இணையத்தில் இன்பத்தமிழ் 22
வணக்கம் நண்பர்களே!
இன்று மாலை ஐரோப்பியத் தமிழ் வானொலி யில் ஒலிபரப்பாகிய,
" இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
இன்றைய நிகழ்ச்சியில் குறளிசை.
ஆகஸ்ட் மாதம் 5ந்திகதி சென்னையில் நடைபெறும் வலைப்பதிவர் பட்டறை குறித்த பதிவர் பொன்ஸ் அவர்களுடனான உரையாடல்.
இவ்வார அறிமுகத்தில், ஓசை செல்லாவின் "நச்" ன்னு ஒரு வலைப்பூ
மீளிசைப்பாடலாக வந்த திரையிசைப்பாடல்
ஆகியவை இவ்வார நிகழ்ச்சியினை அணிசேர்க்கின்றன.
ஒலிபதிவு சிறக்க உதவிய அனைவர்க்கும் நன்றி.
ஒலிப்பதிவினைக்கேட்க :-
|
குறும்படப்போட்டியில் வெற்றிபெற்ற படைப்புக்களைக்காண இங்கே வாருங்கள்.
Labels: ஒலிபரப்பு
10 comments:
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல முயற்சி. பொன்சுடனான உரையாடல் மிக நன்றாகச் சென்றது. பதிவர் பட்டறை குறித்த தகவலும் அருமை.
ராதா காதல் வராதா....பாடலுந்தான் அருமை.
7.40 க்கு etr கேட்டேன். நெடுமாறன் அவர்கள் செவ்வி கேட்கக் கிடைத்தது. இணையத்தில் இன்பத்தமிழ் நேரம் மாற்றப்பட்டு விட்டதா?
ராகவன்!
வருகைக்கும், கருத்துக்கும், நன்றி. ...பாடல் அருமைதான்..:)
வணக்கம் மலைநாடன்....பதிவர் பொன்ஸ் உடனான உரையாடல் நன்றாக இருந்தது
மலைநாடர்!
பொன்ஸ் தமிழகப் பெண் என அவர் பேச்சில் தெரிகிறது. ஒரு ஆங்கில வார்த்தையும் கலக்காமல், மிக அழகாக சொல்லவேண்டியதைச் சொல்லி ஆச்சரியப்படுத்தி விட்டார்.
அடுத்த வாரத்தை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
இந்த வார நிகழ்ச்சி அருமையாக இருந்தது. பொன்ஸின் விளக்கமும் நன்றாக இருந்தது. துள்ளலோடமைந்த பாடல் கேட்க இனிமை.
ரவிசங்கர்!
உங்கள் அவதானிப்புக்கும் தெரிவிப்புக்கும் மிக்க நன்றி. நிகழ்ச்சி நேரத்தில் மாற்றம் இல்லை. ஆனால் தொழில்நுடப்பத்தில் ஏற்பட்ட ஒரு தவறு நிகழ்ச்சியை முன் பின்னாக நகர்த்தி விட்டது அவ்வளவே. :(
இனிவரும்காலத்தில் இத்தவறு நிகழாதிருக்க முயற்சிக்கின்றோம். நன்றி.
மலை,
பதிவுக்கு மிக்க நன்றி.
பொன்ஸின் நேர்காணலின் மூலம் சென்னைப் பதிவர் பட்டறை பற்றி பல சங்கதிகளை அறிந்து கொண்டேன்.
பொன்ஸ் கொஞ்சம் தயக்கப்பட்டுக் கதைக்கிறார் போல் தெரிகிறது. சிலவேளைகளில் சரியான சொற்களைத் தமிழில் சொல்லவேண்டும் எனும் ஆர்வத்தில் வந்த தயக்கமோ தெரியாது.
பி.கு:- மலை, சென்னைப் பட்டறை போல ஒரு பட்டறையை ஏன் யாழ்ப்பாணத்திலும் நடாத்தக் கூடாது. பகீ யாழ்ப்பாணத்திலிருந்த்து பதிவெழுதுபவர்தானே? அவருடன் கதைத்து யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்க நாம் முயற்சி செய்யலாமோ? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் அப் பட்டறைக்கான பணச் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.
குறிப்பாக, முதலில் யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படி ஒரு பட்டறையை வைக்கலாம். இது பற்றி உங்கள் கருத்தை அறிய ஆவல். அதன் பின் நாம் பகீயைத் தொடர்பு கொண்டு அவரால் இதை நடாத்த முடியுமாவெனக் கேட்கலாம். அவருக்குச் சிக்கல் இல்லையெனின் நாம் பின்னிருந்து உதவலாம், இல்லையா?
யாராவது பதிவர்கள் மட்டக்களப்பு, வவுனியா, திருமலை, மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்து பதிகிறார்களா? தயவு செய்து உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். அவர்களின் மூலம் அப்பகுதிகளிலும் இம் முயற்சியை முன்னெடுக்கலாம்.
ராதா காதல் வராதா....பாடல் கேட்க இனிதாய் இருந்தது!
பொன்ஸ் நிறுத்தி நிதானமாக பல தகவல்களைச் சொல்லி இருக்காங்க! நன்றி.
//பி.கு:- மலை, சென்னைப் பட்டறை போல ஒரு பட்டறையை ஏன் யாழ்ப்பாணத்திலும் நடாத்தக் கூடாது//
வெற்றி...சரியாகப் பிடித்தீர்கள்! :-)நல்ல சிந்தனை! நடந்தால் மிகவும் சுவையாகவும் ஆர்வமாகவும் இருக்கும்!
//குறிப்பாக, முதலில் யாழ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இப்படி ஒரு பட்டறையை வைக்கலாம். //
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் 300 பேருக்கு துணைப்படையால் மரணதண்டனை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தினம் தினம் மாணவர்கள் ஒவ்வொருவராக சுட்டு படுகொலை செய்யப் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நாளைக்கு எவர் உயிருடன் இருப்பார் என அறிய முடியாத சூழ்நிலையில் அங்கு பதிவர் பட்டறை தேவையான ஒன்று தான்.
சனம் பாணுக்கு அழுகிறதாம். யாரோ கேக் கொடுத்தால் என்ன என கேட்டார்களாம்.