தமிழ்ப்பேச்சு
செவ்வாய், ஏப்ரல் 1, 2008
பொதுவாக ஈழத்தவரது பேச்சு மொழிநடைபற்றி பலரும் பலவிடங்களிலும், விதந்து பேசுவதுமுண்டு, விட்டுக் கேலி பேசுவதுமுண்டு. யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கினை ஈழத்தின் மொழிநடையாகவும், சென்னைப்பேச்சு வழக்கினை தமிழகத்தின் மொழிநடையாகவும், அடையாளங் காணப்படும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது.
"பூப்பெய்தும் காலம்" திரையோவியத்துக்கான கதைவிவாதம் நடைபெற்ற வேளை, ஒரு ஓய்வில் நண்பர்கள் மத்தியில் இந்த உச்சரிப்புப் பற்றிய உரையாடல் வந்தது. நண்பர் ஞானதாஸ் சொன்ன கருத்து ஏற்புடையதாகவே இருந்தது. "ஆங்கிலம் கலக்காது தமிழக நண்பர்கள் பேசுவார்களேயானால், உச்சரிப்புத் தெளிவும், உணர்வும், மிகுதியாக இருக்கும் " என்றவர், உதாரணத்திற்கு 'பயம்' என்ற சொல்லை நாம் எப்படி உச்சரிக்கின்றோம், தமிழகத்தில் எப்படி உச்சரிக்கின்றார்கள். உண்மையில் தமிழக உச்சரிப்பில் பயஉணர்வு, ஒலிக்கும் தொனியில் தெரிவதைச் சிறப்பித்துச் சொன்னார். இதை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது என் நினைவுக்கு வந்தவர், வலையுலக நண்பர் பாலபாரதி. என் தமிழ் ஆசான், கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களது தமிழ் உச்சரிப்பு நயத்துக்குப்பின் பாலபாரதியின் தமிழ் உச்சரிப்பு நயம், பலவேளைகளில் என்னைக் கவர்ந்திருக்கிறது. அவருக்தெரியாமலே அதை நான் ரசித்திருக்கின்றேன். அதற்கு அவரது குரல் தொனியும் ஒரு காரணமாயிருக்கலாம். திருகோணமலையில் இருந்த காலங்களில், கத்தோலிக்ககுருவானர் அருட்தந்தை சீராளன் அவர்களது திருப்பலிப்பூசைப் பிரசங்கங்ளை அவர் தமிழ் உச்சரிப்புக்காகவே நண்பர்களும், நானும் விரும்பிக் கேட்டிருந்தோம்.
முன்பு இலங்கைவானொலியில் வாரந்தோறும் 'நல்ல தமிழ் கேட்போம்' எனும் ஒரு நிகழ்ச்சி ஒலித்தது. அதிலே நடிகர் திலகத்தின் பல திரைப்படக்காட்சிகள் ஒலித்தன. அதிலும் கலைஞர் வசனங்களை, சிவாஜி உச்சரிக்கும்காட்சிகள் பலரையும் கவர்ந்திருந்தன. இதையெல்லாம் இன்று நினைவு கொள்ளக் காரணம், விஜய் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியான தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை இணையத்தில் பார்க்கக்கிடைத்தது. எத்தனை உணர்வுகள், எத்தனை உச்சரிப்புக்கள், தமிழ்ப்பேச்சில் வந்தன. கேட்கச் சுகம். பார்க்க
Posted byமலைநாடான் at இரவு 9:44 2 comments
Labels: ஒளிப்பதிவு, நல்ல தமிழ்