ஏணிப்படி/ஏன் இப்படி - கவிஞர் தாமரை.
ஞாயிறு, டிசம்பர் 2, 2007
இணையத்தில் உலாவியபோது கண்டேன், கவிஞர் தாமரையின் இந்தக் கவிதையை
சக பதிவர் கலை மின்னஞ்சலில் அனுப்பி வைத்த, அசரவைக்கும் ஒரு நடனக் காட்சி
Posted byமலைநாடான் at இரவு 9:11 5 comments
Labels: ஒளிப்பதிவு
இதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க..?
புதன், செப்டம்பர் 19, 2007
"காக்கா கூட்டத்தைப் பாருங்க அதற்குக் கற்றுக் கொடுத்தது யாருங்க..?" என்ற பாடல் வரிகள் நன்கு பிரபலம். நேயத்தை வலியுறுத்தும் வரிகளவை. பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து, மீன்களுக்கு உணவூட்டும் இந்த வாத்துக்குஞ்சுக்கு, அந்த நேயத்தைக் கற்றுக் கொடுத்தது யாருங்க?
சிந்தனைத் திறன் அற்ற ஒரு பறவையாக மனிதர்களால் அடையாளப்படுத்தப்பட்ட வாத்து நேசமோடிருக்க, சிந்திக்கத் தெரிந்த மனிதன் செல்லும் வழி..?
Posted byமலைநாடான் at காலை 9:42 2 comments
Labels: ஒளிப்பதிவு
என்னினமே என்சனமே! என்னை உனக்கு தெரிகிறதா?
செவ்வாய், ஆகஸ்ட் 7, 2007
"...சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே..." எனும் ஒருவாசகத்துக்கும் உருகாதார் கூட உருகிப்போகும் திருவாசகவரிகளை, உச்சரிப்புச் சுத்தமாய், ஊனுருகப் பாடும் அந்த மனிதனை, அவர் இசையின் கரைதலில் கசிந்து கண்ணீர் மல்கும் மனிதர்களை, வேடிக்கை பார்க்கும் என் பாலகப் பருவத்தில் அறிமுகமான அந்த அற்புதமான ஈழத்து இசைக்கலைஞன்தான் பொன். சுந்தரலிங்கம்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், பின்னாட்களில் யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தார். ஈழத்தின் பல இசைமேடைகளிலும், கோவில்களிலும் ஒலித்த அந்த வெண்கலக்குரலோன், இலங்கை வானொலி புகழ் இசைக்கலைஞராக அறியப்பட்டிருந்த போதும், மக்கள் கலைஞனாக பலரது மனங்களிலும் இடம்பிடித்துக்கொண்டதென்னவோ " இந்த மண் எங்களின் சொந்த மண்.." பாடலைப் பாடியதன்பின்தான். இந்தப்பாடல் பின்னர் மற்றுமொரு ஈழத்துப்பாடகர் சாந்தனாலும் பாடப்பெற்று இறுவட்டாக வந்தததென நினைக்கின்றேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கென ஒரு அடையாளத்தைத் தந்தது, " என்னினமே என் சனமே, என்னை உனக்குத் தெரிகிறதா? .." எனும் இப்பாடல்தான் என, ஒரு வானொலிச் செவ்விக்காக சந்திந்தபோது என்னிடம் கூறியிருந்தார். அந்தப்பாடலையும், இன்றைய ஈழச்சூழலைச் சுட்டும் பாடலையும், சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற, ஒரு வயலின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்வில் பாடிய காட்சிதனை (ஏற்கனவே வன்னியனின் ஈழத்துப்பாடல்கள் தளத்தில் ஒலி வடிவாகத் தந்திருந்தபோதும்) ஒளிப்பதிவாகப் பதிவ செய்கின்றேன்.
இது தமிழ்த்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியிலிருந்து பதிவு செய்யப்பட்டது. அரங்கேற்றம் செய்யும் செல்வன்கள் கூட புலம்பெயர் சூழலில் ஈழத்தின் இளைய தலைமுறையின் கலையார்வத்துக்கும், தமிழபற்றுக்குமான நல் எடுத்துகாட்டாகக் சொல்ல முடியும். இந்நிகழ்ச்சியோடு தொடர்புடைய அனைவர்க்கும் நன்றி கூறி, மற்றுமொரு ஈழத்துக் கலைஞனின் கலைத்துவத்தை மனநிறைவோடு பதிவு செய்கின்றேன்.
Posted byமலைநாடான் at காலை 6:24 6 comments
Labels: ஈழத்துக்கலைஞன். ஈழத்துப்பாடல்
இணையத்தில் இன்பத்தமிழ் 23
ஞாயிறு, ஆகஸ்ட் 5, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
இன்றைய நிகழ்ச்சி, இன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில், தமிழ்வலைப்பதிவு நண்பர்கள் இனைந்து நடாத்திய தமிழ்வலைப்பதிவர் பட்டறை ஏற்பாட்டாளர்களின் கருத்துக்கள் தாங்கிவரும் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது.
இந்நிகழ்ச்சி குறித்து, பொன்ஸ், விக்கி, சிவகுமார், ஆகியோர் கருத்துக்கள் வழங்கியிருந்தார்கள். இப் பயிற்சிப்பட்டறை, இணையத்தமிழ்ப்பரப்பில் புதிய நல்ல பல ஆரம்பங்களுக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கையுடன், இந்த நிகழ்வினை ஒரு குடும்பமென இணைந்து, முன்னெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிகழ்ச்சியைக் கேட்க :-
|
Posted byமலைநாடான் at மாலை 7:12 4 comments
Labels: ஒலிபரப்பு. வலைப்பதிவர் பட்டறை. சிறப்பு நிகழ்ச்சி
வலைப்பதிவர் பட்டறை சிறப்புற வாழ்த்துக்கள்!
இன்று தமிழகத் தலை நகர் சென்னையில், இந்தியாவில், தமிழ்மொழிசார்ந்து, முதன்முறையாக, பாரிய அளவில் திட்டமிட்டு, சென்னைப் பல்கலைக்ககழக வளாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும், வலைப்பதிவர் பட்டறை சிறப்புற ஈழ வலைப்பதிவு நண்பர்கள் சார்பிலும், இணையத்தில் இன்பத்தமிழ் வானொலி நிகழ்ச்சி சார்பிலும், ஐரோப்பியத் தமிழ் வனொலி சார்பிலும், இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிலே ஆர்வமுடன் கலந்துகொள்ளும், புதிய நண்பர்களுக்கும், இப்பட்டறையை சிறப்புற ஒழுங்கமைந்திருக்கும் ஏற்பாட்டாள நண்பர்களுக்கும், கலந்துசிறப்பிக்கும் அனைத்து நண்பர்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும், பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.
இந்நிகழ்வின் ஆதாரமாக இருக்கக்கூடிய நிகழ்ச்சி அனுசரணையாளர்கள் அனைவர்க்கும் நன்றிகளும், வாழ்த்துக்கள்.
Posted byமலைநாடான் at காலை 5:52 4 comments
Labels: வலைப்பதிவர் பட்டறை, வாழ்த்துக்கள்
இணையத்தில் இன்பத்தமிழ் 22
ஞாயிறு, ஜூலை 29, 2007
வணக்கம் நண்பர்களே!
இன்று மாலை ஐரோப்பியத் தமிழ் வானொலி யில் ஒலிபரப்பாகிய,
" இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
இன்றைய நிகழ்ச்சியில் குறளிசை.
ஆகஸ்ட் மாதம் 5ந்திகதி சென்னையில் நடைபெறும் வலைப்பதிவர் பட்டறை குறித்த பதிவர் பொன்ஸ் அவர்களுடனான உரையாடல்.
இவ்வார அறிமுகத்தில், ஓசை செல்லாவின் "நச்" ன்னு ஒரு வலைப்பூ
மீளிசைப்பாடலாக வந்த திரையிசைப்பாடல்
ஆகியவை இவ்வார நிகழ்ச்சியினை அணிசேர்க்கின்றன.
ஒலிபதிவு சிறக்க உதவிய அனைவர்க்கும் நன்றி.
ஒலிப்பதிவினைக்கேட்க :-
|
குறும்படப்போட்டியில் வெற்றிபெற்ற படைப்புக்களைக்காண இங்கே வாருங்கள்.
Posted byமலைநாடான் at மாலை 7:36 10 comments
Labels: ஒலிபரப்பு
குறும்படப்போட்டி முடிவுகள்
வியாழன், ஜூலை 26, 2007
கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் அறிவித்தல் தந்து, மே மாத இறுதியில் நிறைவு செய்யப்பட்ட குறும்படப் போட்டி முடிவுகள், கானம் கலைக்கூடம் இணையப்பக்கத்தில் தற்போது வெளியாகியுள்ளது. நமது இயல்புக்கு அப்பாற்பட்ட சில காரணங்களினால், இம்முடிவுகள் வெளிவரத் தாமதமாகியிருந்தது. அதற்காக அனைவரிடமும் பணிவான மனவருத்தத்தினையும், இப்போட்டியை நடத்துவதற்கு பல்வேறு உதவிகளைப்புரிந்த நண்பர்களுக்கு நன்றிகளையும், தெரிவித்துக் கொள்கின்றோம். குறும்பட ஆர்வலர்களுக்கு, மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியொன்று உள்ளது, வாருங்கள் அங்கே...

Posted byமலைநாடான் at இரவு 12:51 6 comments
Labels: அறிவிப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 20
ஞாயிறு, ஜூலை 15, 2007
வணக்கம் நண்பர்களே!
