"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

சிறுகதைத் தொகுதி - ஒலிப்பதிவு

வணக்கம் நண்பர்களே!


இன்றைய பதிவில், முதல் முறையாக ஒரு சிறுகதைத்தொகுதியைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்றினைப் பதிவு செய்கின்றோம். ஏற்கனவே என் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த, ஈழத்தின் இளம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத்தொகுதி பற்றிய உரையாடல் இது. முன்னர் பதிவு செய்தபோது, மதி, தமிழ்நதி, வசந்தன், ஆகியோர் இந்த இளம் எழுத்தாளரையும், அவரது படைப்புப் பற்றியும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். இனி ஒலிப்பதிவினைக் கேளுங்கள்.








இச்சிறுகதைத்தொகுதி இலங்கையில் புத்தகசாலைகளிலும், புலத்தில் எழுத்தாளரிடமும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையத்தில் இங்கே வாசிக்கலாம். அல்லது நூலகம் சேகரிப்பில் வாசிக்கலாம்.

இவ் ஒலிப்பதிவினை இன்று பதிவு செய்வதற்கு சிறப்பான காரணம் ஒன்றுமுண்டு.



இணையத்தில் இன்பத்தமிழ் வாராந்திர ஒலிபரப்பு, இவ்வார நிகழ்ச்சி, தொழில்நுட்பச்சிக்கல் காரணமாக, புதிய நிகழ்ச்சிக்குப் பதிலாக, சென்றவாரநிகழ்ச்சியே மறு ஒலிபரப்பாகியது. அதனால், இவ்வாரம் புதிய நிகழ்ச்சி இங்கு பதிவேற்றப்படவில்லை. அடுத்தவாரம் வழமைபோல் புதிய நிகழ்ச்சி பதிவேற்றப்படும்.

Posted byமலைநாடான் at  

16 comments:

Anonymous said...  

நன்னாயிருதுங்க. கைலாசபதி, சிவத்தம்பியர் தோத்தாங்க. போங்க.. நிசமாங்க ... அகிலனை அரைநிஜார் போட்ட பையன் நெனச்சேன் .டாப் ஆக செய்ஞ்சிருக்கார் .

அது சரிங்க யாருங்க சயந்தன்?

வி. ஜெ. சந்திரன் said...  

மலைநாடான் உரையாடல், உரத்தே இருந்தது.... :)

இணையத்தில் முதலில் சயந்தனின் கதையை வாசித்த போது எனக்கும் அந்த கதையை வாசித்த ஞாபகம் வந்தது.

கவிதை, கதை எதுக்குமே விமர்சகன் இல்லை. ஆனால் எல்லாருடைய கவிதை, கதை களும் மனதில் இடம்பிடிப்பதில்லை.

சயந்தனின் கதைகள் பல சந்தர்ப்பங்களில் கதாபாத்திரங்களில் ஒருவராக நாமும் இருப்பது போன்ற உணர்வை தருவதுடன், வாசிக்கும் போது தொய்வு இல்லாது எழுதும் அவரது பாணியும் மிகவும் பிடிக்கும். சயந்தன் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எனது வேண்டு கோளும்.

பழைய எழுத்தாளர்களது கதைகளையே வாசித்து கொண்டிருந்த எங்களுக்கு, எம் சூழலை, எம் வாழ்நிலையை, எம்மால் சரியாக கலை நயத்துடன் சொல்ல முடியாது தேங்கி கிடக்கும் உணர்வுகளை பேசும் எம் வயதொத்த சயந்தன் .... சிவாணி (னி)...., தாட்சாயணி..... சரங்கா தயாநந்தன்... இன்னும் பெயர் மறந்த படைப்பாளர்களை தினக்குரல், உதயனின் வாரவெளியீடு போன்றன அறிமுகப்படுத்தி இருந்தன.

உங்களோடு உரையாடிய அகிலனின் கதைகள், கவிதைகளும் உணர்வோடு ஒன்றிவிடும் தன்மையனவாக, நன்றாக இருந்தன. அவர் ஈழத்திலும் பத்திரிகைகளில் எழுதிவந்தாரா தெரியவில்லை அல்லது ஞாபகம் இல்லை. அவரது எழுத்துக்களை வலைபதிவு மூலம் படித்திருக்கிறேன். ..

மலைநாடான் said...  

