"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

குறும்படப்போட்டி முடிவுகள்


நண்பர்களே!
கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அறிவித்தல் தந்து, மே மாத இறுதியில் நிறைவு செய்யப்பட்ட குறும்படப் போட்டி முடிவுகள், கானம் கலைக்கூடம் இணையப்பக்கத்தில் தற்போது வெளியாகியுள்ளது. நமது இயல்புக்கு அப்பாற்பட்ட சில காரணங்களினால், இம்முடிவுகள் வெளிவரத் தாமதமாகியிருந்தது. அதற்காக அனைவரிடமும் பணிவான மனவருத்தத்தினையும், இப்போட்டியை நடத்துவதற்கு பல்வேறு உதவிகளைப்புரிந்த நண்பர்களுக்கு நன்றிகளையும், தெரிவித்துக் கொள்கின்றோம். குறும்பட ஆர்வலர்களுக்கு, மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியொன்று உள்ளது, வாருங்கள் அங்கே...


- நட்புடன் மலைநாடான்

Posted byமலைநாடான் at இரவு 12:51   

6 comments:

மலைநாடான் said... ஜூலை 26, 2007 at காலை 8:55   

அறிவிப்புக்காய்..

- யெஸ்.பாலபாரதி said... ஜூலை 26, 2007 at காலை 9:35   

ஆஹா... முடிவு வந்துடுச்சா..!

அப்ப இனிமே நானும் பேருக்கு முன்னாடி "டைரடக்கர்" அப்படின்னு போட்டுக்கலாம்னு சொல்லுங்க! :))

nayanan said... ஜூலை 26, 2007 at காலை 10:19   

அனைத்து படைப்புகளும் மகிழ்ச்சியளிக்கின்றன. அந்த ஒரு நிமிட நேரத்தில்
அனைவருமே செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். இதுவே இந்தப் போட்டி என்ற முயற்சியின் வெற்றியைக் காட்டுவதாக அமைகிறது. அதேபோல தேர்வுக்குழுவினரும் நேர்த்தியான கலைஞர்களாகத் தெரிகிறார்கள்.

இக்கலை வளர வாழ்த்துகள்.

கேசகி, பாலபாரதி, சாரா, இன்பா அனைவருக்கும் பாராட்டுகள்.

பாலபாரதி நிச்சயம் புகைஞர்களின் பகையைத் தேடிக் கொண்டிருக்கின்றார் படத்திலே புகைப்பவரின் பார்வையும் பின்னர் கண்ணாடியின் முன் நின்று (?) மாலைபோட்டுக் கொண்டு புகை வீசுவது - எளிமையான சிறந்த கற்பனை வளம். பாராட்டுகள். இதையே சங்கர் இயக்கியிருந்தால் எப்படிச் செய்திருப்பார் எண்ணிப் பார்த்தேன். சிரிப்பு வந்தது. எனினும், படக்கவரியின் (காமிரா) முன் நெருக்கத்தில் அவர் புகையை ஊதுவது அவரின் இயல்பின் இருந்து சற்று மாறுபட்டிருக்கிறது.

கேசகி சொல்லும் செய்தி மிக உயரியது. இந்தச் செய்தி பொதுமக்களைச் சென்று சேர்வதோடு அரசாங்கங்களைச் சென்று சேர வேண்டும். வரலாற்றின் எல்லா காலங்களிலும் ஆன்மீகத்தின் அங்கங்களிலும் நிறைந்திருக்கும் இந்தச் செய்தியை அனனவரும் இரசிப்பதோடு மட்டுமன்றி, உலக மயமாக்கல், நாகரிக மயமாக்கல் போன்ற தத்துவங்களில் மயங்கி, “survival of the fittest” என்ற கானத்தில் திளைப்பவர்கள் ஓர்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. ஒலி அளவு இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்க வேண்டும். தமிழில் கிரந்த எழுத்துகள் குறையும் போது தலைப்பு மற்றும் செய்தியின் வலு பன்மடங்காகக் கூடும்.

இன்பா காட்டிய அந்த தெருவாட்டம் அயரவைக்கிறது, நாமே எல்லாவற்ற்றிலும் சிறந்தவர்கள் என்று எண்ணும் கலைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று. தமிழகத் திரை நாயகர்களுக்கு அப்பிழிகம் (அபிசேகம்) செய்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

சாரா சொல்லும் செய்தி உன்னதமானது. இதைப் பார்க்கும் போது ஆரியமே உயர்வு என்ற எண்ணத்தில் ஆரிய உயர்வுக்காக ஆரியத்திலேயே பிறந்த ஆனால் உடல் ஊனமுற்றோராக, மன உளைவு கொண்டோராக, சற்றே அழுக்காகத் திரிந்தவரையெல்லாம் கொன்று மனிதத்தை அழித்த
நாசியம் மற்றும் வருணமாக பிரித்து வைத்த மனிதத்தை அழித்த வைதீகம்
என்ற இரண்டும் கண் முன் வந்தது. ஆயினும், இயல்பான மனிதம்
என்றுமே உயர்ந்தே இருக்கிறது.

அனைவருக்கும் வாழ்த்துகள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

மலைநாடான் said... ஜூலை 26, 2007 at மாலை 4:20   

பாலபாரதி!

தாராளமாப் போட்டுக்கலாம்பா. உங்க படத்தை பார்க்கும்போது ஒருவிதயம் நினைவுக்கு வந்தது. அப்புறமா பதிவில சொல்லறன். நன்றி

மலைநாடான் said... ஜூலை 26, 2007 at மாலை 5:59   

நயனன்!

உங்கள் விரிவான கருத்துக்களுக்கு நன்றி.

கலைஞர்களைப் பாராட்டும் உங்கள் பண்புக்குப் பாராட்டுக்கள்.

நன்றி

மலைநாடான் said... ஜூலை 29, 2007 at மாலை 7:20   

கருத்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

Post a Comment