01.07.07 ஞாயிறு மாலை ஐரோப்பியத்தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய,
"இணையத்தில் இன்பத்தமிழ்" நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
குறளிசை,
வாரம் ஒரு தகவல்
சுகமான ஒரு பாடல்
இவ்வார அறிமுகத்தில் பதிவர் சயந்தனும், அவரது சாரல் வலைப்பதிவும்.
சிநேகிதியின் குரலில் சஞ்சய்காந்தின் கவிதை ஆகியன, இவ்வார நிகழ்ச்சியை அலங்கரிகின்றன.
நிகழ்ச்சியின் சிறப்புக்குக் காரணமாய அன்புள்ளங்கள் அனைவர்க்கும் நன்றி.
நிகழ்ச்சியைக் கேட்க:-
|
சென்றவாரமும், இவ்வாரமும், நிகழ்ச்சியில், நெடுமாறன் ஐயாவின் செவ்வி இடம்பெற்றது. செவ்வி ஏற்கனவே பதிவலிட்டுள்ளபடியால் அவை இங்கு பதிவு செய்யப்படவில்லை.
Posted byமலைநாடான் at இரவு 9:13 0 comments
Labels: ஒலிபரப்பு
பழ. நெடுமாறன் ஐயாவோடு பயணிக்கையில்..
வெள்ளி, ஜூலை 13, 2007
முன்னரும் அவரை நேரில் பாரத்திருந்த போதும், ஐயா நோய்வாய்ப்பாட்டு குணமடைந்தபின்னர் இப்போதுதான் சந்தித்திருந்தேன். பேரணிநாளின்போது, எந்தவித அயர்சியும் அற்றவராக, பேரணியின் தொடங்கியதிலிருந்து, இறுதிவரை, நடந்து வந்த அன்றே ஆச்சரியத்திலாழ்த்திய அவர், செவ்விகாணச் சென்றபோதும், அசத்தினார் என்றே சொல்ல வேண்டும்.
இலண்டன் நோக்கிப் பயணமாகும் இறுதித்தருணங்களிலேயே அவரைச் சந்திக்க முடிந்தது. ஒளிப்பதிவு நேர்காணலுக்காக ஆயத்தங்களுடன் நான் சென்றிருந்த போதும், இறுதிநேரத்தில் அது இயலாமல் போனது. நேரப்பற்றாக்குறை காரணமாக, விமான நிலையம் செல்லும் வழியில், ஓடும் வாகனத்துக்குள்ளேயே செவ்விகாணத் தீர்மானித்து, எண்ணத்தைச் சொன்னபோது, என்றும் மாறாத அதே மென்னகையோடு, அதிவேகவீதியில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்துக்குள் ஏற்படக்கூடிய இடையூறுகள், வசதியீனங்கள் எதையுமே பொருட்படுத்தாது, மிக இயல்பாக, நிதானமாக, தன் கருத்துக்களைச் சொன்னார்.
அரசியல் ஆர்பாட்டங்களற்ற கருத்துக்களைத் தருவதில், ஐயா அவர்களும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும் எனைக்கவர்ந்தவர்கள். அன்றும் ஐயா அவர்களின் தெளிவான கருத்துக்கள் விரிவாகவந்தன. கேட்கப்படும் கேள்விக்கு எவ்வளவு விரிவாகப் பதில் தரமுடியுமோ, அவ்வளவு விரிவாகப் பதில்தரும் அவர் வழமை அன்றும் தொடர்ந்தது.
தமிழினத் தனித்துவம் பேணியவண்ணம், இந்தியக்குடிமகனாக இருப்பது எப்படி என்பதை நிச்சயம் ஐயாவிடம் கற்றுக்கொள்ளலாம். உண்மையில் அவர் உடைமட்டுமல்ல, உள்ளமும் வெள்ளையானதே. இனி அந்த உத்தமனாரோடான செவ்வி. தமிழ்மணம்பூங்காவில் இடம்பெற்றுள்ள இச்செவ்வியும், முன்னோட்டமும், பூங்காவிற்கான நன்றியறிதலுடன், இங்கே மறுபிரசுரமாகிறது.
ஒளிப்பதிவில் ஒரு முன்னோட்டம்:-
ஒலிப்பதிவில் முழுமையாக :-
|
-: நண்பர்களே!
சில தவிர்க்க முடியாத காரணங்களினால், கடந்தசிலவாரங்களுக்கான இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சி ஒலிப்பதிவு வலையேற்றம் செய்ய முடியவில்லை. எதிர்வரும் வாரம் முதல், மீளவும் இணையத்தில் கேட்கக் கூடியதாகவிருக்கும். ஆர்வமுடன் இருந்தவர்க்கும், ஆர்வத்துடன் மின்மடலில் தொடர்புகொண்டு விசாரித்தவர்க்கும், மிக்க நன்றிகள்.
Posted byமலைநாடான் at காலை 11:00 17 comments
Labels: நேர்காணல்
இணையத்தில் இன்பத்தமிழ் 19
திங்கள், ஜூன் 11, 2007
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் 10.06.07 ஞாயிறு மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத் தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
குறளிசை,
வாரம் ஒரு தகவல்,
மலைசியாவின் புகழ்மிகு இசைக்குழுவான யோகீ. பி யின் மீளிசை தமிழ் ரேப் பாடல்,
இவ்வார அறிமுகத்தில் பொன்ஸ் பக்கங்கள்,
11.06.2007 ஜெனிவா ஐ.நா.சபை நோக்கிய " வெல்கதமிழ் "பேரணி குறித்த குறிப்புக்கள் என்பன இடம் பெறுகின்றன.
ஒலிபரப்பிற்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
நிகழ்ச்சிகளைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சிகளைக் கேட்க :
|
Posted byமலைநாடான் at இரவு 12:14 4 comments
Labels: ஒலிபரப்பு
சிறுகதைத் தொகுதி - ஒலிப்பதிவு
செவ்வாய், ஜூன் 5, 2007
வணக்கம் நண்பர்களே!
இன்றைய பதிவில், முதல் முறையாக ஒரு சிறுகதைத்தொகுதியைப் பற்றிய கலந்துரையாடல் ஒன்றினைப் பதிவு செய்கின்றோம். ஏற்கனவே என் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்த, ஈழத்தின் இளம் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைத்தொகுதி பற்றிய உரையாடல் இது. முன்னர் பதிவு செய்தபோது, மதி, தமிழ்நதி, வசந்தன், ஆகியோர் இந்த இளம் எழுத்தாளரையும், அவரது படைப்புப் பற்றியும் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள். இனி ஒலிப்பதிவினைக் கேளுங்கள்.
இச்சிறுகதைத்தொகுதி இலங்கையில் புத்தகசாலைகளிலும், புலத்தில் எழுத்தாளரிடமும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது இணையத்தில் இங்கே வாசிக்கலாம். அல்லது நூலகம் சேகரிப்பில் வாசிக்கலாம்.
இவ் ஒலிப்பதிவினை இன்று பதிவு செய்வதற்கு சிறப்பான காரணம் ஒன்றுமுண்டு.
இணையத்தில் இன்பத்தமிழ் வாராந்திர ஒலிபரப்பு, இவ்வார நிகழ்ச்சி, தொழில்நுட்பச்சிக்கல் காரணமாக, புதிய நிகழ்ச்சிக்குப் பதிலாக, சென்றவாரநிகழ்ச்சியே மறு ஒலிபரப்பாகியது. அதனால், இவ்வாரம் புதிய நிகழ்ச்சி இங்கு பதிவேற்றப்படவில்லை. அடுத்தவாரம் வழமைபோல் புதிய நிகழ்ச்சி பதிவேற்றப்படும்.
Posted byமலைநாடான் at இரவு 8:24 16 comments
Labels: ஒலிப்பதிவு
குறும்படப்போட்டி - முடிவுத்திகதி
செவ்வாய், மே 29, 2007
நண்பர்களே!
கானம் கலைக்கூடமும், சில நண்பர்களும் , இணைந்து ஒழுங்கு செய்திருந்த குறும்படப்போட்டியின் நீடிக்கப்பட்ட முடிவுத்திகதி 30.05.2007 .
போட்டி அறிவிக்கபட்டதும் 14 பேரும், போட்டி முடிவுத்திகதி நீடிக்கப்பட்டபின்னர் 13 பேருமாக இதுவரையில், மொத்தம் 27 பேர் முறையாகத் தங்கள் பெயர்களைப்பதிவு செய்துள்ளார்கள். அவர்கள் பெயர் விபரம் வருமாறு :-
peter selvaraj
ruban thanam
SABESAN THANGATHURAI
kathiravetpillai mohanadas
Sharveswara Rahulnath
arunasalam chandaramohan
Sundar rajan
sriekantharajayogaraj
saravana veluswamy
blog biththan
Trichy-Ao
Chandra sekaran
panchaligam sajeerthan
Keerthi
Balababharathi
Raam
Ramanan
Navan
prapu ganesan
thiru. Inpaa
SAHINDHINI MUTHTHAN
Rasa
udhaya chelvi
Pari Ayyasami
kiruba raman
suthan p suthan
kalaiyarasay akalya
இவர்களில் சிலர் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைத்துள்ளார்கள். பலர் இன்னமும் அனுப்பி வைக்கவில்லை. அனுப்பி வைக்காதவர்கள் தயவு செய்து உங்கள் படைப்புக்களை, 30.05.07 ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக மின்னஞ்சல் மூலம் ganam.team@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.
