இணையத்தில் இன்பத்தமிழ் 15
ஞாயிறு, மே 6, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய,
" இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்த்திரைப்படமான நிர்மலா திரைப்படத்தில் இடம் பெற்ற ' கண்மனி ஆட வா..' பாடல்,
இவ்வார அறிமுகத்தில், வலைப்பதிவர் மா.சிவகுமார் அவர்களது, எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். வலைப்பதிவு,
வலைப்பதிவுகள் குறித்து மா.சிவகுமாருடனான கலந்துரையாடல்,
ஆகியன இவ்வார ஒலிபரப்பில் இடம்பெறுகிறது.
நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சியைக் கேட்க:-
இணையத்தில் இன்பத்தமிழ் 15 |
இச் செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at இரவு 9:10
Labels: ஒலிபரப்பு
15 comments:
Subscribe to:
Post Comments (Atom)
மலை,
இதுவரை கேள்விப்படாத ஈழத்துத் திரைப்படத்திலிருந்து பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
பாடலின் பின்னனி இசை பாடகர் பாடும் போதும் போட்டி போட்டுக் கொண்டு பெரிய சத்தமாக ஒலிப்பதாக நினைக்கிறேன்.
நல்ல பணி. இன்னும் தொடரட்டும்.
வெற்றி!
தொழில் நுட்ப வசதிகள்பெரிதும் இல்லாத காலத்தில் ஒலிப்பதிவானஎபாடல் அது. அதனால் அந்தக் குறை இருக்கிறதென்று நினைக்கின்றேன்.
கருத்துக்கு நன்றி
வணக்கம்..மலைநாடன் ..நிர்மலா திரைபட பாடல்... ஏதோ இந்திய திரைபட பாடலின் சாயல் அடிப்பது போலிருக்கிறது.
மா. சிவகுமாருடனனா கலந்து உரையாடல் அருமை.
சின்னக்குட்டி!
முதலில் பகிர்வுக்கு நன்றி.
//நிர்மலா திரைபட பாடல்... ஏதோ இந்திய திரைபட பாடலின் சாயல் அடிப்பது போலிருக்கிறது//
தென்னிலங்கையில் உருவான தமிழ்ப்படங்களெல்லாம், தென்னிந்திய சினிமாவின் பிரதியாகத்தானே வந்திருந்தன. ஆதலால் பாடலும் அப்படித்தானே இருக்கும்.
//மா. சிவகுமாருடனனா கலந்து உரையாடல் அருமை//
கேட்டமாத்திரத்தில், எந்தவித முன் ஆயத்தங்களும் இல்லாமல், நடந்த உரையாடல் அது. ஆனால் உரையாடல் ஒலிப்பதிவில் எந்த இடத்திலும் வெட்டி ஒட்ட அவசியமில்லாது, மிக நேர்த்தியாக, கோர்வையாகப் பேசியிருந்தார். உண்மையில் அவரது உரைநேர்த்தி பாராட்டுக்குரியது.
ஆயத்தமில்லாத உரையாடல் என்பதால் ஆங்காங்கே ஏற்படும் தொய்வைப் புரிந்து கொள்ள முடிகிறது (ஒருவேளை ஆங்கிலச் சொற்களுக்குச் சரியான தமிழ்ச் சொல் தேடும் தாமதமாகவும் இருக்கலாம்!). மற்றபடி, குறிக்கப்பட்ட கருத்துக்கள் நன்று. இணையம் ஒரு தற்காலக் கல்வெட்டு என்னும் சிந்தனை மிகவும் அருமை.
--
உங்கள் எல்லா வலைப்பதிவுகளிலும் வார்ப்புரு அமர்க்களமாக இருக்கிறது.
ரவிசங்கர்!
எண்ணப்பகிர்வுக்கு நன்றி.
//இணையம் ஒரு தற்காலக் கல்வெட்டு என்னும் சிந்தனை மிகவும் அருமை//
அதனால்தான் சிலவேளைகளில் நண்பர்களுடன் கூட முரண்பட வேண்டியிருக்கிறதே :).
பாராட்டுக்களுக்கு நன்றி
I just heard the short and sweet Interview with Ma Sivakumar
Let me say that he is my class mate at Anna University.
I understood today and in this week after seeing his blogspot that he has good knowledge of Tamil.
I get motivated after hearing his interview to read more and learn more....
Transmission of ETA is amazing...
Good wishes to Ma Sivakumar.
ஆவணப்படுத்துதல் அப்படிங்கறது ரொம்ப அருமையான ஒரு விஷயம்.
நாளைக்கு ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழில் எது தேடினாலும் கிடைக்கும் என்றால் எத்தனை நல்லா இருக்கும்..
மிக நல்ல ஒலிப்பதிவு.நன்றி மலைநாடன் நன்றி சிவக்குமார்.
மா.சிவகுமாரின் செவ்வி பயனுள்ளதாய் இருந்தது. கல்வெட்டுக் கருதுகோள் உண்மை.
kmpartha !
தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சியும் நன்றியும்.
முத்துலெட்சுமி!
//நாளைக்கு ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக தமிழில் எது தேடினாலும் கிடைக்கும் என்றால் எத்தனை நல்லா இருக்கும்..
//
அந்தநாள் நிச்சயம் வரும். தங்கள் எண்ணப் பகிர்வுக்கு நன்றி.
சயந்தன்!
கல்வெட்டு கருதுகோளோடு உடன்பாடு உள்ளவர் நீங்கள் என்பதை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.:))
Nalla nikalsi. Good.
ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதை நிறுத்தி,பல பயனுள்ள, தொழில் சார்ந்த தகவல்களை வலைப்பதிவில் தர வேண்டும் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.
பயனுள்ள உரையாடல்.
ரசிகன், ராஜாமணி!
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
பயனுள்ள உரையாடல். இணையம் ஒரு தற்காலக் கல்வெட்டு கூற்று மிகவும் உண்மையானது. எல்லா பதிவுகளும் உங்களால் பார்க்கப்படுகிறது என்பது நல்ல ஆரம்பம். பணி தொடர வாழ்த்துக்கள்.