக்குத் தெரியாததா? என்றிருந்து விட்டேனே, முடிந்தவரைக்கும் , தெரிந்ததை சொல்லப் பார்க்கின்றேன் என்று சொல்லியபின் எழுதியது இவை.
உங்கள் கைத்தொலைபேசி கமெராவாலோ( 2 மெகாபிக்சலுக்கு குறையதிருப்பின் தெளிவாக இருக்கும்) வீடியோ கமெராவினாலோ படம் பிடித்ததை வெட்டி ஒட்டி, விரும்பிய வண்ணமாய் தொகுக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு ஒரு இலகு மென்பொருள் இருந்தால் உதவியாக இருக்கும், அதுவும் இலவசமாக இருந்தால் நல்லது என்று எண்ணுகின்றீர்கள், அப்படித்தானே ?
நீங்கள் படம் பிடித்ததைக் கணனியில் பதிவு செய்து கொள்ளுங்கள். பின் இந்தத் தளத்திற்கு சென்று MPEG File ஆக மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் கைத்தொலைபேசியில் படம் பிடித்திருந்தால், அநேகமாக அவை 3 GP கோப்புக்களாக இருக்கும். எந்தவிமான வீடியோ பைல்களையும், இந்தத் தளத்தில் கிடைக்கும் மென் பொருளின் உதவியோடு MPEG கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.
பின்னர் இந்தத் தளத்தில் கிடைக்கும் மென்பொருளின் உதவியோடு, படத்தொகுப்பு வேலைகளைச் செய்யலாம். இசை சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் வீடியோ கமெராவினால் படம்பிடித்திருந்தால், அவை Avi கோப்புக்களாக கணனியில் சேமிக்கப்படும். அவற்றை நேரடியாக படத்தொகுப்பில் இணைத்துக்கொள்ளுங்கள். பின் எல்லாவேலைகளும் முடிந்தபின் முதலில் குறிப்பிட்ட தளத்தில் கிடைக்கும் மென்பொருள் உதவியுடன் MPEG கோப்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.
மேலே நான் சுட்டிய இரு தளங்களும் சற்று இலகுவாக இயங்குபவையாகவும், சற்று அதிக வசதிகளுடனும், இலவசமாகக் கிடைக்கின்றன. இவை தவிர இணையத்தில் மேலும் பல தளங்கள் இருக்கின்றன. உங்களால் முடியுமாயின் அவற்றின் உதவியோடும் செய்யலாம்.
இனி என்ன? முயற்சியுங்கள். முடிந்துதும் அனுப்பி வையுங்கள். போட்டி முடிவுத்திகதி 30.05.07 வரை நீடிக்கப்பட்டுள்ளது. முதலில் உங்கள் பெயர்களைப் பதிவு செய்யுங்கள் நண்பர்களே!
பதிவு செய்ய:- ganam.team@gmail.com
எழுதத் தூண்டிய நண்பர் சிந்தாநதிக்கு நன்றிகள் _/\_
Labels: அறிவித்தல்