நீங்கள் அனுப்பி வைக்கும் படைப்புக்கள் ஒழுங்கமைக்கப்பட்டு, கானம் இணையத்தளத்தில் வெளியிடப்படும். அப்போது பார்வையாளர்களும், தங்கள் விருப்பத்தேர்வு வாக்குகளை வழங்கலாம். போட்டி முடிவுகள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டதுபோன்று, நடுவர்கள் குழுவின் தீர்ப்பின் பிரகாரம் 14.06.07 வெளியாகும்.
உங்கள் படைப்புக்களை அனுப்பும் போது மின்னஞ்சலில்,
உங்கள் பெயர்: உண்மையான பெயர் தாருங்கள். நீங்கள் விரும்பாவிடத்து
வெளியிடப்படமாட்டாது. ( விருப்பத்தை குறிப்பிடவும்)
உங்கள் புனை பெயர்: (உண்மையான பெயரை வெளியிட விரும்பாவிடத்து
புனைபெயர் வெளியிடப்படும்)
உங்கள் படைப்பின் தலைப்பு:
நீங்கள் வதியும் நாடு:
உங்கள் தாய்நாடு :
உங்கள் படைப்பை கானம் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கும், உங்கள் படைப்பிற்கான உரிமைத்துவ உறுதிப்படுதலுக்குமான உங்கள் ஒப்புதலையும் தெரிவித்து அனுப்பி வையுங்கள்.
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Posted byமலைநாடான் at இரவு 8:49 3 comments
Labels: அறிவித்தல்
இணையத்தில் இன்பத்தமிழ் 18
ஞாயிறு, மே 27, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத்தமிழ் வானொலியில், ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின், இவ்வார ஒலிப்பதிவிது.
குறளிசை,
வாரம் ஒரு தகவல் பகுதியில், பதிவர் விஜே தரும் பாற்பொருட்கள் சிலவற்றின் பயன்பாடு,
மறைந்த மேதை, இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதன் பற்றிய கானா. பிரபாவின் பதிவிலிருந்து குறிப்புக்களும், பாடலும்,
இவ்வார அறிமுகத்தில், ஜெகத்தின் கைம்மண் அளவு வலைப்பதிவு.
நித்தியாவின் சுடுவானம் வலைப்பதிவிலிருந்து அழகான கவிதை
மே 31ந் திகதியில், எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம் குறித்த ஆவணப் படத் தயாரிப்புக் குறித்த சோமியின் பதிவிலிருந்து சில பகிர்வுகள் , என்பன இவ்வார நிகழ்ச்சியினை அலங்கரிக்கின்றன.
நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சியைக் கேட்க -
|
Posted byமலைநாடான் at மாலை 7:25 5 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 17
திங்கள், மே 21, 2007
வணக்கம் நண்பர்களே!
இன்று (20.05.07) மாலை ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இடம்பெற்ற
" இணையத்தில் இன்பத் தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின், இவ்வார ஒலிப்பதிவிது.
இசைவடிவாகத் திருக்குறள், - புதியபகுதி
வாரம்தோறும் புதிய தகவல், - புதியபகுதி
புலத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு,
இவ்வார அறிமுகம் பகுதியில் தாய்நாடு வலைப்பதிவையும், அதைனை எழுதிவரும், அற்புதன் அவர்களையும், இணைத்துள்ளோம்.
நிகழ்சியின் சிறப்புக்காரணமாய அனைத்து நண்பர்களும் நன்றி.
நிகழ்ச்சியைக்கேட்டு, தங்கள் மேலான கருத்துக்களை தாருங்கள்.
நிகழ்ச்சிகளைக்கேட்க:-
|
Posted byமலைநாடான் at இரவு 12:12 2 comments
Labels: ஒலிபரப்பு
ஒரு மஞ்சற் பதிவு
புதன், மே 16, 2007
இது ஒரு சூடான பதிவாகவோ, அல்லது ஆரிய இடுகையாகவோ, எண்ணப்பட வேண்டும் என்பதற்காக அல்ல இத்தலைப்பு. உண்மையில் ஒரு இது மஞ்சற் பதிவுதான். வேண்டுமானல் ஒரு கூட்டு இடுகை என்று வைத்துக்கொள்ளலாம். என்ன விசயம் பேசப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டு, உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.
ஒலிப்பதிவில் கலந்துகொண்டு சுவாரசியமாக உரையாடிய பதிவர் வி.ஜெ. சந்திரனுக்கு மிக்க நன்றிகள்.
Posted byமலைநாடான் at இரவு 1:22 8 comments
Labels: ஒலிப்பதிவு
இணையத்தில் இன்பத்தமிழ் 16
ஞாயிறு, மே 13, 2007
வணக்கம் நண்பர்களே!
"ஐரோப்பியத் தமிழ் வானொலியின்" வானலைவழியாக, இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" வாரந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
புதிய பகுதியாக தமிழ்மறையாம் திருக்குறள் வரிகள் இசைவடிவில்,
இணையத்தமிழ் பயன்பாட்டுத் தொடர் வரிசையில், தமிழ்விசை 99 பற்றிய தமிழ் ஆர்வலர், பதிவர் ரவிசங்கருடன் கலந்துரையாடல்,
அன்னையின் விருப்பத்திற்குரியபாடல்,
இவ்வார அறிமுகத்தில் ஆன்மீகம், இலக்கியம், இசை என்ற வகைகளில், இணையப்பரப்பில் எழுதி வரும் கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களும், அவரது மாதவிப்பந்தல் வலைப்பதிவு,
ஆகிய சிறப்பம்சங்கள், இவ்வார நிகழ்ச்சியை மெருகுசேர்க்கின்றன.
கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்த, ரவிசங்கர் அவர்களுக்கும்,
நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவிய அனைவர்க்கும் மிக்க நன்றிகள்.
நிகழ்ச்சியைக் கேட்க :-
இணையத்தில் இன்பத்தமிழ் 16.mp... |
இச்செயலி இயங்காவிடத்து பக்கப்பட்டையில் உள்ள செயலியிலும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at மாலை 7:42 9 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 15
ஞாயிறு, மே 6, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய,
" இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்த்திரைப்படமான நிர்மலா திரைப்படத்தில் இடம் பெற்ற ' கண்மனி ஆட வா..' பாடல்,
இவ்வார அறிமுகத்தில், வலைப்பதிவர் மா.சிவகுமார் அவர்களது, எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும். வலைப்பதிவு,
வலைப்பதிவுகள் குறித்து மா.சிவகுமாருடனான கலந்துரையாடல்,
ஆகியன இவ்வார ஒலிபரப்பில் இடம்பெறுகிறது.
நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சியைக் கேட்க:-
இணையத்தில் இன்பத்தமிழ் 15 |
இச் செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at இரவு 9:10 15 comments
Labels: ஒலிபரப்பு
என்ன பண்ணலாம்? எப்படிச் செய்யலாம்?
புதன், மே 2, 2007
குறும்படப் போட்டி பற்றி அறிவித்தல் வெளியாகி பின்னரும், தமிழ்மணத்தில் வலம் வரும் நண்பர்களில் இருவரைத் தவிர, வேறு யாரும் பெயர் தரவில்லையே? நமக்குத் தெரிந்த ஆர்வமான நண்பர்கள் சிலர் கூட மெளனமாக இருக்கின்றார்களே..என்னவாக இருக்கும் என்று எண்ணியபோது நண்பர் சிந்தாநதி அழைத்து, ஏன் MPEG கோப்பாக கேட்கின்றீர்கள். செல்போனிலோ, சாதாரண வீடியோ கமெராவினாலோ படம்பிடிப்பவர்கள் அதை எப்படி MPEG கோப்பாக மாற்றுவது ? எப்படி எடிட் பண்ணுவது?
எப்படி இசை சேர்ப்பது? என நிறைய எப்படிகளை உள்ளடக்கிய அந்தப் பெரும் கேள்வியைக் கேட்டார். அடடே இது ஒரு பிரச்சினையாக இருக்கிறதா? நம்மவர்கள் எல்லோரும் ஆழ்கடலோடி முத்துக்குளிப்பவர்களாச்சே அவர்களுக்குத் தெரியாததா? என்றிருந்து விட்டேனே, முடிந்தவரைக்கும் , தெரிந்ததை சொல்லப் பார்க்கின்றேன் என்று சொல்லியபின் எழுதியது இவை.
உங்கள் கைத்தொலைபேசி கமெராவாலோ( 2 மெகாபிக்சலுக்கு குறையதிருப்பின் தெளிவாக இருக்கும்) வீடியோ கமெராவினாலோ படம் பிடித்ததை வெட்டி ஒட்டி, விரும்பிய வண்ணமாய் தொகுக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு ஒரு இலகு மென்பொருள் இருந்தால் உதவியாக இருக்கும், அதுவும் இலவசமாக இருந்தால் நல்லது என்று எண்ணுகின்றீர்கள், அப்படித்தானே ?
நீங்கள் படம் பிடித்ததைக் கணனியில் பதிவு செய்து கொள்ளுங்கள். பின் இந்தத் தளத்திற்கு சென்று MPEG File ஆக மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் கைத்தொலைபேசியில் படம் பிடித்திருந்தால், அநேகமாக அவை 3 GP கோப்புக்களாக இருக்கும். எந்தவிமான வீடியோ பைல்களையும், இந்தத் தளத்தில் கிடைக்கும் மென் பொருளின் உதவியோடு MPEG கோப்பாக மாற்றிக் கொள்ளலாம்.
பின்னர் இந்தத் தளத்தில் கிடைக்கும் மென்பொருளின் உதவியோடு, படத்தொகுப்பு வேலைகளைச் செய்யலாம். இசை சேர்த்துக் கொள்ளலாம்.
