கறுப்பு ஜுலை - ஒரு வாக்கு மூலம்
புதன், ஜூலை 23, 2008
ஈழத்துத் தமிழர்கள் வாழ்வில், ஜுலை மாதமென்பது கனத்த நினைவுகளைத் தரும் மாதம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த இனக்கலவரம் என்பது, ஈழத்தமிழனின் வாழ்வினை திருப்பிப்போட்ட ஒரு பயங்கரம். அந்த நாட்களின் நினைவாகவும், அதற்கு முந்தைய துயர்களின் பதிவாகவும் அமையும் இந்த நாட்களில், அந்தத்துயர் குறித்த, ஒரு (ஒலிப்பதிவு) வாக்கு மூலத்தை இங்கே கேட்கலாம்.
Posted byமலைநாடான் at இரவு 10:43 1 comments
Fedna தமிழ்விழா மண்டபத்திலிருந்து..
சனி, ஜூலை 5, 2008
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமை பெட்னா. இவ்வமைப்பு நடாத்தும் 21வது தமிழ்விழா , ஜுலை மாதம் 4ந்திகதி வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமமாகி, தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. நாளை மூன்றாம் நாளள் நிகழ்வுகளுடன் இனிதே நிறைவு பெறவுள்ள இந்நிகழ்வுகளள் குறித்து, விழா மண்டடபத்தில்லிருந்து ஒலிவடிவில், ஒரு நேரடி ரிப்போட் Fedna 2008 .
Posted byமலைநாடான் at இரவு 10:45 1 comments
பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப் பாடல்
வியாழன், மே 22, 2008
20.05.08 அன்று மாரடைப்பில் காலமாகிய, போராளியும், களம்பல கண்ட விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளில் ஒருவருமாகிய பிரிடிகேயர் பால்ராஜ் அவர்களின் நினைவாக வெளிவந்திருக்கும் பாடல். " தானைத் தளபதியே, தமிழீழத்தின் காப்பரனே பால்ராஜ் அண்ணா.."
பாடல் வரிகள், இசை, பாடியவர் : வர்ண. இராமேஸ்வரன்.
வெளியீடு: கலைப்பண்பாட்டுக்கழகம் . கனடா
சென்று வா வீரனே !
Posted byமலைநாடான் at இரவு 3:32 2 comments
Labels: அஞ்சலி, ஈழத்துக்கலைஞன். ஈழத்துப்பாடல்
"தண்ணீர்" தலைப்பில் பத்துக் குறும்படங்கள்.
திங்கள், மே 5, 2008
மின்னஞ்சலில் வந்த இணைப்பில் சென்று பார்த்தால், மலேசியாவில் BMW நிறுவனம் நடாத்திய குறும்படப்போட்டியில் பத்துப் படங்கள் இறுதித் தெரிவில் தெரிவாகி, வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கிறது. அதிலே இரண்டு தமிழ்மொழியிலான படங்கள். Broken Bangles, Sing in the Rain என்ற அந்த இரண்டு படங்களிலும், முதலவாது சுகமான கமெராக்கவிதை. இதில் பங்காற்றியவர்களைப் பாராட்டலாம். நீங்களும் படங்களைப் பார்க்க விரும்பின், இங்கே செல்லுங்கள். பார்த்தபின் மறக்காது வாக்களியுங்கள்.
Posted byமலைநாடான் at காலை 9:06 3 comments
Labels: அறிவிப்பு, ஒளிப்பதிவு
தமிழ்ப்பேச்சு
செவ்வாய், ஏப்ரல் 1, 2008
பொதுவாக ஈழத்தவரது பேச்சு மொழிநடைபற்றி பலரும் பலவிடங்களிலும், விதந்து பேசுவதுமுண்டு, விட்டுக் கேலி பேசுவதுமுண்டு. யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கினை ஈழத்தின் மொழிநடையாகவும், சென்னைப்பேச்சு வழக்கினை தமிழகத்தின் மொழிநடையாகவும், அடையாளங் காணப்படும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது.
"பூப்பெய்தும் காலம்" திரையோவியத்துக்கான கதைவிவாதம் நடைபெற்ற வேளை, ஒரு ஓய்வில் நண்பர்கள் மத்தியில் இந்த உச்சரிப்புப் பற்றிய உரையாடல் வந்தது. நண்பர் ஞானதாஸ் சொன்ன கருத்து ஏற்புடையதாகவே இருந்தது. "ஆங்கிலம் கலக்காது தமிழக நண்பர்கள் பேசுவார்களேயானால், உச்சரிப்புத் தெளிவும், உணர்வும், மிகுதியாக இருக்கும் " என்றவர், உதாரணத்திற்கு 'பயம்' என்ற சொல்லை நாம் எப்படி உச்சரிக்கின்றோம், தமிழகத்தில் எப்படி உச்சரிக்கின்றார்கள். உண்மையில் தமிழக உச்சரிப்பில் பயஉணர்வு, ஒலிக்கும் தொனியில் தெரிவதைச் சிறப்பித்துச் சொன்னார். இதை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது என் நினைவுக்கு வந்தவர், வலையுலக நண்பர் பாலபாரதி. என் தமிழ் ஆசான், கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களது தமிழ் உச்சரிப்பு நயத்துக்குப்பின் பாலபாரதியின் தமிழ் உச்சரிப்பு நயம், பலவேளைகளில் என்னைக் கவர்ந்திருக்கிறது. அவருக்தெரியாமலே அதை நான் ரசித்திருக்கின்றேன். அதற்கு அவரது குரல் தொனியும் ஒரு காரணமாயிருக்கலாம். திருகோணமலையில் இருந்த காலங்களில், கத்தோலிக்ககுருவானர் அருட்தந்தை சீராளன் அவர்களது திருப்பலிப்பூசைப் பிரசங்கங்ளை அவர் தமிழ் உச்சரிப்புக்காகவே நண்பர்களும், நானும் விரும்பிக் கேட்டிருந்தோம்.
