இணையத்தில் இன்பத்தமிழ் 5
ஞாயிறு, பிப்ரவரி 25, 2007
நண்பர்களே!
இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சிக்கு நீங்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. சென்றவாரத்தில்இந் நிகழ்ச்சி, ஐரோப்பிய தமிழ் வானொலி நிலையத்தின் கலையக மாற்றத்தினால் ஏற்பட்ட, இணையவழித் தடங்கல் காரணமாக, முந்தையவார நிகழ்ச்சியே மறு ஒலிபரப்பாக நிகழ்ந்தது. அதனாலேயே, வாராந்திர நிகழ்ச்சி இங்கே பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் சென்றவாரத்தில், தேன்கூடு சாகரன் அவர்களின் அஞ்சலி ஒலிப்பதிவு இடம்பெற்றிருந்தது. நண்பர்கள் பலரும் அவ்வொலிப்பதிவினைக்கேட்டு, அவசியமானதொரு, ஆவணப்பதிவு என அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள். அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி.
இனி இவ்வார ஒலிபரப்புக் குறித்து.
இவ்வார நிகழ்ச்சியில் சாகரன் கல்யான் குறித்த நினைவுக்குறிப்பு.
சென்னைச் சங்கமம் நிகழ்ச்சி பற்றிய அறிமுகக்குறிப்பு, அருமையான பாடல், ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை திரு. ஜெகத் கஸ்பார் அவர்களின் எண்ணப்பகிர்வு.
மூன்று தசாப்தங்களின் முன் ஈழத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலித்த, ஈழத்துக் கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் புகழ்பெற்ற
'அண்ணை றைற்' ஒலிப்பதிவு. ஆகிய நிகழ்ச்சிக்கள் உள்ளடங்கி வருகின்றன.
இவ்வார நிகழ்ச்சியின் உருவாக்கதில் எம்முடன் இணைந்து கொண்ட, நண்பர் கானா. பிரபா, பதிவர் பொன்ஸ், ஆகியோருக்கும், கலந்து சிறப்பித் பெரியோர்கள் அருட்தந்தை திரு.ஜெகத்கஸ்பார் அவர்களுக்கும், கலைஞர். கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கும், இனிய நன்றிகள்.
நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
இணையத்தில் இன்பத்தமிழ் 5 |
இந்த ஒலிச்செயலி வேலை செய்யாதிருப்பின், பக்கப்பட்டியில் உள்ள ஒலிச்செயலியிலும் கேட்கலாம்.
'' சென்னைச் சங்கமம்'' நிகழ்ச்சிகள் குறித்து , இவ்வார தமிழ்மணம் பூங்காவில் வெளிவந்துள்ள சிறப்பு ஒலி, ஒளி, வடிவங்களைக் காண இங்கே அழுத்துங்கள்.
Posted byமலைநாடான் at மாலை 5:05 10 comments
Labels: ஒலிபரப்பு
சாகரசங்கமம்
சனி, பிப்ரவரி 17, 2007
இவ் அஞசலிப்பதிவில் பங்குகொண்ட நட்புள்ளங்கள்:-
பாலராஜன் கீதா, துளசி கோபால், மா.சிவகுமார், நாக.இளங்கோவன், விக்னேஷ்(விக்கி), பரஞ்சோதி, சிந்தாநதி, சிறில்அலெக்ஸ், மதிகந்தசாமி, ஆகியோர்
படங்கள் உதவி:- சிந்தாநதி
இசைக்கோப்பிலும், பிரதியாக்கதிலும் உதவி:- ஈழத்து நண்பரகள்.
நண்பரகளே!
இவ் ஒலிப்பதிவினை பிரதிசெய்து, சாகரன் குடும்பத்தினரிடம், கொடுக்கவுள்ளதாக, பாலராஜன்கீதா சொல்லியுள்ளார். ஆகவே இப்பதிவில் கருத்துச் சொல்லும் பகுதியில் சாகரனுக்கான அஞ்சலிகளை மட்டுமே பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ் அஞ்சலி நிகழ்ச்சி குறித்து கருத்துச் சொல்லவிரும்பும் நண்பர்கள் தயவு செய்து இங்கே உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நட்புடன்
மலைநாடான்.