நீங்கள் வீடியோ கமெராவினால் படம்பிடித்திருந்தால், அவை Avi கோப்புக்களாக கணனியில் சேமிக்கப்படும். அவற்றை நேரடியாக படத்தொகுப்பில் இணைத்துக்கொள்ளுங்கள். பின் எல்லாவேலைகளும் முடிந்தபின் முதலில் குறிப்பிட்ட தளத்தில் கிடைக்கும் மென்பொருள் உதவியுடன் MPEG கோப்பாக மாற்றிக்கொள்ளுங்கள்.
மேலே நான் சுட்டிய இரு தளங்களும் சற்று இலகுவாக இயங்குபவையாகவும், சற்று அதிக வசதிகளுடனும், இலவசமாகக் கிடைக்கின்றன. இவை தவிர இணையத்தில் மேலும் பல தளங்கள் இருக்கின்றன. உங்களால் முடியுமாயின் அவற்றின் உதவியோடும் செய்யலாம்.
இனி என்ன? முயற்சியுங்கள். முடிந்துதும் அனுப்பி வையுங்கள். போட்டி முடிவுத்திகதி 30.05.07 வரை நீடிக்கப்பட்டுள்ளது. முதலில் உங்கள் பெயர்களைப் பதிவு செய்யுங்கள் நண்பர்களே!
பதிவு செய்ய:- ganam.team@gmail.com
எழுதத் தூண்டிய நண்பர் சிந்தாநதிக்கு நன்றிகள் _/\_
Posted byமலைநாடான் at மதியம் 2:50 0 comments
Labels: அறிவித்தல்
குறும்படப்போட்டி - மீள் அறிவிப்பு
திங்கள், ஏப்ரல் 30, 2007
வணக்கம் நண்பர்களே!
ஊடகத்துறையும், தொலைத்தொடர்பும், வளர்ந்துள்ள இந்தக்காலப்பகுதியில், நாமும், நமது சமூகம் சாரந்து, அதைச் சரிவரப் பன்படுத்தி பலன்பெறலாமே எனும் நல்நோக்கோடு, இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சியைத் தயாரித்துவழங்கும் கானம் கலைக்கூடமும், இணையப்பரப்பிற்கு வெளியேயுள்ள சில நண்பர்களும் இணைந்து, இப்போட்டியை நடாத்துகின்றார்கள். போட்டியில் தெரிவாகும் முதல் மூன்று படங்களுக்கு, சிறப்புப் பரிசுகள் வழக்கபடும். இதற்குத் தொடர்பாளானாக நான் செயற்படுகின்றேன்.
எல்லோர்க்கும் எட்டாக்கனியாக இருந்த பல தொழில்நுட்பங்களும், விஞ்ஞானத்தின் அபரிமித வளர்ச்சியால், இலகுவாக எம் பாவனைக்கு வந்துள்ளது. இந்தவகையில், கருத்தைக்காட்சியாகத் தரும் ஒளிப்படத் துறைசார்ந்த பல்வேறு வடிவங்களில், குறும்படம் எனும் பகுப்பு எங்கள் ஆர்வங்களுக்கு வடிகாலாக வருகிறது. இரண்டுவரிகளில் இணையற்ற கருத்துக்களை வழங்கும் தமிழ்மறையாம் திருக்குறளினைப் போன்று, மிகக்குறைந்த நேரத்தில் கருத்தை வலியுறுத்தும் இவ்வடிவத்தில் நடாத்தப்படும் இப்போட்டியை குறள்படப்போட்டி என விழித்தோம்.
இதில் நீங்கள் கூடக்கலந்துகொள்ளலாம். உங்களிடம் எண்ணமும் விருப்பும் இருக்கிறது. ஆனால் ஒளிப்படக்கருவியெல்லாம் இல்லை என ஏங்குகின்றீர்களா? உங்களிடம் தெளிவுறப் படம்பிடிக்கக்கூடிய கருவியுள்ள செல்லிடத்தொலைபேசியிருந்தால், அதன் மூலம் கூடப் படமாக்கி, முயற்சிக்கலாமே. இதைப் படமாக்கவும், தொகுக்கவும், கொஞ்சம் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும். தேவையான சில மென்பொருட்கள் (உதாரணமாக: தொலைபேசியில் எடுக்கும் படங்களை கோப்புக்களாக மாற்றுவதற்குரிய மென்பொருட்கள்)இணையத்தில் இலவமாகவே தரவிறக்கம் செய்யமுடியும். இன்னும் என்ன தாமதம் உடனே உங்கள் பெயர்களை முலில் பதிவு செய்யுங்கள். பின் படைப்பினை அனுப்புங்கள். எல்லாம் ஒரு முயற்சிதானே..?
தலைப்பு: வானமே எல்லை. உங்களுக்கு விருப்பமான எந்தவொரு
விடயத்தைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால் அவை எமது
சமூக முன்னேற்றங் குறித்ததாகவிருப்பது விரும்பத்தக்கது.
அரசியல், பாலியல்உறவு, சம்பந்தமான கருப்பொருட்கள்
உள்ளடக்கிய படைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
நேரம்: 1 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.
கோப்பு: MPEG கோப்புக்களாகவும் 5 MB மேற்படாதவகையிலும்
போட்டி முடிவுத் திகதி: 30.05.2007 க்கு முன் படைப்புக்கள் அனுப்பி
வைக்கப்படவேண்டும்.
போட்டி முடிவுகள்: 14.06.007 அறிவிக்கப்டும்.
படைப்புக்கள் யாவும், முடிவுத்திகதிக்கு முன்னதாக மின்மடல் மூலம் அனுப்பி வைக்கவேண்டும். ஒருவர் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். படைப்புக்கள் முன்னர் எங்காவது வெளியிடப்பட்டதாக இருக்கக் கூடாது. போட்டியில் கலந்துகொள்ளத் தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும், கானம் கலைக்கூடத்தினரால் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும். அதற்கான ஒப்புதலுடனேயே, படைப்பாளர் தமது படைப்புக்களை அனுப்ப வேண்டும். போட்டி குறித்த எந்தவொரு நேர்முகத்தொடர்புகளும் மேற்கொள்ளப்படமாட்டாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
நீங்களும் பதிவு செய்யலாமே...
peter selvaraj
ruban thanam
SABESAN THANGATHURAI
kathiravetpillai mohanadas
Sharveswara Rahulnath
arunasalam chandaramohan
Sundar rajan
sriekantharaja yogaraj
saravana veluswamy
blog biththan
Trichy-Ao
Chandra sekaran
panchaligam sajeerthan
Keerthi
Posted byமலைநாடான் at இரவு 9:39 4 comments
Labels: அறிவிப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 14
ஞாயிறு, ஏப்ரல் 29, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய "இணையத்தில் இன்பத்தமிழ்" வாராந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
இணையப்பரப்பில் தமிழின் பயன்பாடென்னும் தொடர்சிந்தனைப் பகுதியில், முனைவர் நா. கண்ணன் அவர்கள் வழங்கிய இணையத்தமிழைக் கணனியில் எழுதும் முறைபற்றிய உரையாடலின் இறுதிப்பகுதி.
ஈழத்துக் கவிஞர் சேரன் அவர்களின் கவிவரிகளில் உருவான பாடல்.
இவ்வார அறிமுகத்தில், ஈழத்தில் பிறந்து, புலத்தில் தமிழால் கலைகளும், கவிதைகளும் படைக்கும் இளைஞி நித்தியா அவர்களும், அவரது சுடுவானம் வலைப்பதிவும் . கூடவே நித்தியாவின் அழகான குரலில் வரும் அருமையான அவரது கவிதைகளும். கவிதைகளை நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ள அனுமதி தந்த நித்தியாவிற்கு நன்றி.
இவ்வார நிகழ்ச்சியினை அலங்கரிக்கின்றன.
நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவிய நண்பர்கள் அனைவர்க்கும் , அதுபோல் நிகழ்ச்சி குறித்து கருத்துக்கள் தந்து நெறிப்படுத்தும் நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.
நிகழ்ச்சியைக் கேட்க :-
இணையத்தில் இன்பத்தமிழ் 14.mp... |
இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையில் உள்ள செயலியும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at மாலை 7:06 5 comments
Labels: ஒலிபரப்பு
இவர் என்ன சொன்னார் ?
புதன், ஏப்ரல் 25, 2007
ஏதாவது புதிதாக முயற்சிக்கலாமே என்ற எண்ணத்தில் பிறந்தது இவ் ஒளிப்பதிவு. அசைபடத்தில் முயற்சிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே எண்ணியிருந்தேன். படத்தில் வருபவர் பலாலியில் நிற்கிறார். அவர் என்ன சொன்னார் என்பது, புலிகளின் விமானச் சத்தத்தில் எனக்குக் கேட்கவில்லை. உங்களுக்கு கேட்டிருந்தால், அல்லது உங்களால் ஊகிக்க முடிந்தால் சொல்லுங்களேன்.
இது ஒரு பரீட்சார்த்த முயற்சி.
Posted byமலைநாடான் at இரவு 9:37 10 comments
Labels: ஒளிப்பதிவு
இணையத்தில் இன்பத்தமிழ் 13
ஞாயிறு, ஏப்ரல் 22, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய, "இணையத்தில் இன்பத்தமிழ்"வாரந்திர நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
இணையத்தமிழ் தொடர்பான சிந்தனைத் தொடரில், கணினியில் தமிழில் எழுதுவது பற்றிய முனைவர் நா.கண்ணன் அவர்களின் ஒலிப்பத்தியின் மூன்றாம் பகுதி,
தமிழ்நதியின் கடவுளும் நானும் கவிதை,
இவ்வார அறிமுகத்தில், அவுஸ்திரேலியாவிலிருந்து வலைப்பதிவு செய்யும், பதிவர்: கனக. சிறிதரன் அவர்களும், அவரது தமிழ்வலையின் மினி நூலகம் வலைப்பதிவும், பற்றிய அறிமுகக் குறிப்பு,
சிஞ்சாமனுசி கலையகத்தின் ஒலிக்கோப்பில், கனடாவிலிருந்து வலைப்பதிவுலகில் நன்கறியப்பட்ட பெண்பதிவராகிய, சிநேகிதியின் ஒலிப்பதிவில் வந்த இசையும் கதையும் , ஆகியன இன்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன.
