"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 16

வணக்கம் நண்பர்களே!

"ஐரோப்பியத் தமிழ் வானொலியின்" வானலைவழியாக, இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" வாரந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.

புதிய பகுதியாக தமிழ்மறையாம் திருக்குறள் வரிகள் இசைவடிவில்,

இணையத்தமிழ் பயன்பாட்டுத் தொடர் வரிசையில், தமிழ்விசை 99 பற்றிய தமிழ் ஆர்வலர், பதிவர் ரவிசங்கருடன் கலந்துரையாடல்,

அன்னையின் விருப்பத்திற்குரியபாடல்,

இவ்வார அறிமுகத்தில் ஆன்மீகம், இலக்கியம், இசை என்ற வகைகளில், இணையப்பரப்பில் எழுதி வரும் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களும், அவரது மாதவிப்பந்தல் வலைப்பதிவு,

ஆகிய சிறப்பம்சங்கள், இவ்வார நிகழ்ச்சியை மெருகுசேர்க்கின்றன.

கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்த, ரவிசங்கர் அவர்களுக்கும்,
நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவிய அனைவர்க்கும் மிக்க நன்றிகள்.


நிகழ்ச்சியைக் கேட்க :-

இணையத்தில் இன்பத்தமிழ் 16.mp...இச்செயலி இயங்காவிடத்து பக்கப்பட்டையில் உள்ள செயலியிலும் கேட்கலாம்.

Posted byமலைநாடான் at  

9 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...  

மலை நாடர்!
நிகழ்ச்சியை புதிய மாற்றங்களுடன் இன்று கேட்கிறேன். திருக்குறள் இவ்வடிவில் இப்போதுதான் கேட்டுள்ளேன். நன்றாக உள்ளது.
ரவிசங்கர் கூறும் சோம்பல் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நானும் முயற்சிக்கவில்லை.
பிரான்சின் அன்னையர் தினம் யூன் 3; எனினும் இந்தப் பாடல் எனக்கும் பிடிக்கும்.
கண்ணபிரான் ரவிசங்கர் வாசகர்களில் நானும் ஒருவன். ஆன்மீகத்தில் அவர் கைவண்ணம் சிறப்பானது.
"தமிழா தமிழா" யார்? எழுத்து; இசை

ரவிசங்கர் said...  

ஒலிபரப்புக்கு நன்றி, மலைநாடான். இந்த விசையமைப்பின் சரியான பெயர் தமிழ்99 அல்லது TamilNet99.

இது குறித்த மேலதிகத் தகவல்களை வாசகர்கள் இங்கு அறிந்துகொள்ளலாம் - http://blog.ravidreams.net/?p=218

மலைநாடான் said...  

யோகன்!

நீண்டகாலத்தின் பின் வந்துள்ளீர்கள். உங்கள்விரிவான கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றி.

தமிழ் தட்டெழுத்துமுறை பற்றிய ரவிசங்கரின் கருத்துக்கள் பொருள்பொதிந்தவையே. மெல்ல மெல்ல முயற்சியுங்கள்.

அன்னையர்தினம், உலகெங்கும் ஒரேநாளென்றுதான் நான் முன்பு நினைத்திருந்தேன். பின்னர்தான் தெரிந்தது, ஐரோப்பாவுக்குள்ளேயே வேறு வேறு நாட்களில் அது கொண்டாடப்படுவது. அதனால் என்ன அன்னையை வருடம் பூராவும் கொண்டாடலாம்தானே.

அந்தப்பாடல் மிசியம்மா திரைப்படப்பாடல். இது என்ன காரணத்துக்காக அவருக்குப் பிடித்தது என்பதை அவரிடமிருந்து கேட்டறியும் வயதினை நான் எய்து முன்னமே அவ காலமாகிவிட்டதால், கேட்க முடியவில்லை. அம்மாவுக்குப் பிடித்த பாடல் என்பதால் என்றும் என் விருப்பத் தேர்வுகளில் அதுவுமொன்று.

கண்ணபிரான் ரவிசங்கர் பலரது பிரியத்துக்குமுரிய இளைஞர் என்பதை அறிவேன். அவர் தமிழும் அழகு.

தமிழா தமிழா பாடல் பற்றிய விபரங்களுக்கு அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.
நன்றி.

சின்னக்குட்டி said...  

வணக்கம்... யோகனை ..இந்த பதிவு மூலம் மீண்டும் கண்டதையிட்டு மிக்க மகிழ்ச்சி..யோகரையும் செல்லியையும் கன நாளகாக பதிவுலகத்தில் காணவில்லை.

மலை நாடர்.. ரவிசங்கருடைய பேட்டியில்...நேற்று நேரடியாக கேட்டபோது.. உங்கள் குரல் தெளிவாயாய் இருந்தது.ரவிசங்கரின் பக்கம் இரைச்சல் சத்தமாய் இருந்தது.

மலைநாடான் said...  

இரவிசங்கர்!

நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டமைக்கும்,தமிழ்99 பற்றிய கருத்துக்களுக்கும், நன்றிகள். ஒலிப்பதிவின் ஒலித்தரம் எதிர்பார்த்தது போல் அமையவில்லை என்பது எனக்கு சற்று வருத்தமே.
நன்றி

மலைநாடான் said...  

சின்னக்குட்டி!

நீங்கள்சொன்னதை நானும் அவதானித்தேன். ஆனால் என்ன காரணம் என்று புரியவில்லை. கவனிக்கின்றேன். அவதானிப்புக்கும், தெரிவிப்புக்கும் நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...  

மலைநாடான் ஐயா
இரண்டு இரவிசங்கர்களையும்
ஒரே பதிவில் அழகாய் இணைத்து விட்டீர்களே! அறிமுகத்துக்கு மிக்க நன்றி!

இந்த வாரம் அலுவல் நிமித்தமாய் அயல்நாடு சென்றதால், இதை முன்பே பார்க்கத் தவறிவிட்டேன்.
சுட்டி தந்து சுவைக்கவும் வைத்தீர்களே! அருமை!!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...  

இரவிசங்கரின் உரையாடல் ஒலித்தரம் எல்லாம் கடந்தும் பயனுள்ளதாகத் தான் இருந்தது.
முதலில் கலப்பை, பராகா என்று பழகிவிட்டு நானும் Tamilnet99 பயன்படுத்தும் போது சற்று சிரமம் தான் பட்டேன்.
கணிப்பொறியாளர்கள் ஒரு மொழியிலேயே கோட் செய்து விட்டு, அதனூடே இன்னொரு மொழியில் கோட் செய்யும் போது சற்றே கடினப்படுவது மாதிரி தான் இதுவும்.

ஆனால் விசைஅழுத்தம் என்ற ஒன்றைப் பார்த்து அதனால் ஏற்படும் நன்மை தெரிந்துவிட்டால், இந்த சோம்பல் எல்லாம் பறந்து விடும். தேவை என்னவென்றால் செஞ்சு தான் பார்ப்போமே என்ற ஒரு முயற்சி தான்!

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் என்று அடுத்த கண்ணன் பாட்டுக்கும் ஐடியா கொடுத்து விட்டீர்களே! :-))

மலைநாடான் said...  

ரவிசங்கர்!

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.:))

Post a Comment