முன்பு இலங்கைவானொலியில் வாரந்தோறும் 'நல்ல தமிழ் கேட்போம்' எனும் ஒரு நிகழ்ச்சி ஒலித்தது. அதிலே நடிகர் திலகத்தின் பல திரைப்படக்காட்சிகள் ஒலித்தன. அதிலும் கலைஞர் வசனங்களை, சிவாஜி உச்சரிக்கும்காட்சிகள் பலரையும் கவர்ந்திருந்தன. இதையெல்லாம் இன்று நினைவு கொள்ளக் காரணம், விஜய் தொலைக்காட்சியின் புதிய நிகழ்ச்சியான தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியை இணையத்தில் பார்க்கக்கிடைத்தது. எத்தனை உணர்வுகள், எத்தனை உச்சரிப்புக்கள், தமிழ்ப்பேச்சில் வந்தன. கேட்கச் சுகம். பார்க்க
Posted byமலைநாடான் at இரவு 9:44 2 comments
Labels: ஒளிப்பதிவு, நல்ல தமிழ்
தமிழ்மணத்தில் தொடரும், அநாகரிக பதிவுகள் இடுகைகள்.
திங்கள், மார்ச் 17, 2008
படைப்புக்களின் அதிஉன்னதமெனப் போற்றப்படுகின்ற மனிதனின் செயற்பாடுகள் பலவும் பலவேளைகளில் மிகக் கேவலமாக அமைந்துவிடுகிறது. அதை நெறிப்படுத்திக்கொள்வதே, நாம் பெற்ற அறிவின் பயன்பாடு. தமிழ்வலைப்பதிவுகள் வளர்ச்சியும், பயன்பாடும் பெற்றுவரும் இவ்வேளையில், தமிழ்வலைப்பதிவுகளில் அன்மைக்காலமாக நடைபெற்றுவரும் புரிந்துணர்வற்ற உரையாடல்களும், எழுத்துக்களும், அயர்ச்சி தருபனவாக இருக்கின்றன. தமிழ்வலைப்பதிவுகள் அதிகம் திரட்டப்படும் தளமான தமிழ்மணத்தில் இதன் வெளிப்பாட்டினை நிறையவே தெரியக்கூடியதாகவிருக்கிறது. இது குறித்து தமிழ்மணநிர்வாகிகளுக்கு பலரும் தனிப்பட்ட முறையில் தமது அதிருப்தியைப் பதிவு செய்திருக்கக் கூடும். ஆயினும் பதிவர்களின் பொதுவான விருப்பதினைத் தெரிவிக்கும் ஒரு யோசனையாகவும், பொதுத்தளமாகவும், இவ்வாக்கெடுப்பினை இத்தளத்தில் முன் வைக்கின்றோம். பதிவர்கள் அனைவரும், பொதுநலம் சார்ந்தும், தமிழ்வலைப்பதிவுகளின் உயர்வு சார்ந்தும், நியாயபூர்வமான கருத்துக்களுக்கு அமைவான தங்கள் வாக்குக்களைச் சமர்ப்பிக்குமாறு பணிவோடு வேண்டுகின்றோம்.
இங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியைச் செலுத்தி வாக்களித்தபின் மறக்காது, உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் உறுதிப்படுத்தல் இணைப்பில் மூலம் வாக்களிப்பினை உறுதிசெய்யுங்கள். வாக்களிப்பில் கலந்து கொண்ட உங்களுக்கும், வாக்களிப்புக்கு உதவும் தமிழர் வாக்கு நிறுவனத்துக்கும் நன்றிகள். வாக்களிப்புத் தொடர்பான உங்கள் தொடர்புகள் வெளியிடப்படமாட்டாது.
நண்பர்களே! யாரையும் காயப்படுத்தும் நோக்கின்றி பொது நோக்கில் முன்னெடுக்கப்படும் இம்முயற்சியில், எந்தவொரு பதிவரது செயலையும் முன்னிறுத்தி உரையாடாது பொதுவான தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பின் தெரிவிக்கலாம். தனிமனித தாக்குதல்களாக வரும் எந்தவொரு கருத்தும் பிரசுரிக்கப்படமாட்டாது. தமிழ்மணவாசகர்கள், பதிவர்களின், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை, விருப்பத்தை, தெரிவிக்க நாம் முன்னெடுக்கும் இம்முயற்சியில் உங்கள் அனைவரது மேலான பங்களிப்பினையும், தருவீர்கள் எனும் நம்பிக்கையுடனும், நட்புடனும்- மலைநாடான்
வாக்கெடுப்பு முடிவுத்திகதி: 23.03.08
Posted byமலைநாடான் at இரவு 12:07 16 comments
Labels: அநாகரீக இடுகைகள், தமிழ்மணம், பதிவர்