நிகழ்ச்சியில் தங்கள் ஆக்கங்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்த அத்தனை நட்புள்ளங்களுக்கும் நன்றி.
நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நிகழ்ச்சியைக் கேட்க:
இணையத்தில் இன்பத்தமிழ் 13.mp... |
இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலிருக்கும் செயலியிலும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at மாலை 7:18 6 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 12
ஞாயிறு, ஏப்ரல் 15, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத் தமிழ் வானொலியில் இன்று மாலை ஒலிபரப்பாகிய, "இணையத்தில் இன்பத்தமிழ்" நிகழச்சியின் ஒலிப்பதிவிது.
இணையத்தமிழ் குறித்த தொடர் சிந்தனைப் பகுதியில், கணனியில் தமிழில் தட்டெழுத்துவது பற்றிய நா.கண்ணன் அவர்களின் உரைத்தொடரின் இரண்டாம் பகுதி.
வி.ஜே. சந்திரனின் பதிவிலிருந்து மகாகவியின் பாடல்.
இவ்வார அறிமுகத்தில் மூத்த வலைப்பதிவர் ஐயா இராம.கி அவர்களைப்பபற்றியும், அவரது வளவு வலைப்பதிவு பற்றிய சிறுகுறிப்பு.
சயந்தனின் சாரல் வலைப்பதிவிலிருந்து, ஈழத்தமிழ் அகதிகள் குறித்த இந்திய அரசு, மற்றும் ஊடகங்களின் போக்குக் குறித்த ஒரு விமர்சன நோக்கிலான உரையாடல்.
ஆகியன, இவ்வார நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.
தங்கள் பதிவுகளிலிருந்த விடயங்களை நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ள அனுமதி தந்த வலைப்பதிவு நண்பர்களுக்கும், நிகழ்ச்சி சிறப்புற அமைய உதவிய மற்றைய நண்பர்களுக்கும் நன்றி.
நிகழ்ச்சியைக் கேட்க
இணையத்தில் இன்பத்தமிழ் 12. |
இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at இரவு 10:03 6 comments
Labels: ஒலிப்பதிவு
குறும்படப்போட்டி - அறிவிப்பு
புதன், ஏப்ரல் 11, 2007
வணக்கம் நண்பர்களே!
ஊடகத்துறையும், தொலைத்தொடர்பும், வளர்ந்துள்ள இந்தக்காலப்பகுதியில், நாமும், நமது சமூகம் சாரந்து, அதைச் சரிவரப் பன்படுத்தி பலன்பெறலாமே எனும் நல்நோக்கோடு, இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சியைத் தயாரித்துவழங்கும் கானம் கலைக்கூடமும், இணையப்பரப்பிற்கு வெளியேயுள்ள சில நண்பர்களும் இணைந்து, இப்போட்டியை நடாத்துகின்றார்கள். போட்டியில் தெரிவாகும் முதல் மூன்று படங்களுக்கு, சிறப்புப் பரிசுகள் வழக்கபடும். இதற்குத் தொடர்பாளானாக நான் செயற்படுகின்றேன்.
எல்லோர்க்கும் எட்டாக்கனியாக இருந்த பல தொழில்நுட்பங்களும், விஞ்ஞானத்தின் அபரிமித வளர்ச்சியால், இலகுவாக எம் பாவனைக்கு வந்துள்ளது. இந்தவகையில், கருத்தைக்காட்சியாகத் தரும் ஒளிப்படத் துறைசார்ந்த பல்வேறு வடிவங்களில், குறும்படம் எனும் பகுப்பு எங்கள் ஆர்வங்களுக்கு வடிகாலாக வருகிறது. இரண்டுவரிகளில் இணையற்ற கருத்துக்களை வழங்கும் தமிழ்மறையாம் திருக்குறளினைப் போன்று, மிகக்குறைந்த நேரத்தில் கருத்தை வலியுறுத்தும் இவ்வடிவத்தில் நடாத்தப்படும் இப்போட்டியை குறள்படப்போட்டி என விழித்தோம்.
இதில் நீங்கள் கூடக்கலந்துகொள்ளலாம். உங்களிடம் எண்ணமும் விருப்பும் இருக்கிறது. ஆனால் ஒளிப்படக்கருவியெல்லாம் இல்லை என ஏங்குகின்றீர்களா? உங்களிடம் தெளிவுறப் படம்பிடிக்கக்கூடிய கருவியுள்ள செல்லிடத்தொலைபேசியிருந்தால், அதன் மூலம் கூடப் படமாக்கி, முயற்சிக்கலாமே. இதைப் படமாக்கவும், தொகுக்கவும், கொஞ்சம் முயற்சியும், ஆர்வமும் இருந்தால் போதும். தேவையான சில மென்பொருட்கள் (உதாரணமாக: தொலைபேசியில் எடுக்கும் படங்களை கோப்புக்களாக மாற்றுவதற்குரிய மென்பொருட்கள்)இணையத்தில் இலவமாகவே தரவிறக்கம் செய்யமுடியும். இன்னும் என்ன தாமதம் உடனே உங்கள் பெயர்களை முலில் பதிவு செய்யுங்கள். பின் படைப்பினை அனுப்புங்கள். எல்லாம் ஒரு முயற்சிதானே..?
தலைப்பு: வானமே எல்லை. உங்களுக்கு விருப்பமான எந்தவொரு
விடயத்தைப்பற்றியதாகவும் இருக்கலாம். ஆனால் அவை எமது
சமூக முன்னேற்றங் குறித்ததாகவிருப்பது விரும்பத்தக்கது.
அரசியல், பாலியல்உறவு, சம்பந்தமான கருப்பொருட்கள்
உள்ளடக்கிய படைப்புக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
நேரம்: 1 நிமிடத்திற்குள் இருக்க வேண்டும்.
கோப்பு: MPEG கோப்புக்களாகவும் 5 MB மேற்படாதவகையிலும்
போட்டி முடிவுத் திகதி: 30.04.2007 க்கு முன் படைப்புக்கள் அனுப்பி
வைக்கப்படவேண்டும்.
போட்டி முடிவுகள்: 14.05.007 அறிவிக்கப்டும்.
படைப்புக்கள் யாவும், முடிவுத்திகதிக்கு முன்னதாக மின்மடல் மூலம் அனுப்பி வைக்கவேண்டும். ஒருவர் எத்தனை படைப்புக்கள் வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம். படைப்புக்கள் முன்னர் எங்காவது வெளியிடப்பட்டதாக இருக்கக் கூடாது. போட்டியில் கலந்துகொள்ளத் தெரிவுக்குழுவினரால் தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும், கானம் கலைக்கூடத்தினரால் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும். அதற்கான ஒப்புதலுடனேயே, படைப்பாளர் தமது படைப்புக்களை அனுப்ப வேண்டும். போட்டி குறித்த எந்தவொரு நேர்முகத்தொடர்புகளும் மேற்கொள்ளப்படமாட்டாது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
இந்நிகழ்ச்சி குறித்த அறிவித்தல் சென்றவாரமே, எனது இணையத்தளத்தில் வெளியாயிற்று. நண்பர்கள் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்த் தொடங்கிவிட்டார்கள். நீங்களும் பதிவு செய்யலாமே...
Posted byமலைநாடான் at காலை 11:47 13 comments
Labels: அறிவிப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 11
திங்கள், ஏப்ரல் 9, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத்தமிழ் வானொலியில் ஒலிபரப்பாகிய " இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவிது.
இவ்வார நிகழ்ச்சியில், தமிழில் தட்டெழுத்துவது எப்படி எனும் முனைவர் நா.கண்ணன் அவர்களின் விளக்கவுரையின் முதற்பகுதி.
குரல் நடிப்பும், தென்அமெரிக்க இசைக்கோப்பும் கலந்த, இனிமையான ஒரு தமிழ் சினிமாப்பாடல்.
இவ்வார அறிமுகத்தில் லிவிங்ஸ்மைல் வித்யாவும், அவரது ஸ்மைல் பக்கமும்.
ஆகிய சிறப்பம்சங்களுடன் ஒலிக்கிறது.
நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
இணையத்தில் இன்பத்தமிழ் 11.mp... |
இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at இரவு 1:22 3 comments
Labels: ஒலிப்பதிவு
இணையத்தில் இன்பத்தமிழ் 10
ஞாயிறு, ஏப்ரல் 1, 2007
வணக்கம் நண்பர்களே!
ஐரோப்பியத்தமிழ் வானொலியில் பிரதி ஞாயிறு தோறும், ஐரோப்பிய நேரம் மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகும், " இணையத்தில் இன்பத்தமிழ் " வாராந்திர நிகழ்ச்சியின் இன்றைய ஒலிபரப்பின் ஒலிப்பதிவு இது.
இன்றைய நிகழ்ச்சியில்,
தமிழ் இணையப் பரப்புத் தொடர்பான தொடர் உரையாடலில், தேடுபொறித் தன்மை மிக்கத் தமிழ்த்தளமாகிய லங்காசிறி. கொம் , பற்றிய சிறு குறிப்பு.
