"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

பழ. நெடுமாறன் ஐயாவோடு பயணிக்கையில்..


11.06.2007 ல் சுவிற்சர்லாந்து ஜெனிவா நகரில், ஐ.நா சபையை நோக்கி நடைபெற்ற "வெல்கதமிழ்" எழுச்சிப்பேரணிக்காக, தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த, தமிழ்த்தேசிய இயக்கத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் ஐயா அவர்களை தமிழ்மணம் பூங்கா விற்காக செவ்வி காணச் சென்றிருந்தேன்.

முன்னரும் அவரை நேரில் பாரத்திருந்த போதும், ஐயா நோய்வாய்ப்பாட்டு குணமடைந்தபின்னர் இப்போதுதான் சந்தித்திருந்தேன். பேரணிநாளின்போது, எந்தவித அயர்சியும் அற்றவராக, பேரணியின் தொடங்கியதிலிருந்து, இறுதிவரை, நடந்து வந்த அன்றே ஆச்சரியத்திலாழ்த்திய அவர், செவ்விகாணச் சென்றபோதும், அசத்தினார் என்றே சொல்ல வேண்டும்.

இலண்டன் நோக்கிப் பயணமாகும் இறுதித்தருணங்களிலேயே அவரைச் சந்திக்க முடிந்தது. ஒளிப்பதிவு நேர்காணலுக்காக ஆயத்தங்களுடன் நான் சென்றிருந்த போதும், இறுதிநேரத்தில் அது இயலாமல் போனது. நேரப்பற்றாக்குறை காரணமாக, விமான நிலையம் செல்லும் வழியில், ஓடும் வாகனத்துக்குள்ளேயே செவ்விகாணத் தீர்மானித்து, எண்ணத்தைச் சொன்னபோது, என்றும் மாறாத அதே மென்னகையோடு, அதிவேகவீதியில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்துக்குள் ஏற்படக்கூடிய இடையூறுகள், வசதியீனங்கள் எதையுமே பொருட்படுத்தாது, மிக இயல்பாக, நிதானமாக, தன் கருத்துக்களைச் சொன்னார்.

அரசியல் ஆர்பாட்டங்களற்ற கருத்துக்களைத் தருவதில், ஐயா அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் எனைக்கவர்ந்தவர்கள். அன்றும் ஐயா அவர்களின் தெளிவான கருத்துக்கள் விரிவாகவந்தன. கேட்கப்படும் கேள்விக்கு எவ்வளவு விரிவாகப் பதில் தரமுடியுமோ, அவ்வளவு விரிவாகப் பதில்தரும் அவர் வழமை அன்றும் தொடர்ந்தது.

தமிழினத் தனித்துவம் பேணியவண்ணம், இந்தியக்குடிமகனாக இருப்பது எப்படி என்பதை நிச்சயம் ஐயாவிடம் கற்றுக்கொள்ளலாம். உண்மையில் அவர் உடைமட்டுமல்ல, உள்ளமும் வெள்ளையானதே. இனி அந்த உத்தமனாரோடான செவ்வி. தமிழ்மணம்பூங்காவில் இடம்பெற்றுள்ள இச்செவ்வியும், முன்னோட்டமும், பூங்காவிற்கான நன்றியறிதலுடன், இங்கே மறுபிரசுரமாகிறது.


ஒளிப்பதிவில் ஒரு முன்னோட்டம்:-






ஒலிப்பதிவில் முழுமையாக :-




Get this widget Share Track details



-: நண்பர்களே!
சில தவிர்க்க முடியாத காரணங்களினால், கடந்தசிலவாரங்களுக்கான இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சி ஒலிப்பதிவு வலையேற்றம் செய்ய முடியவில்லை. எதிர்வரும் வாரம் முதல், மீளவும் இணையத்தில் கேட்கக் கூடியதாகவிருக்கும். ஆர்வமுடன் இருந்தவர்க்கும், ஆர்வத்துடன் மின்மடலில் தொடர்புகொண்டு விசாரித்தவர்க்கும், மிக்க நன்றிகள்.

Posted byமலைநாடான் at  

17 comments:

Anonymous said...  

