"இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சி, பிரதி ஞாயிறுதோறும் "ஐரோப்பியத்தமிழ் வானொலியில்", மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிறது.

மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

மார்ச். 8ந் திகதி.

சர்வதேச பெண்கள் தினம்.

இதனைமுன்னிட்டு ஐரோப்பியத்தமிழ் வானொலியில், இன்று மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிய மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை இங்கே பதிவு செய்கின்றேன்.

ஒரு பெண் அறிவிப்பாளரின் குரலில் தொகுக்க வேண்டுமெனும் என் எண்ணப்பாடு, இறுதித் தருணங்களில், இயலாது போயிற்று. அதனால் நிகழ்ச்சியைச் சரியாக ஒருங்கமைக்க முடியாது போய்விட்டது.

நிகழ்ச்சியில் இனைத்துக்கொள்ள கேட்டமாத்திரத்தில், எண்ணங்களை எழுத்தில் வடித்து அருமையான ஒரு கவிதையை தந்தார் தமிழ்நதி.
அதை மட்டும் ஒரு தோழியின் குரலில் இணைக்க முடிந்தது. தமிழ்நதி மிக்க நன்றி.

அக் கவிதையின் எழுத்து வடிவத்தை இங்கே காணலாம்.

நிகழ்சித் தயாரிப்புக்கு உதவி அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்

ஒலிப்பதிவைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சி.mp3

Posted byமலைநாடான் at  

6 comments:

சின்னக்குட்டி said...  

வணக்கம் மலைநாடன் மகளிர் தினத்தை ஒட்டி வானொலி நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள்

தமிழ்நதி said...  

நன்றாக வரவில்லை என்று சொல்லியிருந்தீர்களே மலைநாடான்...! மிக நன்றாகச் செய்திருக்கிறீர்கள். எழுத்து குரலாய் உயிர்பெற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

பொன்ஸ் said...  

அவசரமானதென்றாலும், நல்ல நிகழ்ச்சி மலைநாடன்..

தமிழ்நதியின் கவிதை அருமை.. இதை உங்கள் பதிவிலும் பதிப்பிக்கலாமே நதி?

மலைநாடான் said...  

சின்னக்குட்டி!

தவறு முதலில் தெரிவது, தவறு செய்பவனுக்குத்தானாம். நீங்கள் எல்லோரும் நன்றெனச் சொன்னாலும். எனக்குத்திருப்தியாக இல்லை என்பது உண்மையே. உங்கள் பாராட்டுக்கு நன்றி.

மலைநாடான் said...  

தமிழ்நதி!

உங்கள் பாராட்டுக்கு நன்றி. உண்மையில் நான் நினைத்திருந்தபடி நிகழ்ச்சி செய்யமுடியாது போனதை வைத்துத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

மலைநாடான் said...  

பொன்ஸ்!

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

Post a Comment