//matharasi said...
நன்னாயிருதுங்க. கைலாசபதி, சிவத்தம்பியர் தோத்தாங்க. போங்க.. நிசமாங்க ... அகிலனை அரைநிஜார் போட்ட பையன் நெனச்சேன் .டாப் ஆக செய்ஞ்சிருக்கார் .

அது சரிங்க யாருங்க சயந்தன்? //

matharasi!

கைலாசபதி, சிவதம்பி, போன்ற இலக்கிய வித்தர்களைப் பற்றிச் சுட்டும்போதே உங்கள் மேதமை புரிகிறது. அதற்காக அகிலன், சயந்தனை தெரிந்துகொள்ளாதிருப்பது....

கோபுரங்களை மதிப்பது நல்லதுதான், அதற்காக குடிசைகளை மிதிக்கவேண்டாமே. :)

வசந்தன்(Vasanthan) said...  

நல்லதோர் அலசல். இவ்வளவு காலமும் பேக்காட்டி எல்லாரும் மறந்தேபோன நேரத்தில செய்திருக்கிறியள்.

இதன்மூலம் இன்னொரு நீதியும் சொல்லியிருக்கிறியள். அதாவது, கதைக்கப்படும் விடயம் முக்கியமென்றால் இருபது நிமிடங்களென்றாற்கூட ஒலிப்பதிவை நீட்டலாம் என்பதுதான். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும். ;-)

மலைநாடான் said...  

//பழைய எழுத்தாளர்களது கதைகளையே வாசித்து கொண்டிருந்த எங்களுக்கு, எம் சூழலை, எம் வாழ்நிலையை, எம்மால் சரியாக கலை நயத்துடன் சொல்ல முடியாது தேங்கி கிடக்கும் உணர்வுகளை பேசும் எம் வயதொத்த சயந்தன் .... சிவாணி (னி)...., தாட்சாயணி..... சரங்கா தயாநந்தன்... இன்னும் பெயர் மறந்த படைப்பாளர்களை தினக்குரல், உதயனின் வாரவெளியீடு போன்றன அறிமுகப்படுத்தி இருந்தன//

வி.ஜே!
நிலத்திற்கும், எழுத்திற்கும் எட்ட இருந்ததில், நீங்கள் சுட்டி இருந்தவர்களை இதுவரை வாசித்ததில்லை. இனித் தேடிவாசிக்கவேண்டும்.

அகிலன் தாயகத்திலும் பத்திரிகைத்துறை சார்ந்தவராகவே அறிந்திருக்கின்றேன். நல்ல படைப்பாளி. வாசகன்.அதனால் நல்ல விமர்சகனும் கூட.

தங்கள் பகிர்வுக்கு நன்றி.

மலைநாடான் said...  

//இதன்மூலம் இன்னொரு நீதியும் சொல்லியிருக்கிறியள். அதாவது, கதைக்கப்படும் விடயம் முக்கியமென்றால் இருபது நிமிடங்களென்றாற்கூட ஒலிப்பதிவை நீட்டலாம் என்பதுதான். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.//

வசந்தன்!

செவிகளெல்லாம் கேட்குமென்றில்லை. பொறுமையும், பெருமையும் தெரிந்தால், நிச்சயம் விசயமும் இருந்தால் கேட்பார்கள்தானே?

பகிர்வுக்கு நன்றி.

கானா பிரபா said...  

வணக்கம் மலைநாடான்

புது வானொலி ஒன்றில் இணைந்திருப்பதால் இந்தப் பதிவைக் கேட்க இன்னும் நேரம் வாய்க்கவில்லை. இன்றிரவு கேட்டு என் அபிப்பிராயத்தையும் சொல்கின்றேன். புதுமுயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

வசந்தன்(Vasanthan) said...  

ஐயோ அண்ணை, நான் அதைச்சொல்லேல.

உங்கட ஒலிப்பதிவைக் கேக்கிற செவிகளைக் குறித்துச் சொல்லேல.
என்ன கோதாரியக் கதைச்சாலும் பத்துநிமிசத்துக்கு ஒரு செக்கனும் தாண்டவிட மாட்டன் எண்டு வெட்டிக் கொத்தி விளையாட்டுக் காட்டுறவைக்கு, இந்த ஒலிப்பதிவு நீளத்தால ஒரு நீதி சொல்லியிருக்கிறியள் எண்டதைச் சொல்ல வந்தன்.
'கேட்கச் செவியுள்ளவன்' எண்டதும் அந்த வெட்டுக் கொத்துக்காரரைத்தான் குறித்துத்தான். அந்தச் செவிக்குக் கேக்குமோ இல்லையோ தெரியாது.

'கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்' எண்டது இயேசுவின்ர புகழ்பெற்ற ஒரு வாக்கியம். இஞ்ச 'விளங்கப் புத்தியுள்ளவன் விளங்கட்டும்' எண்டு மாத்திப்போட்டாலும் சரிதான்.

இதுக்குமேல கதைச்சு கொழுவி வேலை பார்க்க முடியாது. அதுக்கெண்டு ஆளிருக்கு. நான் வாறன்.

சயந்தன் said...  

//கதைக்கப்படும் விடயம் முக்கியமென்றால் இருபது நிமிடங்களென்றாற்கூட ஒலிப்பதிவை நீட்டலாம் என்பதுதான். //

வசந்தன்.. உண்மைதாம்..

கதைக்கப்படும் விடயம் முக்கியமென்றால் இருபது நிமிடங்கள் வரை நீள முடியும்.. அதாவது முக்கியமென்றால்த் தான்..

இப்போது புரிந்திருக்குமே..

வசந்தன்(Vasanthan) said...  

சயந்தன்,
நான் சொன்னதையே திரும்பச் சொல்லிறீரே?
முக்கியமானதெண்ட விசயத்தை நானும் முக்கியப்படுத்திச் சொல்லியிருக்கிறன் தானே?

விளங்குது.

தனக்குத் தனக்கெண்டா -சுளகு
படக்குப் படக்கெண்டுமாம்.;-)

வசந்தன்(Vasanthan) said...  

ஆஆஆ...
சொல்ல மறந்துபோனன் சயந்தன்.

(பிந்திய) பிறந்தநாள் வாழ்த்து.

சின்னக்குட்டி said...  

வணக்கம் மலை நாடர்.. இந்த பதிவின் மூலம் சயந்தனின் எல்லாக்கதைகளையும் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது நன்றிகள்



//ஆண்களுக்கு சமானமாக நின்று பேசத்தெரியாமல் அவர்கள் பகிடி என்ற பெயரில் செய்கின்ற சில்மிஷங்களுக்கெல்லாம் வெட்கம் பொத்துக்கொண்டு வர ப்ளீஸ் சரியில்லாத வேலை பாக்கிறியள் என்று கெஞ்சுகின்ற சில பெண்களை எனக்குத் தெரியும். அப்போதெல்லாம் எரிச்சல் எரிச்சலாக வரும். 'அவையும் அவையின்ரை வெட்கமும்.."//



பேதமையை பெண்ணின் லட்சணம் என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஒன்றும் தெரியாமை' (Ignorance) இது லட்சணமா? அது கூட பரவாயில்லை. மடமை (Stupiality) கூட பெண்ணின் லட்சணமாமே; அது அப்படித் தான் என்றால் எங்கள் பெண்களில் அந்த லட்சணம் நிரம்பி வழிகிறதுதான் -muthulingam

Chandravathanaa said...  

நல்ல அலசல்.

selventhiran said...  

மலைநாடன் உங்கள் குரலும் தமிழும் பிரமாதமாக இருக்கிறது.

Anonymous said...  

சாரங்கா தயாநந்தன்
http://www.noolaham.net/
library/books/05/404/404.pdf

இவற்றைவிட அவரது கவிதைகள் பல இணையத்தில் இருக்கிறன. அவற்றை நானும் இன்னும் வாசிக்கவில்லை.

தாட்சாயணி:
http://vasagarvattam.blogspot.com/2006/02/blog-post_113956751834344396.html

இவரது கதைகள் இணையத்தில் உள்ளதா தெரியவில்லை.

சிவானி(ணி)
http://www.appaal-tamil.com/index2.php?option=content&task=view&id=615&pop=1&page=0

அப்பால் தமிழில் எழுதும் சிவானியும் ஈழத்தில் எழுதிய/எழுதி வரும் சிவானி யும் ஒருவரா இல்லையா தெரியாது

மலைநாடான் said...  

சந்திரவதனா!

பகிர்வுக்கும், வருகைக்கும் நன்றி. :)

Post a Comment