பேட்டி அருமை...பல புதிய விஷயங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது..

Anonymous said...  

நன்றி

கானா பிரபா said...  

அரைவாசிக்கு மேல் கேட்டேன், தொடர்ந்தும் கேட்பேன். கேட்ட வரைக்கும் இடையில் வந்த உறுத்தல்கள் பெரிதாகத் தெரியவில்லை.

லோட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கிறியள். ஒரே சமயத்தில் ஈழப்பதிவர்களைக் காணாமல் எல்லாரும் பகீஷ்கரிப்பு செய்யிறியள் எண்டு நினைச்சன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...  

மலைநாடான்,
நிைறய பழைய நிகழ்வுகள் நிைனவுக்கூரப்பட்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு ேகட்க்கும்ேபாது கடுைமயான ஓலி பதிவு பிரச்சிைன. sony sound forge மாதிாியான ெமன்ெபாருள் உபயோகித்து இைரச்சலை குைறக்கலாம் முயன்றுபார்க்கவும்.

RamaniKandiah said...  

மலைநாடான்
அவருடைய வெளிப்படையான கருத்துத்தான் பிடித்திருக்கின்றது. ஈழ ஆதரவு என்பதைத் திராவிடக்கட்சிகளோடு மட்டுமே சேர்த்து, தம் நாட்டின் மிகுதியான மக்களையும் திராவிடக்கட்சிகளை வெறுக்கின்றவர்களையும் பயமுறுத்தும் ஆட்கள், நெடுமாறன் வந்த பாதையை (இந்திராகாந்தி "கொலைமுயற்சி"யிலே அவரது சாட்சியத்தை, காமராஜர் பெயர் சொல்லக் கட்சி வைத்திருந்ததை) மறந்தும் பேசுவதில்லை. இவர்களிலே இன்னும் காமராஜர் ஆட்சிக்காலத்தைக் கொண்டுவரத் தொண்டர் தொகையிலும்விடத் தலைவர் தொகைகூடிய காங்கிரஸ் கட்சிக்காரர்களும் அடக்கம்.

அவ்வகையிலே இந்தியா-இலங்கை குறித்த இந்த நேர்காணல் மிகவும் முக்கியமானதெனக் கருதுகிறேன். மற்றவர்கள் அவரிடம் தொட்டுக் கேட்காத கேள்வியைக் கேட்டுப் பதிலையும் பெற்று ஆவணப்படுத்தியிருக்கின்றீர்கள். அதற்கு நன்றி.

மலைநாடான் said...  

செந்தழல் ரவி!

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

அனானி!

புரிகிறது யாரென்று. :) நன்றி.

மலைநாடான் said...  

பிரபா!

முழுவதுமாகக் கேட்டுச்சொல்லுங்கள்.

இன்னும் சிவாஜிக்காச்சலில் இருந்து குணமடையவில்லைப் போல :))

Anonymous said...  

நெடுமாறன் அய்யா அவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளவன் நான். பேட்டியை முழுமையாக கேட்டேன். நேர்த்தியான் பேட்டி, ஆனால் மீண்டும் மீண்டும் இராஜிவ்காந்தி கொலை பற்றிய நிலைபாட்டில் தவறான தகவல்களை அளிப்பது பேட்டியை அர்த்தமற்றதாக்கிவிடுகிறது.

Anonymous said...  

nedumaran aiyaa pulikalidam vaangum kaasukku thaguntha maathiri thaanee peesa veendum....

Thamizhan said...  

