குறும்படப்போட்டி - முடிவுத்திகதி
செவ்வாய், மே 29, 2007
நண்பர்களே!
கானம் கலைக்கூடமும், சில நண்பர்களும் , இணைந்து ஒழுங்கு செய்திருந்த குறும்படப்போட்டியின் நீடிக்கப்பட்ட முடிவுத்திகதி 30.05.2007 .
போட்டி அறிவிக்கபட்டதும் 14 பேரும், போட்டி முடிவுத்திகதி நீடிக்கப்பட்டபின்னர் 13 பேருமாக இதுவரையில், மொத்தம் 27 பேர் முறையாகத் தங்கள் பெயர்களைப்பதிவு செய்துள்ளார்கள். அவர்கள் பெயர் விபரம் வருமாறு :-
peter selvaraj
ruban thanam
SABESAN THANGATHURAI
kathiravetpillai mohanadas
Sharveswara Rahulnath
arunasalam chandaramohan
Sundar rajan
sriekantharajayogaraj
saravana veluswamy
blog biththan
Trichy-Ao
Chandra sekaran
panchaligam sajeerthan
Keerthi
Balababharathi
Raam
Ramanan
Navan
prapu ganesan
thiru. Inpaa
SAHINDHINI MUTHTHAN
Rasa
udhaya chelvi
Pari Ayyasami
kiruba raman
suthan p suthan
kalaiyarasay akalya
இவர்களில் சிலர் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைத்துள்ளார்கள். பலர் இன்னமும் அனுப்பி வைக்கவில்லை. அனுப்பி வைக்காதவர்கள் தயவு செய்து உங்கள் படைப்புக்களை, 30.05.07 ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக மின்னஞ்சல் மூலம் ganam.team@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.
நீங்கள் அனுப்பி வைக்கும் படைப்புக்கள் ஒழுங்கமைக்கப்பட்டு, கானம் இணையத்தளத்தில் வெளியிடப்படும். அப்போது பார்வையாளர்களும், தங்கள் விருப்பத்தேர்வு வாக்குகளை வழங்கலாம். போட்டி முடிவுகள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டதுபோன்று, நடுவர்கள் குழுவின் தீர்ப்பின் பிரகாரம் 14.06.07 வெளியாகும்.
உங்கள் படைப்புக்களை அனுப்பும் போது மின்னஞ்சலில்,
உங்கள் பெயர்: உண்மையான பெயர் தாருங்கள். நீங்கள் விரும்பாவிடத்து
வெளியிடப்படமாட்டாது. ( விருப்பத்தை குறிப்பிடவும்)
உங்கள் புனை பெயர்: (உண்மையான பெயரை வெளியிட விரும்பாவிடத்து
புனைபெயர் வெளியிடப்படும்)
உங்கள் படைப்பின் தலைப்பு:
நீங்கள் வதியும் நாடு:
உங்கள் தாய்நாடு :
உங்கள் படைப்பை கானம் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கும், உங்கள் படைப்பிற்கான உரிமைத்துவ உறுதிப்படுதலுக்குமான உங்கள் ஒப்புதலையும் தெரிவித்து அனுப்பி வையுங்கள்.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Posted byமலைநாடான் at இரவு 8:49 3 comments
Labels: அறிவித்தல்
இணையத்தில் இன்பத்தமிழ் 18
ஞாயிறு, மே 27, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத்தமிழ் வானொலியில், ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின், இவ்வார ஒலிப்பதிவிது.
குறளிசை,
வாரம் ஒரு தகவல் பகுதியில், பதிவர் விஜே தரும் பாற்பொருட்கள் சிலவற்றின் பயன்பாடு,
மறைந்த மேதை, இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதன் பற்றிய கானா. பிரபாவின் பதிவிலிருந்து குறிப்புக்களும், பாடலும்,
இவ்வார அறிமுகத்தில், ஜெகத்தின் கைம்மண் அளவு வலைப்பதிவு.
நித்தியாவின் சுடுவானம் வலைப்பதிவிலிருந்து அழகான கவிதை
மே 31ந் திகதியில், எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் குறித்த ஆவணப் படத் தயாரிப்புக் குறித்த சோமியின் பதிவிலிருந்து சில பகிர்வுகள் , என்பன இவ்வார நிகழ்ச்சியினை அலங்கரிக்கின்றன.
நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சியைக் கேட்க -
|
Posted byமலைநாடான் at மாலை 7:25 5 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 17
திங்கள், மே 21, 2007
வணக்கம் நண்பர்களே!
இன்று (20.05.07) மாலை ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இடம்பெற்ற
" இணையத்தில் இன்பத் தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின், இவ்வார ஒலிப்பதிவிது.
இசைவடிவாகத் திருக்குறள், - புதியபகுதி
வாரம்தோறும் புதிய தகவல், - புதியபகுதி
புலத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு,
இவ்வார அறிமுகம் பகுதியில் தாய்நாடு வலைப்பதிவையும், அதைனை எழுதிவரும், அற்புதன் அவர்களையும், இணைத்துள்ளோம்.
நிகழ்சியின் சிறப்புக்காரணமாய அனைத்து நண்பர்களும் நன்றி.
நிகழ்ச்சியைக்கேட்டு, தங்கள் மேலான கருத்துக்களை தாருங்கள்.
நிகழ்ச்சிகளைக்கேட்க:-
|
Posted byமலைநாடான் at இரவு 12:12 2 comments
Labels: ஒலிபரப்பு
ஒரு மஞ்சற் பதிவு
புதன், மே 16, 2007
இது ஒரு சூடான பதிவாகவோ, அல்லது ஆரிய இடுகையாகவோ, எண்ணப்பட வேண்டும் என்பதற்காக அல்ல இத்தலைப்பு. உண்மையில் ஒரு இது மஞ்சற் பதிவுதான். வேண்டுமானல் ஒரு கூட்டு இடுகை என்று வைத்துக்கொள்ளலாம். என்ன விசயம் பேசப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டு, உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.
ஒலிப்பதிவில் கலந்துகொண்டு சுவாரசியமாக உரையாடிய பதிவர் வி.ஜெ. சந்திரனுக்கு மிக்க நன்றிகள்.
Posted byமலைநாடான் at இரவு 1:22 8 comments
Labels: ஒலிப்பதிவு
இணையத்தில் இன்பத்தமிழ் 16
ஞாயிறு, மே 13, 2007
வணக்கம் நண்பர்களே!
"ஐரோப்பியத் தமிழ் வானொலியின்" வானலைவழியாக, இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" வாரந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
புதிய பகுதியாக தமிழ்மறையாம் திருக்குறள் வரிகள் இசைவடிவில்,
இணையத்தமிழ் பயன்பாட்டுத் தொடர் வரிசையில், தமிழ்விசை 99 பற்றிய தமிழ் ஆர்வலர், பதிவர் ரவிசங்கருடன் கலந்துரையாடல்,
அன்னையின் விருப்பத்திற்குரியபாடல்,
இவ்வார அறிமுகத்தில் ஆன்மீகம், இலக்கியம், இசை என்ற வகைகளில், இணையப்பரப்பில் எழுதி வரும் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களும், அவரது மாதவிப்பந்தல் வலைப்பதிவு,
ஆகிய சிறப்பம்சங்கள், இவ்வார நிகழ்ச்சியை மெருகுசேர்க்கின்றன.
கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்த, ரவிசங்கர் அவர்களுக்கும்,
நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவிய அனைவர்க்கும் மிக்க நன்றிகள்.
நிகழ்ச்சியைக் கேட்க :-
இணையத்தில் இன்பத்தமிழ் 16.mp... |
இச்செயலி இயங்காவிடத்து பக்கப்பட்டையில் உள்ள செயலியிலும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at மாலை 7:42 9 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 15
ஞாயிறு, மே 6, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய,
" இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்த்திரைப்படமான நிர்மலா திரைப்படத்தில் இடம் பெற்ற ' கண்மனி ஆட வா..' பாடல்,
இவ்வார அறிமுகத்தில், வலைப்பதிவர் மா.சிவகுமார் அவர்களது, எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். வலைப்பதிவு,
வலைப்பதிவுகள் குறித்து மா.சிவகுமாருடனான கலந்துரையாடல்,
ஆகியன இவ்வார ஒலிபரப்பில் இடம்பெறுகிறது.
நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சியைக் கேட்க:-
இணையத்தில் இன்பத்தமிழ் 15 |
இச் செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at இரவு 9:10 15 comments
Labels: ஒலிபரப்பு
என்ன பண்ணலாம்? எப்படிச் செய்யலாம்?