இலங்கை விமானப்படை தலைமையகம் மீதான, விடுதலைப்புலிகளிக் வரலாற்றுச் சிறப்புமிக்க வான் தாக்குதல் பின்னான உணர்வலைகளுடனான கவிதை.
சிலப்பதிகாரக் கானல்வரிப்பாடல்.
இவ்வார வலைப்பதிவர் அறிமுகத்தில் சிறப்பு அறிமுகமாக, எட்டுவயதில் புலத்தி (நோர்வே) லிருந்து வலைப்பதிவு செய்து வரும், குட்டிப்பெண் அஞ்சலியின் அறிமுகமும் செவ்வியும் என்பன வருகின்றன.
நிகழ்ச்சியில் அவரது கவிதையை இணைத்துக்கொள்ள அனுமதியளித்த, பதிவர் ரேகுப்தி அவர்களுக்கும். குட்டிப் பதிவர் அஞ்சலியின் செவ்வியைப் பெற ஒத்துழைப்பு நல்கிய அவரது பெற்றோர்களுக்கும், எனைய உதவிகள் புரிந்த நண்பர்களுக்கும், மிக்க நன்றிகள்.
நிகழ்ச்சியைக் கேட்டுச் சொல்லுங்கள்.
இணையத்தில் இன்பத்தமிழ். 10.mp... |
இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டையிலுள்ள செயலியிலும் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at இரவு 8:32 5 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 9
ஞாயிறு, மார்ச் 25, 2007
வணக்கம் நண்பர்களே!
"இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார ஒலிபரப்பில் வழமைபோல் பல சுவையான நிகழ்ச்சிகள்.
தமிழ் இணையப்பரப்பில், தமிழ்வலைப்பதிவுகள், வலைப்பதிவுத் திரட்டிகள், என்பனவற்றைப்போல் முக்கியத்துவம் மிக்க, தேடுபொறித்தன்மைகள் கொண்ட முக்கிய இணையத் தளங்களில் குறிப்பிடத்தக்க இரு இணையத்தளங்கள் பற்றிய சிறு குறிப்பு,
தமிழ் ராப் இசைக்கலைஞர் சுஜித் குறித்த சிறு அறிமுகமும், அவரது புதியபாடல் ஒன்றும்,
வாரந்தர அறிமுக வரிசையில் மலேசியாவிலிருந்து வலைப்பதிவு செய்து வரும், மை ப்ரெண்ட் ( என்தோழி) டும் அவரது வலைப்பதிவும் ,
உரைச்சித்திர வரிசையில், அவுஸ்திரேலியாவில் அண்மையில் தனித்தீவில் சிறைவைக்கபட்ட ஈழத்து அகதிகள் குறித்து எழுந்த எதிர்கருத்துக்களின் மீதான சிந்தனையோட்டத்தைக் கொண்ட, பதிவர் பொட் டீக் கடை யின் வலைப்பதிவிலிருந்து பெறப்பட்ட பொருளாதார அகதிகள் சிந்தனைக்கட்டுரை.
ஆகிய நிகழ்ச்சிகள் இவ்வார நிகழ்ச்சியை அணிசேர்க்கின்றன.
நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நண்பர்களே.
நிகழ்ச்சி சிறப்புற அமைய உதவிய அத்தனை நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.
நிகழ்ச்சியின் ஒலிப்பதிவைக் கேட்க:-
இணையத்தில் இன்பத்தமிழ் 9.mp3 |
இச்செயலி இயங்காவிடத்து பக்கப் பட்டையிலுள்ள ஒலிச் செயலியிலும் கேட்கலாம்.
நண்பர்களே! இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சி ஒலிப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய, கீழேயுள்ள நிரலை, உங்கள் வார்புருக்களில் நிறுவி இணைப்புத் தரலாமே?
Posted byமலைநாடான் at மாலை 6:24 1 comments
Labels: ஒலிபரப்பு
கற்பகவல்லியும் கவிமாமணி வீரமணிஐயரும்.
சனி, மார்ச் 24, 2007
ஒலிப்பதிவுகள் செய்யத் தொடங்கிய பின் எழுத்துப்பதிவுகள் செய்வதைக் குறைத்துக்கொண்டுள்ளேன் என கானா.பிரபாவும். பாரிஸ் யோகனும் குறைப்பட்டிருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு குரல் பதிவின் மூலமே சந்திக்கின்றேன். எழுதுவதிலும் பார்க்க, வாசிப்பதில் இருக்கும் ஆர்வமே எழுதுவது குறைந்ததிற்க் காரணமேயொழிய வேறில்லை. ஏற்கனவே இப்பதிவை இட வேண்டும் எனவும், இப்பதிவினை குரற்பதிவாக இடுவதே பொருத்தமாக இருக்குமெனவும் எண்ணிருந்ததன் அடிப்படையிலேயே இது அமைகிறது. இதைப்பதிவு செய்யப் பலநாட்களுக்கு முன்னதாக எண்ணியிருந்த போதும், இன்று யோகன் சீர்காழி கோவிந்தராஜனைப் பற்றி யோகன் நினைவு கூர்ந்திருப்பதனூடு இந்தப்பதிவின் நாயகரும் எண்ணபட்டுள்ளார். இனி......
கவிமாமணி வீரமணிஐயர் " கற்பகவல்லி.." பாடல் உருவாக்க நினைவினைப் பகிர்ந்து கொள்கிறார். பார்க்க, கேட்க:
Posted byமலைநாடான் at மாலை 4:01 21 comments
இணையத்தில் இன்பத்தமிழ் 8
ஞாயிறு, மார்ச் 18, 2007
நண்பர்களே!
இன்று மாலை ஐரோப்பியத் தமிழ்வானொலியில் ஒலிபரப்பாகிய
"இணையத்தில் இன்பத்தமிழ்" இவ்வார நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு.
இவ்வார நிகழ்ச்சியில், இணையப்பரப்பில் தமிழ்வலைப்பதிவுத் திரட்டிகள் குறித்த சிறுகுறிப்பு,
வலைப்பதிவர் பொன்ஸ் வழங்கும் தந்தை குறித்த கவிதை,
ஜானகி விஸ்வநாதனின் இயக்கத்தில் வெளிவந்த கனவு மெய்ப்பட வேண்டும் திரைப்படத்தில், இடம்பெற்ற ரம்யாகிருஷ்ணனின் பாடல் என்பனவும்,
இவ்வார வலைப்பதிவு அறிமுகம் பகுதியில், யாழ்ப்பாணத்திலிருந்து வலைப்பதிவு எழுதிவரும் பகீ யின், " ஊரோடி" யின் அலட்டல்களும், ஒப்பாரிகளும் வலைப்பதிவு குறித்த சிறு குறிப்பு அறிமுகம்,
உரைச்சித்திரம் பகுதியில் சின்னக்குட்டியின் " ஊர்உளவாரம்" வலைப்பதிவிலிருந்து, நீச்சலடிப்பது குறித்த நினைவுப்பகிர்வு ஆகியன இடம் பெறுகின்றன.
இவ்வார நிகழ்ச்சியில் தங்கள் ஆக்கங்களை இணைத்துக்கொள்ள அனுமதியளித்த நண்பர்கள், பொன்ஸ், சின்னக்குட்டி, ஆகியோருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பில் உதவிய நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.
நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள் நண்பர்களே!
இணையத்தில் இன்பத்தமிழ் 8.mp3 |
இச்செயலி இயங்காவிடத்து, பக்கப்பட்டியில் உள்ள செயலியிலும் கேட்கலாம்.
நண்பர்களே!
கீழேயுள்ள நிரலை உங்கள் அடைப்பலகையில் பொருத்தமான இடத்தில் சேர்ப்பதன் மூலம், இந்நிகழ்ச்சியை உங்கள் நண்பர்களும் கேட்க, நீங்களும் உதவலாம். அப்படி நீங்கள் இணைத்திருந்தால் எனக்கு மின் மடல் மூலம் அறியத் தாருங்கள்.
நன்றி!
Posted byமலைநாடான் at இரவு 10:02 6 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 7
ஞாயிறு, மார்ச் 11, 2007
வணக்கம் நண்பர்களே!
''இணையத்தில் இன்பத்தமிழ்'' இவ்வார நிகழ்ச்சியி பதிவில் சந்திக்கின்றோம்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து கேட்டு, உற்சாகப்படுத்தி வரும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
இவ்வார நிகழ்ச்சியில், ரேகே இசைப்பாடகன் பொப் மார்லி பற்றிய சிறுகுறிப்பும், பாடலும்,
வலைப்பதிவு அறிமுகம் பகுதியில் கணிமை வலைப்பதிவும், அதனைப் பதிவு செய்கின்ற வலைப்பதிவர், ரவிசங்கர் பற்றிய சிறு அறிமுகமும், கனிமை வலைப்பதிவிற்கான இணையமுகவரி
கேரளக்கரையோரக் கிராமிய மணம் கமழும் மலையாளப் பாடல் என்பனவும், இடம்பெறுகிறது.
அடுத்தவாரம் தமிழீழத்தின் நெய்தற்கரை நினைவுகளோடு சந்திப்போம்.
இவ்வார நிகழ்ச்சிக்கு உதவி புரிந்த அனைவர்க்கும் நன்றி.
நிகழ்ச்சியைக்கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி
இணையத்தில் இன்பத்தமிழ் 7 .mp.3 |
நண்பர்களே இச்செயலி இயங்காதவிடத்து, பக்கப்பட்டியிலுள்ள செயலியில் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at மாலை 7:49 10 comments
Labels: ஒலிபரப்பு
மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
வியாழன், மார்ச் 8, 2007
மார்ச். 8ந் திகதி.
