"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

இணையத்தில் இன்பத்தமிழ் 18

வணக்கம் நண்பர்களே!

ஐரோப்பியத்தமிழ் வானொலியில், ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின், இவ்வார ஒலிப்பதிவிது.


குறளிசை,


வாரம் ஒரு தகவல் பகுதியில், பதிவர் விஜே தரும் பாற்பொருட்கள் சிலவற்றின் பயன்பாடு,


மறைந்த மேதை, இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதன் பற்றிய கானா. பிரபாவின் பதிவிலிருந்து குறிப்புக்களும், பாடலும்,

இவ்வார அறிமுகத்தில், ஜெகத்தின் கைம்மண் அளவு வலைப்பதிவு.

நித்தியாவின் சுடுவானம் வலைப்பதிவிலிருந்து அழகான கவிதை

மே 31ந் திகதியில், எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் குறித்த ஆவணப் படத் தயாரிப்புக் குறித்த சோமியின் பதிவிலிருந்து சில பகிர்வுகள் , என்பன இவ்வார நிகழ்ச்சியினை அலங்கரிக்கின்றன.

நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நிகழ்ச்சியைக் கேட்க -


Get this widget Share Track details


Posted byமலைநாடான் at  

5 comments:

சின்னக்குட்டி said...  

வணக்கம் மலைநாடன்.. வாரம் ஒரு தகவலில் விஜே கூறும் குறிப்புகள் பிரயோசனமாயுள்ளன. தொடர்ந்து செய்யுங்கோ. மற்றய நிகழ்ச்சிகளும் நன்றாயிருந்தன நன்றிகள்.

மீறல் said...  

தகவலுக்கு நன்றி .

ஒலிப்பதிவு நல்ல தெளிவாகவுள்ளது.

மலைநாடான் said...  

சின்னக்குட்டி!

கருத்துப்பகிர்வுக்கு நன்றி.

வாரம் ஒரு தகவல் நிகழ்ச்சி யோசனை மட்டுமே என்னது. அதன் சிறப்புக்கான அடிப்படை அதில் வரக்கூடிய தகவல்களே. அந்த வகையில் கடந்த இரு வாரங்களும் இப்பகுதியில் கலந்து சிறப்பித்த விஜே நிறைவாகவே செய்திருந்தார். உங்கள் பாராட்டுக்குரியவரும் அவரே.
நன்றி.

மலைநாடான் said...  

மீறல்!

கருத்துப் பகிர்வுக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...  

மலைநாடர்!
விஜேயின் குறிப்புக்கள் பிரயோசனமானவை, பாற்கட்டி(சீஸ்)
வகையறாக்கள்..சோடியத்தை அதிகரித்து,குருதிஉயரழுத்தம் தோன்றாமல் அவதானிக்க வேண்டும்.
பிரபா- எல் .வைத்திய நாதனை நம் தென்னகச் சகோதரர்களிலும் சிறப்பாக நினைவு கூர்ந்திருந்தார்.
சோமியின் யாழ் நூலகம் பற்றிய பதிவு. அவர் வயதை நோக்கும் போது
பெரும் பொறுப்புடன் அணுகியுள்ளார்.
வெல்வார்.
தரமாக இருந்தது.

Post a Comment