புதன், மே 2, 2007
குறும்படப் போட்டி பற்றி அறிவித்தல் வெளியாகி பின்னரும், தமிழ்மணத்தில் வலம் வரும் நண்பர்களில் இருவரைத் தவிர, வேறு யாரும் பெயர் தரவில்லையே? நமக்குத் தெரிந்த ஆர்வமான நண்பர்கள் சிலர் கூட மெளனமாக இருக்கின்றார்களே..என்னவாக இருக்கும் என்று எண்ணியபோது நண்பர் சிந்தாநதி அழைத்து, ஏன் MPEG கோப்பாக கேட்கின்றீர்கள். செல்போனிலோ, சாதாரண வீடியோ கமெராவினாலோ படம்பிடிப்பவர்கள் அதை எப்படி MPEG கோப்பாக மாற்றுவது ? எப்படி எடிட் பண்ணுவது?
எப்படி இசை சேர்ப்பது? என நிறைய எப்படிகளை உள்ளடக்கிய அந்தப் பெரும் கேள்வியைக் கேட்டார். அடடே இது ஒரு பிரச்சினையாக இருக்கிறதா? நம்மவர்கள் எல்லோரும் ஆழ்கடலோடி முத்துக்குளிப்பவர்களாச்சே அவர்களுக்குத் தெரியாததா? என்றிருந்து விட்டேனே, முடிந்தவரைக்கும் , தெரிந்ததை சொல்லப் பார்க்கின்றேன் என்று சொல்லியபின் எழுதியது இவை.
உங்கள் கைத்தொலைபேசி கமெராவாலோ( 2 மெகாபிக்சலுக்கு குறையதிருப்பின் தெளிவாக இருக்கும்) வீடியோ கமெராவினாலோ படம் பிடித்ததை வெட்டி ஒட்டி, விரும்பிய வண்ணமாய் தொகுக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு ஒரு இலகு மென்பொருள் இருந்தால் உதவியாக இருக்கும், அதுவும் இலவசமாக இருந்தால் நல்லது என்று எண்ணுகின்றீர்கள், அப்படித்தானே ?
நீங்கள் படம் பிடித்ததைக் கணனியில் பதிவு செய்து கொள்ளுங்கள். பின் இந்தத் தளத்திற்கு சென்று MPEG File ஆக மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் கைத்தொலைபேசியில் படம் பிடித்திருந்தால், அநேகமாக அவை 3 GP கோப்புக்களாக இருக்கும். எந்தவிமான வீடியோ பைல்களையும், இந்தத் தளத்தில் கிடைக்கும் மென் பொருளின் உதவியோடு MPEG கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.
பின்னர் இந்தத் தளத்தில் கிடைக்கும் மென்பொருளின் உதவியோடு, படத்தொகுப்பு வேலைகளைச் செய்யலாம். இசை சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் வீடியோ கமெராவினால் படம்பிடித்திருந்தால், அவை Avi கோப்புக்களாக கணனியில் சேமிக்கப்படும். அவற்றை நேரடியாக படத்தொகுப்பில் இணைத்துக்கொள்ளுங்கள். பின் எல்லாவேலைகளும் முடிந்தபின் முதலில் குறிப்பிட்ட தளத்தில் கிடைக்கும் மென்பொருள் உதவியுடன் MPEG கோப்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.
மேலே நான் சுட்டிய இரு தளங்களும் சற்று இலகுவாக இயங்குபவையாகவும், சற்று அதிக வசதிகளுடனும், இலவசமாகக் கிடைக்கின்றன. இவை தவிர இணையத்தில் மேலும் பல தளங்கள் இருக்கின்றன. உங்களால் முடியுமாயின் அவற்றின் உதவியோடும் செய்யலாம்.
இனி என்ன? முயற்சியுங்கள். முடிந்துதும் அனுப்பி வையுங்கள். போட்டி முடிவுத்திகதி 30.05.07 வரை நீடிக்கப்பட்டுள்ளது. முதலில் உங்கள் பெயர்களைப் பதிவு செய்யுங்கள் நண்பர்களே!
பதிவு செய்ய:- ganam.team@gmail.com
எழுதத் தூண்டிய நண்பர் சிந்தாநதிக்கு நன்றிகள் _/\_
Posted byமலைநாடான் at மதியம் 2:50 0 comments
Labels: அறிவித்தல்