அய்யா நெடுமாறன் அவர்கள் மதுரையின் சிறப்புமிக்கக் குடும்ப பாரம்பரியத்தைக் கொண்டவர்.காமராசரின் வலது கரமாகத் திகழ்ந்தவர்.திராவிடப் பாரம்பரியத்தில் வளர்ந்து தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக இருந்தவர்.இந்திராகாந்தி அம்மையார், காமராசரின் பெட்டி தூக்கியாக இருந்த வெங்கடராமன் மூலம் நெடுமாறனு க்கு முக்கிய மந்திரி பதவி கொடுத்து அழைத்த போது காமராசரின் தொண்டனாக இருப்பதே பெருமை என்று பதவியை வேண்டாமென்றவர்.
இந்தியாவின் நலனுக்குச் சிங்களவர்கள் நண்பர்களல்ல,எதிரிகளுடன் சேரத் தயங்க மாட்டார்கள் என்பதைச் சரித்திர பூர்வமாக நன்கு உணர்ந்தவர்,எடுத்துரைப்பவர்.இதை புரிந்து கொள்ளாமல் ரஜீவ் காந்தியை மயக்கிய மடையர்கள்,இந்திராகாந்தியாரின் பாதைக்கு எதிர்நடைப் போட்டதை,மூத்த பார்த்தசாரதி போன்றோரை ஓரங்கட்டியதைத் துணிந்து எதிர்த்தவர்.
இன்றும் அய்யா நெடுமாறனைப் போன்ற இந்தியாவின் மீது பற்று கொண்ட குடிமகன் என்று யாரும் முன்னிற்க முடியாது.அவர் சொல்வது ஈழ்த் தமிழர்கட்கு மட்டுமல்ல,இந்தியாவின் எதிர் காலத்திற்கும் நல்லது என்பதை அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.ஆனால் தமிழகத்துப் பார்ப்பன ஆதிக்கம் புது டில்லியின் ரா,வெளிவிவகாரத்துரையை வளைத்து நாட்டின் நல்லதை மறைத்தே வருகிறது.இந்த நாராயணன்கள் ஒழியும் வரை இந்தியா இலங்கை விவகாரத்தில் நேர்மையாக ந்டக்காது.உல்கெங்கும் உள்ளத் தமிழ்ர்கள் இந்தியாவின் ஆதரவாள்ர்கள்,அந்த ஆதரவைக் குலைக்கிறோம் என்பதை அவர்கள் விரைவில் புரிந்து கொள்ள அய்யா நெடுமாறன் விடாது உழைக்கின்றார்.

மலைநாடான் said...  

பாரி.அரசு!

கவனிப்புக்கும், கருத்துக்கும் மிக்கநன்றி. உண்மையில் நெடுமாறன் ஐயா அவர்களின் கருத்துக்கள் நெறிப்படுத்தப்பட வேண்டியன. ஆனால் ....

ஒலிப்பதிவுத்தெளிவு, மூலப்பிரதியில் ஏற்பட்ட தவறாகையால் எத்துணை முயன்றும் சீராக்க முடியவில்லை. மன்னிக்கவும். நன்றி

மலைநாடான் said...  

இரமணி!

தமிழக அரசியல் தலைமைகளில், நெடுமாறன் ஐயா நிச்சயம் வித்தியாசமான போக்குடையவர் என்பது உண்மைதான்.

கருத்துக்கும், பகிர்வுக்கும் நன்றி.

மலைநாடான் said...  

இனியவன்!

உங்கள் கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி.

வெற்றி said...  

மலை,
என்ன கன நாளாய் ஆளைக் காணக் கிடைக்கேலை?

பழ.நெடுமாறன் அவர்களின் செவ்வியைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

நான் சொல்ல நினைத்த கருத்துக்களை மேலே தமிழன் என்ற அன்பர் மிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறார். அன்பர் தமிழனின் கருத்துக்கள்தான் என் நிலைப்பாடும்.

மலைநாடான் said...  

அனானி!

புலிகளிடம் காசு வேண்டிப் பேசுகிறார் என்று.. நீர் சொல்லுகிறீர்.. ம்.. உருப்பட்டது மாதிரித்தான்..

மலைநாடான் said...  

தமிழன்!

இந்தச் செவ்வியில் கூட, ஐயா நெடுமாறனின், இந்திய நலன் பற்றிய அக்கறை தெரிகிறது. அது உங்களுக்கும் புரிகிறது.ஆனால் உங்களுக்கு முன்னர் வந்த அனானி, புலிகளுக்காகப் பணம் வாங்கிப் பேசுகின்றார் என்கிறார். இவர்களை என்னவென்று சொல்வது?

உங்கள் கருத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி.

மலைநாடான் said...  

வெற்றி!

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

Post a Comment