சாகர சங்கமம் |
சாகர சங்கமம் |
Posted byமலைநாடான் at காலை 10:52 6 comments
Labels: அஞ்சலி
இணையத்தில் இன்பத்தமிழ் 4
ஞாயிறு, பிப்ரவரி 11, 2007
நண்பர்களே!
இணையத்தில் இன்பத்தமிழ் இவ்வார நிகழ்ச்சியில்,
இந்நிகழ்ச்சியினை வானலைக்கு ஏந்திவரும் ஐரோப்பியத் தமிழ்வானொலி க்கு இன்று மூன்றாவது அகவை. அதுகுறித்த வாழ்த்து நிகழ்ச்சி.
இணையத்தமிழ் தொடரில், தமிழ் யூனிக்கோட் எழுத்துருக்களில் பாமினி எழுத்துருவை, பொங்குதமிழ் செயலியை, சுரதா தமிழ் எழுத்துரு மாற்றி, என பல்வேறு தமிழ் இணையச்செயலிகளை வடிவமைத்து, இலவசமாகவே வழங்கியுள்ள நமது நல்லறிஞர் சுரதா குறித்த ஒரு சிறு குறிப்பு.
வலைப்பதிவுலகிலிருந்து, பதிவர், ஒலிபரப்பாளர், இலக்கிய ஆர்வலர், என பன்முகப் பரிச்சயம் கொண்ட நண்பர் கானா.பிரபா வின், மாட்டுவண்டில் எனும் வலைப்பதிவின், ஒலிப்பதிவு. அதனோடிணைந்து வரும் ஈழக்கவிஞர் நீலாவணனின் கவிவரிகளில், ஈழத்து இசை இரட்டையர் கண்ணன்-நேசம் அவர்களின் இசையமைப்பில், ஈழத்துக் கலைஞர் மா.சத்தியமூர்த்தி அவர்களின் இனிமையான குரலில், ' ஓ வண்டிக்காரா..' பாடல் என்பனவும் வருகிறது.
நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.
இணையத்தில் இன்பத்தமிழ் 4.mp3 |
இச்செயலியில் நிகழ்ச்சியைக் கேட்கமுடியாவிடின், தயவு செய்து பக்கபட்டியில் மேலேயுள்ள செயலியில் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at மாலை 7:15 24 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 3
ஞாயிறு, பிப்ரவரி 4, 2007
நண்பர்களே!
இவ்வார வானொலி நிகழ்ச்சியை இங்கே நீங்கள் கேட்கலாம்.
இவ்வார நிகழ்ச்சியில், இணையத்தமிழ் பற்றிய தொடரில், தேனி யூனிக்கோட் எழுத்துருவை, தமிழ் இணையப்பரப்பு வழங்கிய நல்லறிஞர்: தேனி உமர் பற்றிய சிறு நினைவுக்குறிப்பு..
தமிழின் முக்கியமான ஒரு மென்பொருள் எழுதுகருவியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரின், அழகிய குரலில், பாரதிபாடல்.
பதிவர், ஆழியூரானுடன் ஒரு இணைய உரையாடல். என்பன இடம்பெறுகிறது.
நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
நிகழ்சியில் இடம்பெற்றுள்ள இணைய உரையாடலில், ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்த நண்பர் ஆழியூரானுக்கும், பாடலை மின் மடல் மூலம் அனுப்பியுதவிய, நண்பர் சிந்தாநதி அவர்களுக்கும் மிக்க நன்றி.
நண்பர்களே!
இந்நிகழ்ச்சியை வானலையில் எடுத்து வரும் ஐரோப்பியத் தமிழ் வானொலி வரும் 11.02.07 தன் சேவையில் இரண்டு வருடங்களை நிறைவு செய்கிறது. அப்பணியினைப் பாராட்டு முகமாக, அடுத்தவார நிகழ்ச்சியில் சிறிய வாழ்த்து நிகழ்ச்சியைச் சேர்த்துக் கொள்ள எண்ணியுள்ளோம். இவ்வாழ்த்து நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து கொள்ள விரும்பின், இங்கே உங்கள் வாழ்த்துக் களையும், கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
ஒலிபரப்பைக் கேட்க:
இணையத்தில் இன்பத்தமிழ் 3. |
Posted byமலைநாடான் at மாலை 6:21 17 comments
Labels: ஒலிபரப்பு