சர்வதேச பெண்கள் தினம்.
இதனைமுன்னிட்டு ஐரோப்பியத்தமிழ் வானொலியில், இன்று மாலை 07.30 மணிக்கு ஒலிபரப்பாகிய மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை இங்கே பதிவு செய்கின்றேன்.
ஒரு பெண் அறிவிப்பாளரின் குரலில் தொகுக்க வேண்டுமெனும் என் எண்ணப்பாடு, இறுதித் தருணங்களில், இயலாது போயிற்று. அதனால் நிகழ்ச்சியைச் சரியாக ஒருங்கமைக்க முடியாது போய்விட்டது.
நிகழ்ச்சியில் இனைத்துக்கொள்ள கேட்டமாத்திரத்தில், எண்ணங்களை எழுத்தில் வடித்து அருமையான ஒரு கவிதையை தந்தார் தமிழ்நதி.
அதை மட்டும் ஒரு தோழியின் குரலில் இணைக்க முடிந்தது. தமிழ்நதி மிக்க நன்றி.
அக் கவிதையின் எழுத்து வடிவத்தை இங்கே காணலாம்.
நிகழ்சித் தயாரிப்புக்கு உதவி அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்
ஒலிப்பதிவைக் கேட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சி.mp3 |
Posted byமலைநாடான் at இரவு 9:13 6 comments
Labels: சிறப்பு ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 6
ஞாயிறு, மார்ச் 4, 2007
நண்பர்களே!
இணையத்தில் இன்பத்தமிழ் வாராந்திர நிகழ்ச்சியின் இன்றையஒலிபரப்பில்,
இசைக்கலைஞர் பிரசன்னா பற்றிய சிறுகுறிப்பும், அவரது இசைக்கோலத்தின் ஒரு பகுதியும், அறுபத்தியாறு அகவையிலும் இளைஞருக்கேயுரிய சுறுசுறுப்போடு, தமிழ்ப்பணியும், சமுகப்பணியும் ஆற்றிவருகின்ற, பதிவர் ஞானவெட்டியான் ஐயாவுடனான செவ்வி, என்பன உள்ளடங்கி வருகின்றது.
நிகழ்ச்சியில் பிரசன்னாவின் இசைக்கோலத்தை இணைத்துக்கொள்ளவும், பிரசன்னா குறித்த தகவல்களைத் தந்துதவியும், சிறப்புச்சேர்ந்த நண்பர், பதிவர், அற்புதனுக்கும், எம் வேண்டுகோளுக்கினங்க தன் அனுபவங்ளை, செவ்வியூடாகப் பகிர்ந்து கொண்ட மூத்த பதிவர் ஞான வெட்டியான் ஐயா அவர்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள்.
நிகழ்ச்சி குறித்த தங்கள் மேலான கருத்துக்களைத் தாருங்கள் நண்பர்களே!
இணையத்தில் இன்பத் தமிழ் 6 |
இச்செயலியில் கேட்க முடியாவிடின், தயவுசெய்து பக்கப்பட்டியில் இருக்கும் செயலியிலும் கேட்க முடியும்.
வேகம் குறைவான, இணையத்தொடர்புவழி உள்ள நண்பர்கள் கீழேயுள்ள செயலியில் கேட்பது இலகுவாக இருக்கும்.
Posted byமலைநாடான் at இரவு 10:09 11 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 5
ஞாயிறு, பிப்ரவரி 25, 2007
நண்பர்களே!
இணையத்தில் இன்பத்தமிழ் நிகழ்ச்சிக்கு நீங்கள் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. சென்றவாரத்தில்இந் நிகழ்ச்சி, ஐரோப்பிய தமிழ் வானொலி நிலையத்தின் கலையக மாற்றத்தினால் ஏற்பட்ட, இணையவழித் தடங்கல் காரணமாக, முந்தையவார நிகழ்ச்சியே மறு ஒலிபரப்பாக நிகழ்ந்தது. அதனாலேயே, வாராந்திர நிகழ்ச்சி இங்கே பதிவு செய்யப்படவில்லை. ஆயினும் சென்றவாரத்தில், தேன்கூடு சாகரன் அவர்களின் அஞ்சலி ஒலிப்பதிவு இடம்பெற்றிருந்தது. நண்பர்கள் பலரும் அவ்வொலிப்பதிவினைக்கேட்டு, அவசியமானதொரு, ஆவணப்பதிவு என அபிப்பிராயம் தெரிவித்திருந்தார்கள். அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி.
இனி இவ்வார ஒலிபரப்புக் குறித்து.
இவ்வார நிகழ்ச்சியில் சாகரன் கல்யான் குறித்த நினைவுக்குறிப்பு.
சென்னைச் சங்கமம் நிகழ்ச்சி பற்றிய அறிமுகக்குறிப்பு, அருமையான பாடல், ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அருட்தந்தை திரு. ஜெகத் கஸ்பார் அவர்களின் எண்ணப்பகிர்வு.
மூன்று தசாப்தங்களின் முன் ஈழத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் ஒலித்த, ஈழத்துக் கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களின் புகழ்பெற்ற
'அண்ணை றைற்' ஒலிப்பதிவு. ஆகிய நிகழ்ச்சிக்கள் உள்ளடங்கி வருகின்றன.
இவ்வார நிகழ்ச்சியின் உருவாக்கதில் எம்முடன் இணைந்து கொண்ட, நண்பர் கானா. பிரபா, பதிவர் பொன்ஸ், ஆகியோருக்கும், கலந்து சிறப்பித் பெரியோர்கள் அருட்தந்தை திரு.ஜெகத்கஸ்பார் அவர்களுக்கும், கலைஞர். கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கும், இனிய நன்றிகள்.
நிகழ்ச்சியைக் கேட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
இணையத்தில் இன்பத்தமிழ் 5 |
இந்த ஒலிச்செயலி வேலை செய்யாதிருப்பின், பக்கப்பட்டியில் உள்ள ஒலிச்செயலியிலும் கேட்கலாம்.
'' சென்னைச் சங்கமம்'' நிகழ்ச்சிகள் குறித்து , இவ்வார தமிழ்மணம் பூங்காவில் வெளிவந்துள்ள சிறப்பு ஒலி, ஒளி, வடிவங்களைக் காண இங்கே அழுத்துங்கள்.
Posted byமலைநாடான் at மாலை 5:05 10 comments
Labels: ஒலிபரப்பு
சாகரசங்கமம்
சனி, பிப்ரவரி 17, 2007
இவ் அஞசலிப்பதிவில் பங்குகொண்ட நட்புள்ளங்கள்:-
பாலராஜன் கீதா, துளசி கோபால், மா.சிவகுமார், நாக.இளங்கோவன், விக்னேஷ்(விக்கி), பரஞ்சோதி, சிந்தாநதி, சிறில்அலெக்ஸ், மதிகந்தசாமி, ஆகியோர்
படங்கள் உதவி:- சிந்தாநதி
இசைக்கோப்பிலும், பிரதியாக்கதிலும் உதவி:- ஈழத்து நண்பரகள்.
நண்பரகளே!
இவ் ஒலிப்பதிவினை பிரதிசெய்து, சாகரன் குடும்பத்தினரிடம், கொடுக்கவுள்ளதாக, பாலராஜன்கீதா சொல்லியுள்ளார். ஆகவே இப்பதிவில் கருத்துச் சொல்லும் பகுதியில் சாகரனுக்கான அஞ்சலிகளை மட்டுமே பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இவ் அஞ்சலி நிகழ்ச்சி குறித்து கருத்துச் சொல்லவிரும்பும் நண்பர்கள் தயவு செய்து இங்கே உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நட்புடன்
மலைநாடான்.
சாகர சங்கமம் |
சாகர சங்கமம் |
Posted byமலைநாடான் at காலை 10:52 6 comments
Labels: அஞ்சலி
இணையத்தில் இன்பத்தமிழ் 4
ஞாயிறு, பிப்ரவரி 11, 2007
நண்பர்களே!
இணையத்தில் இன்பத்தமிழ் இவ்வார நிகழ்ச்சியில்,
இந்நிகழ்ச்சியினை வானலைக்கு ஏந்திவரும் ஐரோப்பியத் தமிழ்வானொலி க்கு இன்று மூன்றாவது அகவை. அதுகுறித்த வாழ்த்து நிகழ்ச்சி.
இணையத்தமிழ் தொடரில், தமிழ் யூனிக்கோட் எழுத்துருக்களில் பாமினி எழுத்துருவை, பொங்குதமிழ் செயலியை, சுரதா தமிழ் எழுத்துரு மாற்றி, என பல்வேறு தமிழ் இணையச்செயலிகளை வடிவமைத்து, இலவசமாகவே வழங்கியுள்ள நமது நல்லறிஞர் சுரதா குறித்த ஒரு சிறு குறிப்பு.
வலைப்பதிவுலகிலிருந்து, பதிவர், ஒலிபரப்பாளர், இலக்கிய ஆர்வலர், என பன்முகப் பரிச்சயம் கொண்ட நண்பர் கானா.பிரபா வின், மாட்டுவண்டில் எனும் வலைப்பதிவின், ஒலிப்பதிவு. அதனோடிணைந்து வரும் ஈழக்கவிஞர் நீலாவணனின் கவிவரிகளில், ஈழத்து இசை இரட்டையர் கண்ணன்-நேசம் அவர்களின் இசையமைப்பில், ஈழத்துக் கலைஞர் மா.சத்தியமூர்த்தி அவர்களின் இனிமையான குரலில், ' ஓ வண்டிக்காரா..' பாடல் என்பனவும் வருகிறது.
நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.
இணையத்தில் இன்பத்தமிழ் 4.mp3 |
இச்செயலியில் நிகழ்ச்சியைக் கேட்கமுடியாவிடின், தயவு செய்து பக்கபட்டியில் மேலேயுள்ள செயலியில் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at மாலை 7:15 24 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 3
ஞாயிறு, பிப்ரவரி 4, 2007
நண்பர்களே!
இவ்வார வானொலி நிகழ்ச்சியை இங்கே நீங்கள் கேட்கலாம்.
இவ்வார நிகழ்ச்சியில், இணையத்தமிழ் பற்றிய தொடரில், தேனி யூனிக்கோட் எழுத்துருவை, தமிழ் இணையப்பரப்பு வழங்கிய நல்லறிஞர்: தேனி உமர் பற்றிய சிறு நினைவுக்குறிப்பு..
தமிழின் முக்கியமான ஒரு மென்பொருள் எழுதுகருவியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரின், அழகிய குரலில், பாரதிபாடல்.
பதிவர், ஆழியூரானுடன் ஒரு இணைய உரையாடல். என்பன இடம்பெறுகிறது.
நிகழ்ச்சியைக் கேட்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
நிகழ்சியில் இடம்பெற்றுள்ள இணைய உரையாடலில், ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்த நண்பர் ஆழியூரானுக்கும், பாடலை மின் மடல் மூலம் அனுப்பியுதவிய, நண்பர் சிந்தாநதி அவர்களுக்கும் மிக்க நன்றி.
நண்பர்களே!
இந்நிகழ்ச்சியை வானலையில் எடுத்து வரும் ஐரோப்பியத் தமிழ் வானொலி வரும் 11.02.07 தன் சேவையில் இரண்டு வருடங்களை நிறைவு செய்கிறது. அப்பணியினைப் பாராட்டு முகமாக, அடுத்தவார நிகழ்ச்சியில் சிறிய வாழ்த்து நிகழ்ச்சியைச் சேர்த்துக் கொள்ள எண்ணியுள்ளோம். இவ்வாழ்த்து நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து கொள்ள விரும்பின், இங்கே உங்கள் வாழ்த்துக் களையும், கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்.
ஒலிபரப்பைக் கேட்க:
இணையத்தில் இன்பத்தமிழ் 3. |
Posted byமலைநாடான் at மாலை 6:21 17 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 2
ஞாயிறு, ஜனவரி 28, 2007
நண்பர்களே!
ஐரோப்பாவிலிருந்து 24 மணிநேர தமிழ்ஒலிபரப்புச் சேவையினை வழங்கிவரும், ஐரோப்பியத் தமிழ் வானொலி யில், கானம் கலைக்கூடத்தின் தயாரிப்பில், '' இணையத்தில் இன்பத்தமிழ் '' எனும் வாரந்தர நிகழ்ச்சியொன்றை சென்ற வாரத்திலிருந்து, தயாரித்து வழங்கத் தொடங்கியுள்ளதை சென்றவாரத்தில் உங்களோடு பகிர்ந்து கொண்டேன்.
இந்த வார நிகழ்ச்சியில், இணையத்தில் இன்பத்தமிழ் பற்றிய மேலதிக குறிப்புக்களுடன்,
இணையத்தில் நல்ல பல பதிவுகளையும், இணையத் தொழில் நுட்பம் குறித்த நல்ல பல தகவல்களை, அழகு தமிழில் எளிமையுறப் பதிவு செய்து வரும், தமிழ்மணத்தின் இவ்வார நட்சத்திரமாகிய சிந்தா நதி அவர்களுடைய தொழில்நுட்பம் குறித்த சிறு செவ்வி, பதிவர் மதி-கந்தசாமி அவர்கள் குரற்பதிவாகப் பதிவு செய்த, ஈழத்துக் கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவிதைப்பாடல் என்பன உள்ளடங்கி வருகின்றது. செவ்வியளித்த சிந்தாநதி அவர்களுக்கும், பதிவர் மதி-கந்தசாமி அவர்களுக்கும், மனமார்ந்த நன்றிகள்.
நண்பர்களே! கேட்டுச் சொல்லுங்கள் உங்கள் கருத்துக்களை.
இந்நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்குரிய ஒலிப்பதிவினை இங்கே கேட்கலாம்.
இணையத்தில் இன்பத்தமிழ் 2 |
நண்பர்களே! இந்த ஒலிச்செயலி இயங்காவிட்டால், மேலேயுள்ள செயலியில் கேட்கலாம்.
Posted byமலைநாடான் at மாலை 6:54 7 comments
Labels: ஒலிபரப்பு
இணையத்தில் இன்பத்தமிழ் 1
நண்பர்களே!
புத்தாண்டில் ஒரு புதிய முயற்சி. புதிய முயற்சி என்று சொல்லலாமோ எனத் தெரியவில்லை. ஆனாலும் எடுத்துக்கொண்ட விடயத்தினடிப்படையில் புதிய முயற்சி எனச் சொல்கின்றேன். புதிர் போதும்...
..விடயம் இதுதான். ஐரோப்பாவிலிருந்து 24 மணிநேர தமிழ்ஒலிபரப்புச் சேவையினை வழங்கிவரும், ஐரோப்பியத் தமிழ் வானொலி யில், கானம் கலைக்கூடத்தின் தயாரிப்பில், '' இணையத்தில் இன்பத்தமிழ் '' எனும் வாரந்தர நிகழ்ச்சியொன்றைத் தயாரித்து வழங்கத் தொடங்கியுள்ளேன்.
பிரதி ஞாயிறு தோறும் ஐரோப்பிய நேரம் மாலை 19.30 மணிக்கு, இந்நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இவ்வொலிபரப்பினை செய்மதியூடாக ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், பண்பலை வரிசைகளில், கனடாவில் ரொறன்ரொவிலும், மொன்றியலிலும், இணையவழியாக உலகம் முழுவதிலும் இவ்வொலிபரப்பினைக் கேட்கலாம்.
இந்நிகழ்ச்சியில், இணையப்பரப்பில் தமிழ்கூறு நல்லுலகம் சார்ந்த படைப்பாளர்கள், பதிவாளர்கள் பலரதும் , நல்ல படைப்புக்களை, எழுத்துக்களை, ஒலிவடிவமாக்கி வான்பரப்பில் தவழவிட முனைகின்றேன்.
அந்த வகையில் தமிழ்மணத்தில் வலைப்பதியும், சகநண்பர்கள் சிலரது படைப்புக்களை நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டபோது, மகிழ்ச்சியோடு சம்மதித்துள்ளார்கள். மேலும் சிலரிடம் கேட்கவுள்ளேன். அவ்வப்போது நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் தாங்கி வரும் படைப்புக்களை இனைத்துக்கொள்ள எண்ணியுள்ளேன். அத்தருணங்களில் நிச்சயம் படைப்புக்களைப் பதிவு செய்த நண்பர்களிடத்தில் தொடர்புகொண்டு அனுமதி பெற்றுக் கொள்வேன்.
இந்நிகழ்ச்சி மூலம், வலைப்பதிவுலகுக்கும் அப்பால் உள்ள தமிழ்மக்களிடத்தில், இணையப்பதிவுகளில் உலாவரும் சிறப்பான கருத்துக்களை கொண்டு செல்லலாம். நிகழ்சிகளின்போது வலைப்பதிவுகள் பற்றித் தெரியப்படுத்துவதன் மூலம், மேலும் பல புதியவர்கள் வலைப்பதிவுகள் பற்றி அறியவும், பதியவும், கூடும் என்றும் எண்ணுகின்றேன்.
முதலாவது நிகழ்ச்சி இன்று 21.01.07 ஞாயிறு மாலை ஒலிபரப்பானது. சென்ற வருடத்தில் இங்கே நான் பதிவு செய்த ஒரு பாடல்பதிவுடனும், நண்பர் வசந்தனின் ஒரு குரற்பதிவுடனும், இந்த முதலாவது நிகழ்ச்சி அமைந்தது. முதலாவது நிகழ்ச்சியில் இருக்கக்கூடிய குறைகள் சிலவற்றுடன், ஒலிபரப் பான அந்நிகழ்ச்சியின் ஒலிப்பதிவினை கீழேயுள்ள செயலியில், கேட்கலாம்.
நண்பர்களே! ஒலிப்பதிவினைக் கேட்டு, உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள். உங்கள் கருத்துக்கள் நிகழ்ச்சியை மேலும் செழுமைப்படுத்துமென்று நம்புகின்றேன்... செய்வீர்களா?
Inpaththamil 1.wma |
Posted byமலைநாடான் at மாலை 6:13 0 comments
Labels: ஒலிபரப்பு
வணக்கம்!
வணக்கம் நண்பர்களே!
எனது மற்றுமொரு புதிய வலைப்பூ, நெய்தற்கரை. ஈழத்தின் நெய்தற்கரையொன்றில் பிறந்தவன் நான். அந்த நெய்தல் நிலத்தின் நினைவாக இந்தப்பூவிற்கு இந்தப் பெயரை இட்டுள்ளேன். இதிலே என் ஒலி, ஒளிப்பதிவுகளை இடுவதாக எண்ணியுள்ளேன். என் ஏனைய வலைப்பூக்களுக்கும், பதிவுகளுக்கும், வந்து ரசித்து, கருத்துச் சொல்லிவருவது போல், இந்தக் கரைக்கும் வந்து கதைசெர்லிச் செல்லுங்கள்.
நன்றி!
Posted byமலைநாடான் at மாலை 5:45 10 comments
Labels: அறிவிப்பு